August 03, 2014

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-எண்ணித்துணிக-பதிவு-68




இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்-எண்ணித்துணிக-பதிவு-68

          “””பதிவு அறுபத்துஎட்டை விரித்துச் சொல்ல
                       ஈசர்பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து:

“அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து,  சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;”
                      -----மத்தேயு - 26 : 36

“பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.”
                      -----மத்தேயு - 26 : 37

“அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,”
                      -----மத்தேயு - 26 : 38

“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம்  என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.”
                      -----மத்தேயு - 26 : 39

“பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?”
                      -----மத்தேயு - 26 : 40

“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.”
                       -----மத்தேயு - 26 : 41

“அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.”
                       -----மத்தேயு - 26 : 42

“அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம்  அடைந்திருந்தது.”
                       -----மத்தேயு - 26 : 43

“அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.”
                        -----மத்தேயு - 26 : 44

“பின்பு அவர் தம்முஐடய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது.”
                        -----மத்தேயு - 26 : 45

“என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் இதோ, வந்து விட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.”
                        -----மத்தேயு - 26 : 46


நாம் செய்யக்கூடிய செயல்களை 

இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று       :    உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள்
மற்றொன்று   :  தள்ளிப்போட்டு செய்யவேண்டிய செயல்கள்

உடனடியாக செய்ய  வேண்டிய செயலுக்கும்,
தள்ளிப்போட்டு செய்ய வேண்டிய செயலுக்கும்
வேறுபாடு இருக்கிறது
இந்த வேறுபாட்டை உணர்ந்தவனால் மட்டுமே
இன்பமுற்று வாழ முடியும்
இந்த வேறுபாட்டை உணர முடியாதவனால்
இன்பமற்றுத் தான் வாழ முடியும்

எந்த செயலை உடனடியாக செய்ய வேண்டும்
எந்த செயலை தள்ளிப்போட்டு செய்ய வேண்டும் - என்று
செயலின் தன்மையை உணர்ந்து செய்பவனால் மட்டுமே
செயலால் விளையக்கூடிய
நன்மைகளை நுகர முடியும் ;
இன்பங்களை அனுபவிக்க முடியும் ;
சந்தோஷங்களை கொண்டாட முடியும் ;
சுகங்களை துய்க்க முடியும் ;
வெற்றிகளை சுவைக்க முடியும் ;
தோல்விகளை தடுக்க முடியும் ;
துன்பங்களை அழிக்க முடியும் ;
நன்மைகளை பெற முடியும் ;
தடைகளை உடைக்க முடியும் ;

செயலின் தன்மைகளையும் அதில் உள்ள உண்மைகளையும்
செயலினுள் உள்ள விளைவுகளையும்
செயல் ஏற்படுத்தும் தன்மைகளையும்
செயலை எவ்வாறு செயல் படுத்த வேண்டும் ;
எந்த நிலையில் செயல் படுத்த வேண்டும் ;
எப்பொழுது செயல் படுத்த வேண்டும் ;
எந்த காலத்தில் செயல்படுத்த வேண்டும் ;
எதனைக் கொண்டு செயல் படுத்த வேண்டும் ;
எவரைக் கொண்டு செயல் படுத்த வேண்டும் ;
எந்த முறைகளைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் ;
என்பதை உணர்ந்தவனால் மட்டுமே ,
என்பதை சிந்திப்பவனால் மட்டுமே ,
என்பதை அறிந்தவனால் மட்டுமே ,
என்பதை யோசிப்பவனால் மட்டுமே ,

செய்யும் செயல்களை திறம்பட செய்ய முடியும்.
செயலுக்குரிய நன்மையான விளைவுகளை துய்க்க முடியும்

உடனடியாக செய்ய வேண்டிய செயலுக்கும்,
தள்ளிப்போட்டு செய்ய வேண்டிய செயலுக்கும்
உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ள முடியாதவனால்
செயலின் தன்மையை உணர்ந்து,
செயலை செய்யக்கூடிய காலத்தை உணர்ந்து,
செயலுக்குள் ஒளிந்திருக்கும் விளைவை உணர்ந்து,
செயல் தரும் வெற்றிகளை உணர்ந்து,
செயலினால் விளையக்கூடிய விளைவை உணர்ந்து,
செயலினுள் உள்ள உண்மை தன்மைகளை உணர்ந்து,
செயலைச் செய்து வெற்றி பெற முடியாது.

சிறுநீர் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல்
உடலில் சேரும்போது
உடல் உபாதை ஏற்பட்டு
அதை உடனடியாக கழிக்க வேண்டுமானால்
கழித்து விட வேண்டும்
இதுதான் உடனடியாக செய்ய வேண்டிய செயல்
இதுதள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல் இல்லை

நாம் விருப்பப்படாத
நாம் விலக்கி வைத்த
நாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த
நாம் இதுசரியில்லை என்று
தள்ளி வைத்த செயல்களை
பிறர் செய்யும் போது
நம் முன் நின்று கொண்டு
நம் கோபத்தை கிளறி விடும்போது
நமக்கு கோபத்தை உண்டாக்கும் படி
செயல்களைச் செய்யும் போது
நாம் கோபப்பட்டு பேசுவதோ
செயல்களைச் செய்வதோ கூடாது

நாம் கோபப்படும் போது
எந்த செயலையும் செய்யக்கூடாது
அவ்வாறு கோபப்பட்டு செய்யப்படும் செயல்கள்
வாழ்க்கையில் தவறான விளைவுகளையோ
நமக்கு அவப்பெயரினையோ
நமக்கு துன்பத்தையோ
நமக்கு மன வேதனையையோ
நமக்கு மன அழுத்தத்தையோ
நமக்கு அழிக்க முடியாத துன்பத்தையோ
நமக்கு கழிக்க முடியாத கவலையையோ
நமக்கு மறைக்க முடியாத அவப்பெயரையோ
நமக்கு தாங்க முடியாத துயரத்தையோ
நமக்கு மட்டுமல்லாமல்
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் கொண்டு வந்துவிடும்

ஆகவே சினம் வரும் போது
எந்த செயலையும் செய்யக் கூடாது
இத்தகைய செயல்கள்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல்கள்.

உடனடியாகசெய்ய வேண்டிய செயலுக்கும்
தள்ளிப் போட்டு செய்யவேண்டிய செயலுக்கும்
நெருங்கிய தொடர்பும் உண்டு
தொடர்பு இல்லாத நிலையும் உண்டு.

உடனடியாக செய்ய வேண்டிய செயலுக்கும்
தள்ளிப்போட்டுசெய்ய வேண்டிய செயலுக்கும்
உள்ள தொடர்பு உள்ள தன்மையையும்
தொடர்பு அற்ற தன்மையையும்
உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல்
எந்த ஒன்றும் இருக்காது.
ஒன்றுக்குள் ஒன்றாயும்
ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டும்
ஒன்றிலிருந்து ஒன்று விலகியும்
ஒன்றுடன் ஒன்று இணைந்தும் தான்
எந்த ஒன்றும் இருக்குமே ஒழிய
எந்த ஒன்றும் ஒன்றுடன் ஒன்று
தொடர்பில்லாமல் தனித்து இருக்காது.

உலகில் உள்ள அனைத்துமே
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுதான் இருக்கிறது
நமக்கு தெரியாத காரணத்தினால்
நமக்கு புரியாத காரணத்தினால்
நமக்கு இதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால்
உண்மை உணர முடியாத காரணத்தினால்
அனைத்தும் பிளவு பட்டு வேறுபட்டு இருக்கிறது
என்று நினைக்கிறோம்.

எல்லா ஒன்றும்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளது

உலகத்தில் உள்ள எல்லாம்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுதான் இருக்கிறதே ஒழிய
ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இல்லை என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்ண உணவு இல்லாமல்,
உடுக்க உடை இல்லாமல்,
இருக்க இடம் இல்லாமல்,
வாழ வழி தெரியாமல்,
வாழ்வதற்கு வழி இல்லாமல்,
கண்ணீரிலும் கவலையிலும்
துன்பத்திலும் துயரத்திலும்
எத்தனையோ குடும்பங்கள் வாடிக் கொண்டிருக்கின்றன;
வருத்தத்தில் ஆழ்ந்துகொண்டிருக்கின்றன;
கவலையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன;
ஏழ்மையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன;
வாழ வழியில்லாமல் இறந்து கொண்டிருக்கின்றன;
வறுமைக் கோட்டிற்குக் கீழ் தவித்துக் கொண்டிருக்கின்றன;

பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கை
வளர்ந்து கொண்டே இருக்கிறது
வறுமை நிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
இயல்பாக இறப்பவர்களை விட 
உணவு கிடைக்காமல் பசியால் இறப்பவர்களின்
எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது.

உலக அளவில்இத்தகைய
கோர நிலை தான்
தலை விரித்து ஆடுகிறது.

இதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை
தனக்கு உணவு கிடைக்காத வரை
யாரும் பிறருக்கு உணவு கிடைப்பதில்லை என்று
வருத்தப்படுவதில்லை.
தனக்கு உணவு தடங்கலின்றி கிடைக்கும் போது
மற்றவருக்கு பசியாற உணவு கிடைக்கவில்லையே
என்று யாரும் நினைப்பதில்லை.

துன்பமும் கண்ணீரும்
தனக்கு வந்தால்தான் வலிக்கும்
மற்றவருக்கு வந்தால் வலிக்காது
என்ற மனநிலையில் தான்மனித மனம்
தவறான நிலையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

தனக்கு காயம் ஏற்பட்டால் எப்படி வலிக்குமோ
அப்படியே தான்
மற்றவருக்கும் காயம் ஏற்பட்டால் வலிக்கும் என்பதை
மனித மனம் உணர்ந்தும்
தவறு என்று தெரிந்தும்
பாவம் என்று அறிந்தும்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
பிறருக்கு கேடு செய்வதே
இத்தகைய இழிநிலை உருவாகக் காரணம்.

இத்தகைய நிலையில் நாம் கோடிக்கணக்கில்
பணத்தை செலவழித்து
செவ்வாய் கிரகத்தையும்,
வியாழன் கிரகத்தையும்,
சூரியன் போன்றவற்றையும் ஆராய்வதற்கும்,
அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும்,
அதில் மனித இனம் வாழ முடியுமா?
என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இதனை தெரிந்து கொள்வதால் என்ன பயன்
ஒரு பயனும் இல்லை.
எந்த பயனும் உண்டாகப் போவது இல்லை.
அதனால் எந்த நன்மையும்
ஒரு நன்மையும் ஏறபடப்போவதில்லை.

பூமியிலே மனித இனம் வாழ வழியில்லாமல்
இலட்சக்கணக்கில் பசியால் இறக்கும் போது
கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து
விஞ்ஞானத்தை தேவையில்லாமல் பயன்படுத்தி
காலத்தை வீணாக்கி
பணத்தை விரயமாக்கி
மற்ற கிரகங்களில் மனித இனம் வாழ முடியுமா?
என்று ஆராய்ச்சி செய்வது ஏன்?
தேவையில்லாத ஒன்றை
உபயோகப்படாத ஒன்றை
பயன்படுத்த முடியாத ஒன்றை
ஆராய்ச்சியின் பெயரால் தொடர்ந்து செய்வது ஏன்?
கோடிக்கணக்கில் பணத்தை செலவழிப்பது ஏன்?

வீணாக ஆராய்ச்சி என்ற பெயரால்
பிற கிரகங்களில் மனித இனம்
வாழ முடியுமா?
என்று ஆராய்ச்சி செய்து
காலத்தை வீணாக்குவதை விட
அந்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து
இந்த உலகத்தில்
பசியால் வாடி இறக்கும்
மனித உயிர்களை இறக்க விடாமல்
தடுத்து நிறுத்த
அந்த கோடிக்கணக்கான
பணத்தை பயன்படுத்தலாமே.

தேவையில்லாத ஒன்றுக்கு கோடிக்கணக்கான
பணத்தை செலவழிப்பதைவிட
தேவையுள்ள ஒன்றுக்கு பயன்படுத்தலாமே.

வீணாக ஆராய்ச்சி என்ற பெயரால்
பிற கிரகங்களில் மனித இனம் வாழ முடியுமா? என்று
ஆராய்ச்சி செய்து காலத்தை வீணாக்குவதை விட
அந்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து
இந்த உலகத்தில் பசியால் வாடி இறக்கும்
மனித உயிர்களை இறக்க விடாமல்
தடுத்து நிறுத்த
அந்த கோடிக்கணக்கான பணத்தை வைத்து
பயன்படுத்தலாமே.

தேவையில்லாத ஒன்றுக்கு செலவழிப்பதை விட
தேவையுள்ள ஒன்றுக்கு பயன்படுத்தலாமே
உதவாத ஒன்றுக்கு பயன்படுத்துவதை விட
உதவினால் உயிர் வாழும் உயிர்களுக்கு பயன்படுத்தலாமே.

நல்லவைகளை உணர்ந்து செய்ய வேண்டும்
உடனடியாக செய்ய வேண்டிய செயல் எது என்றும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல் எது என்றும்
உணர்ந்து சிந்தித்து செய்ய வேண்டும்.

பசியால் உணவில்லாமல்
இறக்கும் உயிருக்கு உயிர் போகாமல்
காக்க வேண்டியது
உடனடியாக செய்ய வேண்டிய செயல்.

பிற கிரகங்களில் மனித இனம் வாழமுடியுமா என்று
ஆராய்ச்சி செய்ய வேண்டியது
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல்.

ஆனால் நாம்
உடனடியாக செய்ய வேண்டிய செயலை
தள்ளிப் போட்டும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயலை
உடனடியாக செய்தும்
பெரிய தவறினை
மிகப்பெரிய குற்றத்தினை
மன்னிக்க முடியாத குற்றத்தினை
தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம்

இவைகள் தான்
உடனடியாக செய்ய வேண்டிய செயலுக்கும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயலுக்கும்
உள்ள நெருங்கிய தொடர்பு.
ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும் உறவு
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
எதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதை
ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஆராயாமல் செய்வதால் தான்
மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுகிறது.

அப்பொழுது இயேசு
அவர்களோடே கெத்செமனே
என்னப்பட்ட இடத்திற்கு வந்து
சீஷர்களை நோக்கி,
நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும்
நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி
பேதுருவையும் செபெதேயுவின்
குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு போய்
துக்கமடையவும் வியாகுலப் படவும் தொடங்கினார்.

பிதாவுக்குரியவைகளை மக்களிடம் கொண்டு செல்லவும்,
பரலோகராஜ்யத்தின் திறவு கோலை மக்களுக்கு அளிக்கவும்,
இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும்
மக்களை ஒளிக்கு கொண்டு வரவும்,
அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் மக்களை
அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லவும்,
சிந்தனையற்று சிதறிக் கிடக்கும்
ஆட்டு மந்தைகளாய் சிதறிக் கிடக்கும்
கேட்பாரற்று வறுமையில் வாடிக் கொண்டிருக்கும்
கண்ணிருந்தும் குருடர்களாய்
வாயிருந்தும் ஊமைகளாய்
காதிருந்தும் செவிடர்களாய்
புத்தி பேதலித்து உண்மை  எது என்றும்
பொய் எது என்றும் தெரியாமல்
தவறுகளின் பின்னால் சென்று
தவறுகளை சரியாக செய்து கொண்டிருக்கும்
முட்டாள் தனத்தை விதைத்து
அறிவற்றவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக
இந்த மக்களை மாற்றி வைத்திருக்கும்
சுயநல மிக்க மனிதர்களால்
இந்த சமுதாயம் பாழ்படுவதைக் கண்டு
தொடர்ந்து பாழ்படுத்திக் கொண்டே இருப்பவர்களைக் கண்டு
மனம் வெறுத்து மனம் வாடலானார் இயேசு.

அப்பொழுது அவர்
என்ஆத்துமா மரணத்துக்கேதுவான
துக்கங் கொண்டிருக்கிறது
நீங்கள் இங்கே தங்கி
என்னோடே கூட விழித்திருங்கள்
என்று சொன்னார்.

உண்மை எது என்றும்
உண்மையான ஆண்டவர் யார் என்றும்
நடந்தவை எவை என்றும்
நடந்து கொண்டிருப்பவை எவை என்றும்
நடக்கப் போகிறவை எவை என்றும்
ஆண்டவனால் சொல்லப்பட்டவை

நடந்து கொண்டிருப்பதை உணராமல்
நடக்கப் போகிறவைகளை உணராமல் இருக்கும்
மக்களின் மனநிலையைக் கண்டு மனம் வாடலானார்.
அதனால் தான் இயேசு
என் ஆத்துமா மரணத்துக்கேதுவான
துக்கங் கொண்டிருக்கிறது என்றார்.
நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்றார்
சற்று அப்புறம் போய் முகங்குப்புற விழுந்து
என்பிதாவே
இந்தப் பாத்திரம்
என்னை விட்டு நீங்கக் கூடுமானால்
நீங்கும் படி செய்யும்
ஆகிலும்
என்சித்தத்தின் படியல்ல
உம்முடைய சித்தத்தின் படியே
ஆகக்கடவது என்ற ஜெபம் பண்ணினார்.

ஜெபத்தை முடித்துவிட்டு
அவர் சீஷர்களிடத்தில் வந்து
அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு
பேதுருவை நோக்கி
நீங்கள் ஒருமணி நேரமாவது
என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா
என்றார்.

பிதாவே அனைத்திற்கும் உரியவர் நீர்
அனைத்திற்கும் காரணமானவர் நீர்
உம்மாலன்றி ஒரு நிகழ்வு கூட நடக்காது.

உம் சித்தம் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது
அப்படியிருக்கையில்
எனக்கு என்ன நிகழவேண்டும் என்பது உமக்கு தெரியும்
இந்த உடலிலிருந்து உயிர் நீங்க வேண்டும் என்பது
உமது சித்தமானால் நீங்கும் படிச் செய்யும்.

இதுவரை நடந்தவை அனைத்தும்
நடந்து கொண்டிருப்பவை அனைத்தும்
நடக்க இருப்பவை அனைத்தும்
உமக்குரியவை .
எனவே என் சித்தத்தின் படியல்ல
உமது சித்தத்தின் படியே
இந்த உடலிலிருந்து உயிர் நீங்கக் கூடுமானால்
உமது சித்தத்தின் படியே
ஆகட்டும் என்று ஜெபம் பண்ணினார்.
ஜெபம் முடித்துவிட்டு சீஷர்களை அடைந்த போது
அவர்கள் நித்திரையில் இருப்பதை கண்டார்.

நான் உங்களைவிழித்திருங்கள் என்றேன்
நீங்கள் யாரும் விழித்திருக்கவில்லை
நீங்கள் ஒருமணி நேரமாவது 
என்னுடன் விழித்திருக்கக் கூடாதா
துன்பம் உங்களை அணுகாதபடி
சோதனைகள் உங்களை நெருங்காதபடி
கவலைகள் உங்களை வாட்டாத படி
இருக்க வேண்டுமானால் ஜெபம் பண்ணுங்கள்.

ஆவி பலமுள்ளது உற்சாகமுள்ளது
மாம்சம் பலவீனமானது

உடலானது உங்களை தளரச் செய்யும்
பலவீனமடையச் செய்யும்
சோம்பல் ஏற்படச் செய்யும்
வலிகளை உண்டாகச் செய்யும்
ஆவிக்கோ அத்தகைய நிலை இல்லை.


நீங்கள் மாம்சத்தில் வாழாதீர்கள்
ஆவியில் வாழுங்கள்
நீங்கள் ஆவியில் வாழாமல்
ஆவிக்குரியதை சிந்திக்காமல்
வாழுகின்ற காரணத்தினால் தான்
மாம்சத்தில் வாழுகின்ற காரணத்தினால் தான்
நிகழப் போவைகளைப் பற்றி
எண்ணாமல் கவலைப் படாமல்
நித்திரை பண்ணுகிறீர்கள்.

நீங்கள் ஆவியில் வாழ்ந்திருந்தால்
நீங்கள் நித்திரை பண்ணி
இருக்க மாட்டீர்கள்.

என்னுடன் விழித்திருந்து செய்யக் கூடிய
உடனடியாக செய்யக் கூடிய செயல்களை விடுத்து
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய
செயலான நித்திரையை செய்கிறீர்கள்.

உடனடியாக செய்ய வேண்டிய செயல் எது என்றும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல் எது என்றும்
உணராமல் இருக்கிறீர்கள் என்றும்
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்
பிதாவே,
என் உடலிலிருந்து உயிர் பிரிவது
என் சித்தத்தின் படியல்ல
உம்முடைய சித்தத்தின் படியே என்று
மீண்டும் அதையே சொல்லி
ஜெபம் பண்ணினார்.
பிதாவே நடப்பவை அனைத்தும் உம்மாலன்றி
வேறு யாராலும் நிகழாது.

இவர்
இரண்டாந்தரம்
ஜெபம் பண்ணி விட்டு
திரும்ப வந்த போது
தன்னுடைய சீஷர்கள் மிகுந்த நித்திரை மயக்கம்
கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர்களுக்கு எது
உடனடியாக செய்ய வேண்டிய செயல் எது என்றும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயல் எது என்றும்
தெரியாமல் இருந்தது.

அப்படி அவர்களுக்கு தெரிந்திருந்தால்
அவர்கள் தூங்கி இருக்க மாட்டார்கள்.
அவர்கள் விழித்திருந்து இயேசுவின் வருகைககாக காத்துக்
கொண்டு இருந்திருப்பார்கள்.

நாளை நிகழப்போவது எது என்றும்
நிகழப் போவைகளால் இழக்கக்கூடியது எது என்றும்
இழப்பதால் அடையக் கூடிய வலி எது என்றும்
வலியினால் உணரக்கூடிய துன்பம் எது என்றும்
தெரிந்திருந்தும்
அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தது
தூக்கத்தை
உடனடியாக செய்ய வேண்டிய செயலா
என்பதை உணராமல் இருந்ததால் தான்
அவர்கள் தள்ளிப் போட்டு செய்ய
வேண்டிய தூக்கத்தை உடனடியாக செய்தார்கள்.

அவர்
மூன்றாந்தரம்
அவர்களை விட்டுப் போய்
அதே வார்த்தைகளை கூறி
இந்த உடலிலிருந்து
உயிர் பிரிவது உமது சித்தத்தின் படியே
என்று ஜெபம் பண்ணினார்.

மீண்டும் வந்து பார்த்த போது
அவர்கள் நித்திரையில் இருந்தார்கள்.

இயேசு மூன்று தரம் பிதாவிடம் ஜெபம் பண்ணி விட்டு
வந்து பார்த்த போது
அவர் சீடர்கள் ஆழ்ந்த நித்திரையிலிருந்தார்கள்.

அவர் மூன்று முறையும்
ஒரே வார்த்தைகளைக் கூறித் தான்
ஜெபம் பண்ணினார்.
என் உடலிலிருந்து உயிர் நீங்க வேண்டுமானால்
நீங்கும் படிச் செய்யும்
அது என் சித்தத்தின்படி அல்ல
உம்முடைய சித்தத்தின் படியே என்றார்.

அவர் பிதாவிடம்
தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டார்.
ஆனால் அவருடைய சீடர்கள்
இருந்த கொஞ்ச நேரத்தில்
இருக்கக் கூடிய
ஒரு சில மணித்துளிகளில்
இயேசுவினிடம் இருந்து
பெற வேண்டியவைகளை பெறாமல்
அவரிடமிருந்து அருளை ஆசியை பெறாமல்
தங்களை
இயேசுவிடம் முழுமையாக ஒப்படைக்காமல்
இயேசு எப்படி தன்னை முழுமையாக
பிதாவினிடத்தில் ஒப்படைத்தாரோ
அப்படி ஒப்படைக்காமல்
இயேசுவை முழுமையாக உணராமல்
இருந்த காரணத்தினால் தான்
செய்ய வேணடிய செயல்களை
உணராத காரணத்தினால் தான்
எந்த செயலை எப்போது செய்ய வேண்டும்
எந்த செயலை எப்போது செய்யக் கூடாது என்று
தெரியாத காரணத்தினால் தான்
செயல்களை மாற்றி செய்து
செயல்களை தவறான நேரத்தில் செய்து
தவறான செயல்களை
தவறான நேரத்தில் செய்து
சரியான நேரத்தில் தவறான செயல்களை செய்த காரணத்தினால் தான்
அவர்கள் நித்திரை பண்ணிக் கொண்டிருந்தார்கள்

நாம் சரியான நேரத்தில்
செய்யக்கூடிய செயல்களை செய்யாமல்
சரியான நேரத்தில் தவறான செயல்களை
செய்கின்ற காரணத்தினால் தான்
நாம் நிறைய விஷயங்களை இழந்து விடுகிறோம் ;
கவலையில் தோய்ந்து விடுகிறோம் ;
துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறோம் ;
வெற்றியை இழந்துவிடுகிறோம் ;
காலத்தை தவற விடுகிறோம் ;
வாழ்க்கையை வாழ்க்கையாக வாழாமல்
சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு
சின்னா பின்னாமாகிறோம்.

இயேசு
சீஷர்கள் நித்திரை பண்ணுகிறதை கண்டு
சீஷர்களை நோக்கி
இதோ மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில்
ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது எழுந்திருங்கள்
என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான்

தூங்கியது போதும் எழுந்திருங்கள் என்றார்.

நாம் உடனடியாக செய்ய வேண்டிய செயல் எது என்றும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய
செயல் எது என்றும்
தெரியாமல் செயல்களைச் செய்தோமானால்
நாம் வாழ்க்கையில் மிக உயர்ந்த விஷயங்களை
இழந்து விடுவோம்
தவற விட்டு விடுவோம்
என்கிறது பைபிள்.



திருவள்ளுவர்:
“””””எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
   எண்ணுவம் என்பது இழுக்கு””””
       ----திருவள்ளுவர்- திருக்குறள்

நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்
பின்பற்ற வேண்டியவை
கடை பிடிக்க வேண்டியவை
என்று சொல்லப்படுபவை

1. கவனித்தல்
2. கற்றுக் கொள்ளுதல்
3. ஆராய்ச்சி செய்தல்
4. முடிவுக்கு வருதல்
5. செயலை செய்யத் தொடங்குதல்

நாம் ஒரு செயலை செய்யத் தொடங்குவதற்கு முன்
அதனுடன் ஒத்த
அதனுடன் சம்பந்தப்பட்ட
அதனுடன் தொடர்புடைய
செயலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு புதிய செயலை
தொடங்க நினைக்கிறோம்
ஒரு தொழிலை ஆரம்பிக்க நினைக்கிறோம்
ஒரு வியாபாரம்
புதியதாக தொடங்க ஆசைப்படுகிறோம்
எத்தகைய ஒரு புதிய செயலை
தொடங்க நினைத்தாலும்
அதனை உடனே தொடங்க நினைக்கக் கூடாது
ஆரம்பிக்க முயலக் கூடாது.

ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்க நினைக்கிறோம்
ஒரு வியாபாரம் புதியதாக தொடங்க ஆசைப்படுகிறோம்
அதாவது ஒரு புதிய செயலை தொடங்க நினைக்கிறோம்
என்றால்
ஏற்கனவே சொன்ன ஐந்து நிலைகளை நாம் பின்பற்றினால்
நடக்க வேண்டியவை எப்படி நடக்க வைக்கலாம்
நடக்க முடியாதவைகளை எப்படி நடக்க வைக்கலாம்
நடக்க வைக்க முடிந்தவைகளை
நடக்க வைக்க முடியாதவைகளை
எப்படி நடக்க வைக்கலாம்
நமக்கு தேவையான முடிவுகளை எப்படி பெறலாம்
செயலுக்குரிய விளைவை
நாம் எதிர்பார்த்த முடிவுகளை
எப்படி பெறலாம்
செயலுக்குரிய விளைவை
நாம் எதிர்பார்த்த முடிவுகளை
எப்படி அடையலாம்
என்பதை முடிவு பண்ணுவதற்கும்
நம்முடைய சிந்தனைகளை
செயலாக்கத்தில் கொண்டு வருவதற்கும்
நம்முடைய கனவுகளை நிஜ உலகத்தில்
நடமாட விடுவதற்கும்
நம் கற்பனைகளை நாம் கைக்கொள்வதற்கும்
அடைய நினைத்தவைகளை அடைவதற்கும்
பெற நினைத்தவைகளை பெறுவதற்கும்
நம் நினைவுகளை நிஜமாக்குவதற்கும்
நாம் ஐந்து நிலைகளைப் பின்பற்றி செய்வது நன்மை பயக்கும்

நிகழ்வுகளை நிகழ்த்தி
நினைத்தவைகளைப் பற்றி
நிகழ்வுகளிலிருந்து கற்றுக் கொள்ளலாம்

முதலாவதாக
நாம் ஒரு தொழிலை
தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்
முதலாவதாக நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால்
நாம் செய்ய நினைக்கும் தொழிலை
நாம் எத்தகைய தொழிலை செய்ய வேண்டும்
என்று நினைக்கிறோமோ
அத்தகைய தொழிலை
அந்த தொழில் செய்பவர் யார் என்று பார்க்க வேண்டும்
அத்தகைய தொழிலில்
ஒரு குறிப்பிட்ட நிலையை
சரியான இலக்கை அடைந்தவர்
யார் என்று பார்க்க வேண்டும்

இரண்டாவதாக
நாம் ஆசைப்பட்டு செய்ய நினைத்த தொழிலை
அவர் எந்த அளவு செய்து உயர் நிலையை
அடைந்து இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
அத்தகையவரை கண்டு பிடித்து
அவரைக் கவனிக்க தொடங்க வேண்டும்
தெரிந்தவராக இருந்தால்
எளிதாக நெருங்கி கவனிக்கலாம்
தெரியாதவராக இருந்தால் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு
நெருங்கி சென்று கவனிக்க வேண்டும்
அவருடைய ஒவ்வொரு அசைவையும் 

தெரியாமல் கவனிக்கவேண்டும்.

நம்மை ஒருவர் கண்காணிக்கிறார் என்ற சந்தேகம்
அவருக்கே எழாமல் கவனிக்க வேண்டும்
நிதானிக்க கவனிக்க வேண்டும்
உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
பொறுமையாக கவனிக்க வேண்டும்
அவ்வாறு கவனிக்கும் போதே
அவர் தொழிலில் ஏற்படக்கூடிய
சரிவுகளை
இழப்புகளை
எவ்வாறு சமாளித்து வெளி வந்து
மீண்டும் அதே தொழிலை திறம்பட செய்கிறார் என்பதை
துவண்டு விடாமல் செய்கிறார் என்பதை
கஷ்டங்களை தாங்கிக் கொண்டு செய்கிறார் என்பதை
துன்பங்களை தாங்கிக் கொண்டு செய்கிறார் என்பதை
இழப்புகளை தாங்கிக் கொண்டு செய்கிறார் என்பதை
வலிகளை பொறுத்துக் கொண்டு செய்கிறார் என்பதை
நஷ்டங்களை ஏற்றுக் கொண்டு செய்கிறார் என்பதை
தோல்வியை சமாளித்துக் கொண்டு செய்கிறார் என்பதை
தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை
ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதை
அவர் தொழிலை செய்வதை
கவனிப்பதன் மூலம்
கற்றுக் கொள்ளலாம்.

மூன்றாவதாக
நாம் தனியாக இருக்கும் போது
ஆராய்ச்சி செய்ய வேண்டும்
அவர் அந்த தொழிலை செய்யும் போது
இழப்பு ஏற்பட்ட போதோ
கஷ்டங்கள் ஏற்பட்ட போதோ
அவமானங்கள் உண்டான போதே
சமாளித்தார்
நம்மால் அத்தகைய சூழ்நிலை
அவருக்கு ஏற்பட்ட அத்தகைய சூழ்நிலை
நமக்கு ஏற்பட்டால்  சமாளிக்க முடியுமா?
நம்மால் சமாளித்து மீண்டு எழ முடியுமா?
அவர் சுற்றுப்புற சூழ்நிலையையும்
நம்முடைய சுற்றுப்புற சூழ்நிலையையும்
அவருடைய நிலையையும்
நம்முடைய நிலையையும்
ஒப்பிட்டு நோக்கி ஆராய வேண்டும்.

நிதானமாக சிந்திக்க வேண்டும்
பொறுமையாக யோசிக்க வேண்டும்
காலம் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்
முடிந்தால்
நமக்கு தெரிந்தவர்களிடம்
நமக்கு தெரியாதவர்களிடம்
ஆலோசனை கேட்க வேண்டும்
ஆலோசனை ஆயிரம் பேரிடம் கேட்டாலும்
இறுதி முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்

ஆமாம்
ஆராய்ச்சி செய்து இறுதியாக முடிவு எடுத்து
எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் எனக்கு உண்டு
எதையும் சமாளிக்கும் திறன் எனக்கு உண்டு
என்னால் எதையும் செய்ய முடியும்
இழப்புகளால் நான் துவண்டு விட மாட்டேன்
நஷ்டங்களால் நான் சிதைவடைய மாட்டேன்
தோல்விகளால் நான் பின் வாங்க மாட்டேன்
தொடர்ந்து செல்வேன்
ஏற்றமிகு வாழ்வு என் கண்ணுக்கு எட்டும் வரை
தொடர்ந்து செல்வேன்

எது வரினும் எதிர்ப்பேன் என்ற
மன தைரியம் கொண்டு
அந்த தொழிலை கவனித்தலால்
கற்றுக் கொண்ட
ஆராய்ச்சி செய்ததன் மூலம்
நான்காவதாக
முடிவுக்கு வந்த தொழிலை

ஐந்தாவதாக
செய்யத் தொடங்க வேண்டும்
அப்படி அந்த தொழிலை
செய்யத் தொடங்கும் போது
அந்த செயலை செய்யத் தொடங்கப்படும் போது
நாம் நான்கு நிலைகளில் செய்ய வேண்டும்

1. சாம 2. தான 3. பேத 4. தண்டம்
என்ற முறைகளில் வரிசைக் கிரமமாக செய்ய வேண்டும்

நாம் எந்த தொழிலை செய்ய நினைத்து
ஆரம்பிக்கிறோமோ
அந்த தொழிலை செய்யும் போதோ
அந்த தொழிலை செய்ய நினைக்கும் போதோ
அந்த தொழிலை நடத்தும் போதோ
அந்த தொழிலை நடத்திக் கொண்டிருக்கும் போதோ
எதிர்ப்புகள் கிளம்பி விடும்
யார் ஒருவரும்
எந்த ஒருவரும்


தன்னுடைய தொழிலை
இன்னொருவர் செய்ய விரும்ப மாட்டார்
மற்றொருவர் தன்னுடைய தொழிலை செய்தால்
தன் தொழில் நஷ்டப்படும்
வருமானம் குறையும்
என்று நினைத்து
மற்றொருவர் தன் தொழிலை செய்ய விரும்ப மாட்டார்
தொழிலை செய்ய விட மாட்டார்
தடைகளை உருவாக்க முயற்சி செய்வார்
எதிர்ப்புகள் கிளம்பி விடும்.

ஒருவர் மட்டுமல்ல
பலர்  செய்யும் தொழிலை
நாம் செய்யும் போது எதிர்ப்புகள்
பல இடங்களில் இருந்து கிளம்பும்

முடிந்த அளவு எதிர்ப்புகளை
சமாளிக்க வேண்டுமானால்
எதிர்ப்புகளை உண்டாக்கும் எதிர்ப்பாளர்களை
நாம் கண்டறிய வேண்டும்.
எதிர்ப்பாளர்கள் நம்மை விட
வலிமை படைத்தவர்களாக இருந்தால்
அவர்களை எடுத்தவுடன் எதிர்க்கக் கூடாது
அவர்களுடன்
சமாதானமாக
போவதற்கு
என்னென்ன வழிமுறைகளை
கையாள வேண்டுமோ
அதை கையாள வேண்டும்.

சமானத்திற்கு நம்மை விட
வலிமை படைத்தவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
சமாதானமாக போவதற்கு
அவர்கள் உடன்பட வில்லை என்றால்
சமாதானத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்
நாம் அடுத்த முறையை கையாள வேண்டும்

தானம்
எதிர்ப்பாளர்களுக்கு எது தேவையோ
அதை செய்து கொடுக்க வேண்டும்
எது அவசியம் என்று
அவர்கள் கருதுகிறார்களோ
அதை வாங்கிக் கொடுக்க வேண்டும்

அவர்களுக்கு ஏற்றவைகளை
அவர்களுக்கு அவசியப்படுபவைகளை
அவர்களுக்கு தேவையானவைகளை
அவர்களுக்கு இன்றியமையாதவைகளை
அவர்களுக்கு எது தேவை என்று கண்டறிந்து
அதை அவர்களுக்கு
செய்து கொடுக்க வேண்டும்
அவர்களுக்கு தேவை எது என்று கண்டறிந்து
அதை வாங்கிக் கொடுக்க வேண்டும்

அவர்கள் மனம் குளிரும்படி
நினைவுகளில் பூட்டி வைத்திருப்பவைகளை
சிந்தனையில் கட்டி வைத்திருப்பவைகளை
எண்ணத்தில் தேக்கி வைத்திருப்பவைகளை
கனவுகளில் மறைத்து வைத்திருப்பவைகளை
கற்பனைகளில் எழுதி வைத்திருப்பவைகளை
மனதில் மாட்டி வைத்திருப்பவைகளை
சிந்தனையில் செதுக்கி வைத்திருப்பவைகளை
நெஞ்சத்தில் பதுக்கி வைத்திருப்பவைகளை
சொல்லாமல் மறைத்து வைத்திருப்பவைகளை
எவைகள் என்று கண்டறிந்து
அவை நம்மால் செய்ய முடியுமா என்று யோசித்து
அவர்கள் தேவை என்று நினைப்பவைகளை
நம்மால் முடிந்த அளவு செயல்படுத்தி
அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி
அவர்கள் மனம் குளிரும்படிச்
செய்ய வேண்டும்.

அவர்கள் மனம் மகிழும்படிச் செய்ய வேண்டும்
நம்முடைய செயல்கள்
அவர்கள் மனம் ஏற்றுக் கொண்டால்
அவர்கள் மனம் மகிழ்ந்தால்
அவர்கள் மனம் ஏற்றுக் கொண்டால்
நாம் நம் செயல்களை எந்தவித எதிர்ப்பும் இன்றி
திறம்படச் செய்யலாம்.
அதை அவர்கள்ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்
மூன்றாவதாக நாம் செய்ய வேண்டியது
பேதம்

பேதத்தை நாம் கையில் எடுக்க வேண்டியது தான்
எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் போது
ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை
நம்மால் சமாளிக்க முடியாது
தடுக்க முடியாது
எதிர்ப்புகள் நம்மை தடுமாறச் செய்யும்
முன்னேற்றத்தை முடக்கச் செய்யும்
சிந்தனையை தடுமாறச்செய்யும்
மனதை வாடச் செய்யும்
ஆனால் எதிர்ப்புகள் பிரிந்து வந்தால்
தனித் தனியாக வந்தால்
ஓரளவு நம்மால் சமாளிக்க முடியும்.

எதிர்ப்புகளை இல்லாமல் ஆக்கி விட்டால் அல்லது
எதிர்ப்புகளை குறைத்து விட்டால்
நம்மால் ஓரளவு சமாளிக்க முடியும்.

எதிர்ப்புகள் சேர்ந்து வருவதை விட
பிரிந்து வந்தால்
நம்மால் ஓரளவு சமாளிக்க முடியும்
எதிர்ப்புகள் சேர்ந்து வருவதை விட
பிரிந்து வருவது அல்லது
எதிர்ப்புகள் குறைந்து வருவது அல்லது
எதிர்ப்புகள் இல்லாமல் இருப்பது நல்லது.

எதிர்ப்புகளே இல்லாமல் இருப்பது என்பது இயலாத காரியம்
எதிர்ப்பகள் இல்லாமல் இருப்பது என்பதை விட
எதிர்ப்புகளை குறைப்பது என்பது
நம்மால் முடியக் கூடிய காரியம்
எதிர்ப்புகளை குறைப்பது என்பது
எதிர்ப்பாளர்களை குறைப்பதற்கு சமம்.

எதிர்ப்புகளை குறைக்க வேண்டுமென்றால்
எதிர்ப்பாளர்களை குறைக்க வேண்டும்
எதிர்ப்பாளர்களை குறைத்துவிட்டால்
எதிர்ப்புகள் குறைத்துவிடும்.

எதிர்ப்புகள் குறையும் போது
நம் எதிர்ப்பார்ப்புகள் நடை பெறுவதற்கான
வழி முறைகள் ஏற்படும்.

எதிர்ப்புகளை ஏற்படுத்தும் எதிர்ப்பாளர்களை
நம்மால் குறைக்க முடியாது
எதிர்ப்பாளர்களை நேரடியாக செயலில் பட்டு
எதிர்ப்புகளை குறைக்க முடியாது.

எதிர்ப்பாளர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகளை
குறைக்க வேண்டுமென்றால்
எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்
எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென்றால்
எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்துவரக்கூடாது
எதிர்ப்பாளர்கள் ஒன்றாக இருக்கக் கூடாது
எதிர்ப்பாளர்கள் ஒன்றாகஇருக்கும் வரை
எதிர்ப்புகள் அதிகமாகத் தான் வரும்
எதிர்ப்பாளர்களை பிரித்து விட்டால்
ஒன்றாக இருக்கும் எதிர்ப்பாளர்களை பிரித்து விட்டால்
எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டால்
எதிர்ப்புகள் குறைத்து விடலாம்.

ஒன்றாக இருக்கும் எதிர்ப்பாளர்களை
பிரித்து விட வேண்டுமென்றால்
அவர்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும்
கருத்து வேற்றுமையை உருவாக்க வேண்டும்
ஒற்றுமையை குலைக்க வேண்டும்.

ஒன்றாக இருந்து செயல்படக் கூடிய
தன்மையை அழித்து விட்டால்
ஒரே எண்ணத்துடன் இணைந்து
செயல்படக் கூடிய குணத்தை மாற்றி விட்டால்
ஒரே குறிக்கோளுடன் இருந்து செயல்படக்கூடிய
செயல்களை செய்ய விடாமல் தடுத்து விட்டால்
ஒற்றுமையாக இருந்து
நமக்கு எதிராக செயல்படக்கூடிய
சிந்தனையை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டால்
தங்களுக்குள்ளேயே கருத்து ஒற்றுமை இல்லாமல்
சண்டை போட்டுக் கொள்ளும் நிலைமையை
உருவாக்கி விட்டால்
தங்களுக்குள்ளேயே பேதத்தை ஏற்படுத்தி
ஒருவருக்குள்ளேயே வசைமாரி பொழியும் நிலைமையை
உருவாக்கி விட்டால்
எதிர்ப்பாளர்கள் ஒன்றாக இணைந்து
நம்மை எதிர்க்கக்கூடிய செயல்களை
உருவாக்கும் சிந்தனையை சிந்திக்க விடாமல்
அவர்களுக்குள்ளேயே
ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும்
நிலைமையை உருவாக்கி விட்டால்
நம்மால் முடிந்த அளவு
எதிர்ப்புகள்இன்றி சுதந்தரமாக செயல்பட முடியும்
எதிர்ப்புகள் குறைய வேண்டுமென்றால்
எதிர்ப்பாளர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புகள்
குறைவாக இருக்க வேண்டுமென்றால்
ஒன்றாக இருக்கும் எதிர்ப்பாளர்களிடையே கருத்து
வேற்றுமையை உருவாக்கி
எதிர்ப்பாளர்களை பிரித்து விட்டால்
முடிந்தால்
எதிர்ப்பாளர்களை நமக்கு நண்பர்களாக்கிவிட்டால்
நமக்கு எதிர்ப்பாளர்களிடமிருந்து
வரக்கூடிய எதிர்ப்புகளை குறைக்க முடியும்
எதிர்ப்பாளர்களிடமிருந்து வரக்கூடிய
எதிர்ப்புகளை குறைக்க
எதிர்ப்பாளர்களிடையே கருத்துவேற்றுமையை
உருவாக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

எதிர்ப்பாளர்களிடதிருந்து வரக்கூடிய
எதிர்ப்புகளை குறைக்க எதிர்ப்பாளர்களிடையே
கருத்து வேற்றுமையை உருவாக்க வேண்டும்
என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்

மூன்று நிலைகளிலும் நாம் நம்முடைய
குறிக்கோளை நிறைவேற்ற முடியவில்லை எனில்
நம் எண்ணங்களை செயல்படுத்த முடியவில்லை எனில்
நம் குறிக்கோளுக்கான இலக்கை அடைய முடியவில்லை எனில்
முடியாத பட்சத்தில் மட்டுமே
நான்காவது நிலைக்கு செல்ல வேண்டும்.

பெரும்பாலானவை மூன்றாவது
நிலைக்குள்ளேயே முடிந்து விடும்
பெரும்பாலும் நான்காவது நிலைக்கு
செல்ல வேண்டிய அவசியம் ஏறபடாது.
நான்காவது நிலையை கையில் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது
நான்காவது நிலையை
பின்பற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாது.

எளிதாக முடிய வேண்டிய
செயல்களை தவிர்த்து
எதிர்ப்புகளை மீறி செய்ய வேண்டிய செயல்களுக்குத் தான்
ஆதாயம் அதிகம் உள்ள செயல்களுக்குத்தான்
அதிகாரம் அதிகம் கிடைக்கும் செயல்களுக்குத்தான்
புகழ் அதிகமாகக் கிடைக்கக் கூடிய
செயல்களுக்குத்தான்
பதவியின் மூலம் செல்வாக்கு அதிகம்
கிடைக்கக் கூடிய செயல்களுக்குத் தான்
நாம் தவிர்க்க முடியாத நிலையில் தான்
நாம் நான்காவது நிலைக்குத் செல்ல வேண்டும்.

தண்டம்
என்பது விரோதியாக நினைப்பவர்களிடம் நேரடியாக மோதுவது
எதிர்ப்பாளர்களிடமிருந்து வெளிக் கிளம்பும்
எதிர்ப்புகளை களையவேண்டுமானால்
மூன்று நிலைகளிலும் மேற்கொண்ட முயற்சி
தோல்வியடையும் போது மட்டுமே
நான்காவது நிலைக்கு செல்ல வேண்டும்.

எதிர்ப்பாளர்களிடமிருந்து
எதிர்ப்புகள் கிளம்புகிறதே என்பதற்காகவும் ;
எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை என்பதற்காகவும் ;
விரோதிகள் அழிய வேண்டும் என்பதற்காகவும் ;
எதிர்ப்பாளர்கள் எதிர்ப்புகளை நம் மேல்
பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும் ;
மறைமுக சவால்களை சமாளிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எடுத்த எடுப்பிலேயே
நான்காவது நிலையை பயன் படுத்தக்கூடாது.

விரோதியிடம் நேரடியாக மோதுவது என்பது
இறுதி கட்ட முடிவாக இருக்க வேண்டும்.

நான்காவது நிலை என்பது
வெற்றியையும் கொண்டு வரும் அல்லது
தோல்வியையும் கொண்டு வரும்
எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

எதற்கும் தயாரான நிலையில்
எதனையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்
இருக்கும் போது மட்டுமே
நான்காவது நிலைக்கு ªச்ல்ல வேண்டும்.

ஒரு தொழிலை நடத்தும் போது அல்லது
ஒரு செயலை செய்யும் போது
நாம் நான்கு நிலைகளை மேற்கொண்டு
செய்ய வேண்டும்.

இந்த உலகத்தில் உள்ள அனைவரும்
இந்த நான்கு நிலைகளை தங்களுக்கு
தெரியாமலேயே பயன் படுத்தி வருகின்றனர்.

தொழில் மட்டுமல்ல
அரசியல்
படிப்பு
விளையாட்டு
கல்வி
குடும்பம்
என்று பல்வேறு தரப்பட்ட நிலைகளில்
பல்வேறு தரப்பட்ட மனிதர்கள்
இந்த 4 நிலைகளை வரிசையாகவோ அல்லது
ஒன்றுக்குப் பின் ஒன்று
என்ற நிலையை மாற்றியோ பயன்படுத்தி வருகின்றனர்.

ஆக மொத்தம்
உலகில் உள்ள அனைவருமே
சற்று நிதானமாக நின்று யோசித்து பார்த்தார்களானால்
இந்த நான்கு நிலைகளைத் தான்
தாங்களே அறியாமல் பயன்படுத்தி வருகின்றனர்
என்பதை புரிந்து கொள்வார்கள்.

ஒரு செயல் செய்யத் தொடங்குவதற்கு முன் செய்ய
வேண்டிய 5 நிலைகளையும்,
ஒரு செயலை செய்யத் தொடங்கிய பிறகு
செய்ய வேண்டிய 4 நிலைகளையும்,
புரிந்து கொண்டு செயலைச் செய்ய வேண்டும்.

செயலைச் செய்ய வேண்டிய நிலையில்
ஒரு கேள்வி எழும்பும்
அது தான்
அந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்பது?
ஒரு செயலை எப்போது செய்ய வேண்டும்
என்று கேள்வி எழுந்து விட்டால்
அதற்கான பதில் தான்
உடனடியாக செய்ய வேண்டிய
செயலா அல்லது
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயலா என்பது
உடனடியாக செய்ய வேண்டிய செயலானாலும்
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயலானாலும்
யோசித்துத் தான் செயலைத் தொடங்க வேண்டும்
யோசனையில்லாமல் எந்த செயலையும் தொடங்கக் கூடாது.

ஒரு செயலை தொடங்குவதற்கு
முன் 1000 முறை அல்லது
இலட்சம் முறை யோசிக்க வேண்டும்
செயலில் இறங்கி விட்டால்
ஏன் இந்த செயலை தொடங்கினோம்
என்று யோசிக்கக் கூடாது
அப்படி யோசிப்போமேயாகில்
அது குற்றமாகும்
என்கிறார் திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :

நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்
அச் செயல் உடனடியாக செய்ய வேண்டிய செயலாஅல்லது
தள்ளிப் போட்டு செய்ய வேண்டிய செயலா
என்று நன்கு ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்
செயலைச் செய்த பிறகு யோசிப்பதால் ஒரு பலனும் இல்லை
என்கிறது பைபிள்

அவ்வாறே,
திருவள்ளுவரும்,
ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்
ஆயிரம் முறை சிந்தித்த பிறகே
செயலைச் செய்ய வேண்டும்
செயலைச் செய்த பிறகு யோசிப்பதால் ஒரு பலனும் இல்லை
என்கிறார்


””””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
              போற்றினேன் பதிவு அறுபத்துஎட்டு ந்தான்முற்றே”””

No comments:

Post a Comment