March 09, 2016

(1) - இயேசு கிறிஸ்து-அகத்தியர்-உண்ணும்போது-பதிவு-75- (பாகம்-1)



இயேசு கிறிஸ்து-அகத்தியர்-உண்ணும்போது-பதிவு-75- (பாகம்-1)

           """"பதிவு எழுபத்துஐந்தை விரித்துச் சொல்ல
               ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்"
                                  -------யோவான் - 20 : 19

"அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்
                                 -------யோவான் - 20 : 20

"இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,"
                                -------யோவான் - 20 : 21

"அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்;"
                                 -------யோவான் - 20 : 22

"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்"
                                -------யோவான் - 20 : 23

"இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை."
                                -------யோவான் - 20 : 24

"மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்."
                               -------யோவான் - 20 : 25

"மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்: தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்."
                               -------யோவான் - 20 : 26

"பின்பு அவர் தோமாவை நோக்கிநீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்."
                                 -------யோவான் - 20 : 27

"தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்."
                                -------யோவான் - 20 : 28

"அதற்கு இயேசு: தோமாவேநீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்."
                              -------யோவான் - 20 : 29


நம்மைச் சுற்றி ஒரு செயல் நடைபெறும்போது
அதை உற்று நோக்கினால்
அது இரண்டு விதமான தன்மைகளைத்
தன்னுள் கொண்டிருப்பதைக் காணலாம்

             ஒன்று : தேவையுடைய செயல்
    இரண்டு : தேவையற்ற செயல்

நம்மைச் சுற்றி பல்வேறு விதமான செயல்கள் நடைபெற்றாலும்
அந்த  செயல் தேவையுடைய செயலா அல்லது தேவையற்ற செயலா
என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே
ஒரு செயலில் உள்ள உண்மைத் தன்மையைப் பற்றி
புரிந்து கொள்ள முடியும்.

ஒரு செயல் தேவையுடைய செயலாதேவையற்ற செயலா
என்பது அவரவர் மன நிலையைப் பொறுத்து மாறுபடும்.

செயலைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவரவர்
சிந்தனையைப் பொறுத்தும்; அனுபவத்தைப் பொறுத்தும்;
அறிவைப் பொறுத்தும்; புத்தியைப் பொறுத்தும்; மாறுபடும்.

ஒரு செயல் தேவையுடைய செயலா
தேவையற்ற செயலா என்பதைத் தீர்மானிக்கும்
ஒருவரால் மட்டுமே சமுதாயத்தின் மீது
அக்கறை கொண்டவராகவும்,
அறிவில் உயர்நிலை அடைந்தவராகவும்,
வாழ்வில் சிறப்புநிலை அடைந்தவராகவும்,
அனுபவத்தில் வியக்கும் நிலை அடைந்தவராகவும்,
தன்னலம் அற்றவராகவும்,
பொதுநலம் கொண்டவராகவும்,
சமுதாயத்தில் நிலவி வரும் இழிவுகளை எதிர்ப்பவராகவும்,
குறைகளை சுட்டிக் காட்டுபவராகவும்,
தவறுகளை ஏற்றுக் கொள்ளாதவராகவும், இருப்பார்.

சமுதாயம் எப்போதுமே இரண்டு மாறுபட்ட கருத்துக்களை
தன்னுள் கொண்டிருக்கிறது.
தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்றும்
தேவையற்ற செயலை தேவையுடைய செயல் என்றும்
தன்னுடைய அறிவுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்கிறது.

தனக்கு பலனளிக்கும் என்றால் தேவையற்ற செயலை
தேவையுடைய செயல் என்றும்,
தனக்கு பலனளிக்கவில்லை என்றால் தேவையுடைய செயலை
தேவையற்ற செயல் என்றும்,
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றபடி
மாற்றிக் கொள்கின்றனர்.

எது தேவையுடைய செயல்
எது தேவையற்ற செயல் என்பதை 
பலராலும் தீர்மானிக்க முடியாமல்
தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்றே
நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தேவையுடைய செயலை
தேவையற்ற செயல் என்று நினைத்து விட்ட காரணத்தினால்
பெரும்பாலானர்களால்
தேவையுடைய செயல் எது என்று  உணர முடியாமல்
தேவையுடைய செயலை தேவையற்ற செயல் 
என்று தீர்மானிக்கின்றனர்.

சமுதாயத்தில் நடைபெற்று வரும் ஒரு செயலை
தேவையுடைய செயலா
தேவையற்ற செயலா என்பதை தீர்மானிக்க முடியாமல்
தேவையுடைய செயலை தேவையற்ற செயலாக எண்ணி
தேவையுடைய ஒரு செயலை தேவையற்ற செயல்
என்று தவறாக எண்ணி அதை சமுதாயத்தில்
அனைவர் மனதிலும் தேவையற்றது என்பதை
விதைக்க ஆரம்பித்து விட்டனர்.

அதனால் சிந்திக்கும் திறனுடையவர்களும் தேவையுடைய செயலை
தேவையற்ற செயலாக இருக்குமோ என்று
யோசிக்கத் தொடங்கி வருகின்றனர்.

பெரும்பாலானர்கள் மனதை பாழ்படுத்தி
சிந்திக்கும் திறனை இழக்க வைத்து தேவையுடைய செயலை
தேவையற்ற செயலாக எண்ண வைத்து விட்டனர்

நிகழ்வு-1
நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்
குடி தண்ணீர் பிடித்து வைத்திருக்கும்
பாத்திரத்தின் பக்கத்தில் குடிதண்ணீரை குடிப்பதற்காக உபயோகப்படுத்தும் குவளை ஒரு கயறாலோ அல்லது
சங்கிலியினாலோ கட்டிவைத்திருப்பார்கள்;

இதை பார்க்கும் பலர் குவளையை
யார் தூக்கி போவார்கள் என்று கட்டி வைத்திருக்கிறார்கள்;
இந்த குவளையை திருடிக் கொண்டு  போய்  கோட்டையா கட்ட முடியும்
திருடர்கள் திருடிக் கொண்டு போய் விடுவார்கள் என்ற
நினைப்பில் தான் கட்டி வைத்திருக்கிறார்கள்;
நாடு ரொம்ப கெட்டு விட்டது என்று  பேசுவார்கள்;

குடி தண்ணீரை குடிப்பதற்காக
ஒரு குவளை ஒரு சங்கிலியினால் கட்டி வைக்கப்பட்டிருப்பதை
பார்க்கும் பலர் இப்படித் தான் பேசுவார்கள்
அவர்கள் சிந்தனையைப் பொறுத்து அவர்கள்
சிந்தனை வேறுபடுகிறது மாறுபடுகிறது.

நன்றாக ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமேயாகில்
அதில் உள்ள உண்மைத் தன்மை புரியும்
சில உண்மைத் தன்மைகள்
நமக்கு புரியாத காரணத்தினால் தான்;
நமக்கு தெரியாத காரணத்தினால் தான்;
நாம் அறியாத காரணத்தினால் தான்;
நாம் உணராத காரணத்தினால் தான்;
உன்னதமான ஒரு காரியத்திற்காக
வைக்கப்பட்ட ஒரு செயலானது
கொச்சைப் படுத்தப்பட்டு விட்டது என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் ஒரு செயலில் உள்ள உண்மைத்தன்மை
புரியாத காரணத்தினால் தான் உன்னதமான ஒரு செயலை
தேவையற்ற செயல் என்கிறோம்.

தாகம் என்று வரும் ஒருவர்
தாகத்தால் உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒருவர்
பசியின் வலி தாங்க முடியாமல் நீர் அருந்த வரும் ஒருவர்
அவ்வாறு வரும் ஒருவர்
குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குவளையைத் தேடினால்
அது கிடைக்க வில்லை எனில் பசி உயிர் போய்விடும்.

தாகம் என்று ஓடிவரும் ஒருவர் தாகத்தை தீர்ப்பதற்காகவும்
தண்ணீருக்காக வரும் ஒருவர்
தாகம் தீர்க்க வேண்டும் என்பதற்காகவும் தான்
குவளை கட்டி வைக்கப்பட்டிருக்கிறது
தவிர யாரும் திருடிக் கொண்டு சென்று விடுவார்கள்
என்பதற்காக இல்லை.

குவளை இல்லை என்று வைத்துக் கொண்டால்
தாகத்தால் உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒருவர்
தண்ணீர் அருந்த குவளையைத் தேடினால்
அது பலவிதமான இன்னல்களைக் கொண்டு வந்து விடும்.

அத்தகைய இன்னல்கள்; அத்தகைய துன்பங்கள்
ஆகியவை ஏற்படக்கூடாது என்பதற்காகவும்
உண்மையாக தாகம் கொண்டு தண்ணீர் அருந்த வருபவர்களுக்கு
தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான்
குவளை கட்டி வைக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல்
குவளையை யாராவது திருடிக் கொண்டு போய் விடுவார்கள்
என்ற காரணத்தினால் அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செயல் நம்மைச் சுற்றி நடக்கும் போது
அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர முற்பட வேண்டும்
உண்மைத் தன்மை தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை
உண்மை தெரிந்த மாதிரி பேசுவது தவறு
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிகழ்வு-2
ஒருவர் வெளிநாட்டிலிருந்து
நமது நாட்டிற்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்
அவ்வாறு வருபவர் பல்வேறு விதமான
தவறுகளை செய்து விட்டு வருபவராக இருக்கலாம்;
சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் தவறுகளைச்
செய்தவராக இருக்கலாம்;
தெரிந்தே தவறை செய்தவராக இருக்கலாம்;
தவறு செய்யவேண்டும் என்று தெரிந்தே செய்தவராக இருக்கலாம்;
ஒரு சிலருக்கு பிடிக்காத தவறை செய்தவராக இருக்கலாம்;
பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுத்து செய்த தவறாக இருக்கலாம்;
தவறு என்பதை தவறு என்று தெரியாமலேயே தவறை
செய்தவராக இருக்கலாம்;

அவர் செய்தது தவறு என்று தெரிந்தும் மக்கள்
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
தவறை எதிர்க்க தைரியம் இல்லாமல்  
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
தனக்கு எதற்கு இந்த வீண் வேலை என்று
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
தன்னை பற்றி மட்டும் சிந்தனை செய்து
பிறர் எப்படி போனாலும் போகட்டும் என்று
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
பொதுநலம் கருதாமல் தன்னலம் மட்டுமே கருதி
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
தனக்கு ஆதாயம் கிடைக்கிறதே என்று நினைத்து
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
எதிர்த்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
எதிர்த்தால் தனக்கு இழப்புகள் ஏற்படும் என்று நினைத்து
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;
ஆதரவு தெரிவிப்பது போல் நடித்து
எதிர்க்காமல் இருந்திருக்கலாம்;

அத்தகையவர்,
அத்தகைய தன்மைகளைக் கொண்டவர்;
அத்தகைய கொடூர மனப்பான்மை கொண்டவர்;
அத்தகைய இழிவான குணத்தை கொண்டவர்;
அத்தகைய தவறான எண்ணம் கொண்டவர்;
நாடு விட்டு நாடு வரும்போது சில பேர் வரவேற்கலாம்;
அந்த சில பேர் ஆதாயத்திற்காக வரவேற்கலாம்;
தங்கள் முன்னேற்றத்திற்காக வரவேற்கலாம்;
தங்கள் வசந்த வாழ்க்கைக்காக வரவேற்கலாம்;
வரவேற்பர்களையும் உண்மையாக வரவேற்கிறார்கள்
என்று சொல்ல முடியாது.

அத்தகையவரை எதிர்த்து ஒரு போஸ்டர் இங்கே ஒட்டினால்
அதாவது எங்கள் நாட்டிற்கு வராதே திரும்பி போ
என்று போஸ்டர் ஒட்டினால்
அதை பார்க்கும் சிலர் அதை பார்த்து சிரிப்பர்.

வருபவர் 2000 கிலோ மீட்டர்
தள்ளி இருக்கும் இடத்திற்கு வரும் ஒருவரை
இங்கே போஸ்டர் ஒட்டி எங்கள் நாட்டிற்குள் வராதே
என்று போஸ்டர் ஒட்டுவதால் என்ன பயன்.
நம் நாட்டிற்கு வந்தவருக்கா தெரியப் போகிறது
தவறான வேலை  தேவையில்லாத வேலை என்று கிண்டல் செய்வர்
இது தேவையற்ற செயல் எள்ளி நகையாடுவர்.

எஙகோ தொலைவில் இருக்கும் ஒரு இடத்திற்கு வரும் ஒருவரை
இங்கே இருந்து எங்கள்  நாட்டிற்குள் வராதே
திரும்பிப்போ என்று சொல்வதால் என்ன பயன் என்று சிரிப்பர்.

ஆனால் போஸ்டர் ஒட்டும் இந்த செயலை உற்று நோக்கினால்
பெரும்பாலானவர்களால் தேவையற்ற செயல் என்று
சொல்லப்படும் இந்த செயல் சமுதாயத்திற்கு தேவைப்படும்
ஒரு செயல் என்று தெரிந்து கொள்ளலாம்.

போஸ்டர் ஏன் ஒட்டப்படுகிறது  என்றால் தவறு செய்தவரை
எதிர்த்து போஸ்டர் ஒட்டப்படுகிறது என்று நினைத்துக் கொள்வோம்.
அது அப்படியில்லை அவர் செய்த தவறு
அதைத் தெரியாத ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
நோக்கத்திற்காகத் தான் ஒட்டப்படுகிறது.
தெரியாத ஒருவர் அந்த போஸ்டரை பார்த்து விஷயம் சேகரித்து,
ஆராய்ச்சி செய்து பார்த்து போஸ்டரில் சொல்லப்பட்டிருப்பது
உண்மை தான் என்பதை உணர்ந்து கொண்டால்,
அந்த உண்மையை உணர்ந்த ஒருவர்
அதை உணராத பல பேருக்கும் சொல்வர்
அந்த ஒன்று தான்  நூறாகும்; ஆயிரமாகும்; லட்சமாகும்; கோடியாகும்;

முகம் தெரியாத ஒருவர் தெரிந்து கொண்டு
தெரியாத பலரிடம் சொல்வதன் மூலம்
தவறை எதிர்த்து அநீதியை எதிர்த்து போராட
போர்க்குணம் கொண்டோர் முன்வரலாம்;
தப்பை தட்டி கேட்கும் துணிச்சலுடன் போராட வரலாம்;
உண்மை பக்கம் நிக்க உண்மையுள்ளம் கொண்டோர் போராட வரலாம்;
எதை இழந்தாலும்  உரிமையை இழக்க மாட்டோம்
என்ற நினைப்பை கொண்டவர்கள் போராட வரலாம்;
மற்றவர் துன்பத்தை தன் துன்பம் போல் கருதுபவர்கள்
போராட வரலாம்; ஆக மொத்தம்
சிந்திப்பவர்கள் தவறை எதிர்ப்பவர்கள்
உண்மையுள்ளம் கொண்டவர்கள்
அவர் செய்த தவறை எதிர்க்க வரலாம்;
என்ற உயர்ந்த நோக்கத்தோடு தான் போஸ்டர் ஒட்டப்படுகிறது.

தெரியாத ஒருவர் அந்த நபர் செய்த தவறை புரிந்து கொண்டு
இதை தெரியாக பல பேரிடம் சொல்வதற்கும்
மாற்றம் ஏற்படுவதற்கும் தான்
போஸ்டர் ஒட்டப்படுகிறது என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து போஸ்டர் ஒட்டுவது
எதிர்ப்பை காட்ட அல்ல என்றும் தெரியாத ஒருவர்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்றும்
இது தேவையற்ற செயல் இல்லை
தேவையுள்ள செயல் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நிகழ்வு-3
சட்டத்தை மாற்ற வேண்டும் சட்டத்தை புதியதாக இயற்ற வேண்டும்
சட்டத்தில் நிறைய குறைகள் இருக்கிறது
சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது
என்று சொல்லி சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும்;
சட்டம் அனைவருக்கும் கிடைக்கும் படிச்செய்ய வேண்டும் என்றும்;
ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும்
ஒரே விதமான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்;
அனைவருக்கும் சமமான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்;
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில்
சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்;
தப்பு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பாமல் இருக்கும் வகையில்
சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும்;
தவறு செய்யாதவன் தண்டனை பெறாத
வகையில் சட்டம் இருக்க வேண்டும் என்றும்;
சட்டம் அனைவருக்கும் எளிய
வகையில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும்;
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்
சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும்;
இப்பொழுது உள்ள சட்டம்  தேவையற்ற நிலையில் உள்ளது என்றும்;
இச்சட்டம் தேவையற்ற செயலை ஆற்றிக் கொண்டு இருக்கிறது என்றும்;
சொல்லிக் கொண்டு வருகிறது இச்சமுதாயத்தில் ஒரு பிரிவு.

இந்திய நாட்டின் சட்டம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டம்
இது பல்வேறு விதமான உயர்வுகளைப் பெற்றுள்ளது
காலத்திற்கு ஏற்றபடி இதில் சிலவற்றைச் சேர்க்கலாம்
அல்லது காலத்திற்கு ஏற்றபடி சிலவற்றைக் குறைக்கலாம்.

முழுவதுமாக ஒரு சட்டத்தை இயற்றுவது கடினம்
நம்மால் ஒன்றை உருவாக்க முடியாத போது
உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதை பேணிக் காக்க வேண்டும்.

இந்திய நாட்டின் சட்டம்
தொலைநோக்கு பார்வையை தன்னுள் கொண்டும்;
உயர்ந்த சிந்தனையை தன்னுள் கொண்டும்;
அபரிதமான அறிவை தன்னுள் கொண்டும்;
சிறப்பு வாய்ந்த அனுபவத்தை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் அறிவை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் சிந்தனையை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் கருத்துக்களை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் அனுபவங்களை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் ஒழுக்கங்களை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் சட்டதிட்டங்களை தன்னுள் கொண்டும்;
பல்வேறு நாட்டின் குணங்களை தன்னுள் கொண்டும்;
உருவாக்கப்பட்டிருக்கிறது.

இச்சட்டம் உருவாக்கப்படும்போது,
பல்வேறு விதமான இழப்புகளை சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான கண்ணீர்த் துளிகளை சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான துக்கங்களை சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமாக கவலைகளை சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான சோகங்களை சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான கஷ்டங்களைத் சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான இடையூறுகளைச் சந்தித்திருக்கிறது;
பல்வேறு விதமான கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறது;
ஆகியவற்றைக் கடந்து தான்
இந்திய திருநாட்டின் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பன்னீரில் குளித்து சந்தனத்தில் நீந்துபவர்களுக்கு மட்டுமல்ல
மாட மாளிகை கோபுரத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல
ஓலைக் குடிசையில் வசிக்கும் ஏழைக்கும் இச்சட்டம் பொதுவானது
இச்சட்டம் சமதர்ம சமுதாயத்தை தன்னுள் கொண்டது
இச்சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

இதனை புரிந்து கொள்ளாமல்
இதனை புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருப்பவர்கள் தான்
சட்டத்தால் பயன் இல்லை என்பார்கள்.
சட்டத்தை நன்றாக புரிந்தவர்கள்
இது அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது என்றும்,
சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன்
இச்சட்டம் உருவாக்கப் பட்டிருக்கிறது என்றும்,
நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில்
இச்சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் புரிந்து கொள்வர்.

விவசாய நிலத்தை நன்றாக பாருங்கள்
விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதை உற்று பார்த்தோமேயாகில்
அதில் உள்ள உண்மை நமக்கு புரிய ஆரம்பிக்கும்;
அதில் உள்ள கருத்து நமக்கு புரிய ஆரம்பிக்கும்;

விவசாய நிலத்தில் பயிர் செய்பவர்கள்
பயிருக்கு நீர் எப்படி பாய்ச்சுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்
பாத்தி கட்டி பாய்ச்சுவார்கள்
நிலத்தின் ஓரத்தில் அதாவது கடைசியில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவர்
தண்ணீர் மொத்தமாக திறந்து விட்டால்
அனைத்து பயிர்களுக்கும் சமமாகப் பாயாது
அனைத்து பயிர்களுக்கும் சமமாக
தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால்
தண்ணீரை பாத்தி கட்டித்தான் பாய்ச்ச வேண்டும்
பாத்தி கட்டி பாய்ச்சும்போது
தண்ணீர் அனைத்து பயிர்களுக்கும் சமமாக கிடைக்கும்
பாத்தி கட்டாமல் தண்ணீர் பாய்ச்சினால்
அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் சமமாக  கிடைக்காது.

அதைப்போலத் தான் நம் நாட்டின் சட்டம்
அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது
பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சும் போது
அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர்
எப்படி அனைத்து பயிர்களுக்கும் கிடைக்குமோ
அதைப் போலத் தான் சட்டமும் அனைவருக்கும்
சமமாக கிடைக்கும் படி உருவாக்கப்பட்டிருக்கிறது

இதை உணராத சிலர் இதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர்
இச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்று சொல்பவர் சிந்தனையற்றவர்.
இச்சட்டம் தேவையுடையது என்பதை மறந்து
இச்சட்டம் தேவையற்றது மாற்ற வேண்டும் என்றும்
தேவையற்ற செயலை சிலர் செய்து வருகின்றனர்.

அவர்கள் தேவையுடைய செயலை
தேவையற்ற செயல் என்று சொல்லி வருகின்றனர்.
அவர்களுக்கு எது தேவையுடைய செயல் என்றும்
எது தேவையற்ற செயல் என்றும் தெரிவதில்லை.
தற்பொழுது உள்ள சட்டம் தேவையுடையது ஆனால்
தேவையுடைய இச்சட்டம் தேவையற்றது என்று
மக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள்;
இத்தேவையுடைய சட்டம் தேவையுடையது என்று
மக்கள் உணரும் படிச் செய்ய வேண்டும்;
அதுவரை தேவையுடைய இச்சட்டம்
தேவையற்றது என்று தேவையற்ற மக்களால்
சொல்லப்பட்டுத்தான் வரும்.

தேவையுடைய செயலை
தேவையற்ற செயல் என்று நினைத்துக் கொண்டிருக்கும்
இச்சமுதாயம் தேவையற்ற செயலை தேவையுடைய செயல் என்று
இச்சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கிறது

நிகழ்வு-1
14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வேலை செய்யக்கூடாது
என்று ஒரு சட்டம் இருக்கிறது
குழந்தை தொழிலாளர் சட்டம் 14 வயதிற்கு உட்பட்ட
குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாலோ அல்லது
வேலைக்கு வைத்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது
குழந்தைத் தொழிலாளர் சட்டம் அவர்கள் மீது பாயும்.

குழந்தைகள் குழந்தை நிலையில்
குழந்தைத் தன்மையுடன் இருக்க வேண்டும்;
குழந்தை நிலையில் இருக்க வேண்டும்;
குழந்தைகளை குழந்தை நிலையில் கஷ்டப்படக்கூடாது
குழந்தைகள் குழந்தை நிலையில்
சந்தோஷமாக இருக்க வேண்டும்;
குழந்தைகள் குழந்தை நிலையில்
கவலையற்று இருக்க வேண்டும்;
என்ற சிந்தனையை கருத்தில் கொண்டு தான்
குழந்தைத் தொழிலாளர் சட்டம்  உருவாக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு விதமான சிந்தனைகளைக்
தன்னுள் கொண்ட பெற்றோர்கள்;
தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை
தன்னுள் கொண்ட பெற்றோர்கள்;
தங்களுடைய நிறைவேறாத கனவுகளை
தன்னுள் கொண்ட பெற்றோர்கள்;
தங்களுடைய ஆசைகளையும்,
தங்களுடைய கனவுகளையும்,
தங்கள் குழந்தைகள் மேல் திணிக்கின்றனர்;
குழந்தைகளை வாட்டி வதைக்கின்றனர்;

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை
வேலைக்கு அனுப்பக்கூடாது என்பது சட்டம்
ஆனால் நிறைய குழந்தைகள்
பெரிய திரையிலும், சின்ன திரையிலும் நடிக்கின்றனர்
பாட்டு போட்டி , டான்ஸ் போட்டி என்று
குழந்தைகளை சித்திரவதைப் படுத்துகின்றனர்
இதை ஏன் யாரும் கேட்பதில்லை.

ஒரு தேவையற்ற செயல்
சமுதாயத்தில் தேவையுடைய ஒரு செயலாக
ஒரு சில பெற்றோர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது
அதை யாரும் தவறு என்று சொல்வதில்லை.


14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
ஒரு வேளை உணவிற்கும் வழியில்லாமல்  கஷ்டப்படும் குழந்தைகள்
பசிக்காக வேலைக்கு சென்றால் அது தவறு.
அதே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பணம் படைத்த குழந்தைகள்
புகழுக்காக வேலைக்கு சென்றால் அது தவறல்ல
அதற்கு பெயர் கலைச்சேவை அதற்கு பெயர் போட்டி.

குழந்தைகளை வாட்டி வதைக்கும் நிகழ்வு;
குழந்தைகளை கஷ்டப்படுத்தும் நிகழ்வு;
குழந்தைகளின் சுதந்திரத்தை பறிக்கும் நிகழ்வு;
குழந்தைகளின் இன்பங்களை கலைக்கும் நிகழ்வு;
குழந்தைகளின் சுகங்களை எரிக்கும் நிகழ்வு;
குழந்தைகளின் மகிழ்ச்சிகளை சிதைக்கும் நிகழ்வு;
குழந்தைகளின் கனவுகளை குலைக்கும் நிகழ்வு;
குழந்தைகளின் உணர்வுகளை புதைக்கும் நிகழ்வு;
பல்வேறு பெற்றோர்களால் பாட்டு போட்டி, டான்ஸ் போட்டி
நடிப்பு என்று பல்வேறு நிலைகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை
குழந்தைகளின் மேல் திணித்து
அவர்களுடைய குழந்தைத் தன்மையை சிதைத்து விட்டனர்.
இதே நிலை நீடித்தால் இரண்டு தலைமுறைகளுக்குள்
குழந்தைகளின் குழந்தைத் தன்மை போய்விடும்.

குழந்தைகள் குழந்தைத் தன்மையுடன் இருக்க வேண்டுமானால்
அவர்களை கஷ்டப்படுத்தும் வேலைகளை
செய்ய சொல்லக் கூடாது; கடினமான வேலைகளை
மனதை வறுத்தும் வேலைகளை செய்வதால்
குழந்தைகளின் குழந்தைத் தன்மை சிதைந்து விடும்;

எனவே தேவையற்ற செயலான
குழந்தைகளை பாட்டு போட்டி, நடனப்போட்டி
நடிப்பு என்று ஈடுபடுத்தாமல் தேவையுடைய செயலான
குழந்தைகளை குழந்தைத் தனமாக வளர்ப்பது
நமக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும்.

நிகழ்வு-2
தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வ இயல்பு
தெய்வம் கூட தவறை மன்னித்தாலும் மன்னிக்கலாம்
ஆனால் ஒரு மனிதன் தவறு செய்து
தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து
தண்டனைக் காலத்தை முடித்து விட்டு வந்த பிறகு
இந்தச் சமுதாயத்தில் திருந்தி வாழ விரும்பும் போது கூட
இந்தச் சமுதாயம் திருந்திய மனிதனை
சுகமாக வாழ விடுவதில்லை
அதாவது தவறு செய்த மனிதனை மன்னிப்பதில்லை.

மனிதர்களை இரண்டு வகையில் பிரித்து விடலாம்

       ஒன்று   : தவறு செய்து மாட்டிக் கொள்பவர்கள்
      இரண்டு  : தவறு செய்து விட்டு மாட்டிக் கொள்ளாமல்
                                         இருப்பவர்கள்

அதைப்போல குற்றவாளிகளை இரண்டு வகைகளில்
பிரித்து விடலாம்

         ஒன்று  :  தெரிந்து தவறு செய்பவர்கள்
        இரண்டு : தெரியாமல் தவறு செய்பவர்கள்

தெரிந்து தவறு செய்து மாட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்;
தெரியாமல் தவறு செய்து மாட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்;

தெரிந்து தவறு செய்து மாட்டிக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்;
தெரியாமல் தவறு செய்து மாட்டிக் கொள்ளாதவர்களும்
இருக்கிறார்கள்; ஆக மொத்தம்,
தெரிந்து தவறு செய்தாலும் தெரியாமல் தவறு செய்தாலும்
மாட்டிக் கொள்பவர்கள் குற்றவாளிகள்
மாட்டிக் கொள்ளாதவர்கள் குற்றவாளிகள் இல்லை.

ஒருவர் தெரிந்து தவறு செய்து விட்டார் அல்லது
தெரியாமல் தவறு செய்து விட்டார் ஆனால்
அதற்குரிய தண்டனையை அனுபவித்து விட்டார்
அவர் திருந்தி வாழ முயற்சி செய்கிறார்.
ஆனால் இந்த சமுதாயம் அவரை வாழ விடுவதில்லை
அவரை குற்றவாளியாகவே கருதுகிறது
அவரை சமுதாயத்திலிருந்து பிரித்து வைத்தே பார்க்கிறது
அவர்களை வேலைக்கு வைத்து கொள்வதில்லை
ஏதேனும் அந்த ஏரியாவில் பிரச்சினை என்று வந்து விட்டால்
மீண்டும் மீண்டும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்
சமுதாயம் அவரை கேலியாகப் பார்க்கும்;
சமுதாயம் அவரை கிண்டலாகப் பார்க்கும்;
சமுதாயம் அவரை ஏளனமாகப் பார்க்கும்;
சமுதாயம் அவரை மனிதனாகப் பார்க்காது;
சமுதாயம் அவரை திருந்தியவனாகப் பார்க்காது;
சமுதாயம் அவரை நல்லவனாகப் பார்க்காது;

அவரை குற்றவாளியாகவே தொடர்ந்து பார்க்கும்
சமுதாயத்தில் அவரை வாழ விடாது
வாழ்வதற்கான வழியையும் ஏற்படுத்தித் தாராது
அதனால் திருந்தி வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர் கூட
சமுதாயம் படுத்தும் பாட்டில் மீண்டும் கெட்டவனாக மாறும்
சூழ்நிலையும் உண்டாகிறது.

நல்லவனாக மாற முயற்சிக்கும் ஒருவரை நல்லவனாக மாற விடாமல்,
நல்லவனாக இருக்க முயற்சிக்கும் ஒருவரை நல்லனாக மாற விடாமல்,
நல்லவனாக வாழ முயற்சிக்கும் ஒருவரை நல்லவனாக மாற விடாமல்,
நல்லவனாக மனிதனாக இருக்க ஆசைப்படும் ஒருவரை
மீண்டும் கெட்டவனாக மாற்றும்
பெருமை இந்த சமுதாயத்திற்கு உண்டு.

தவறு செய்து மாட்டிக் கொண்டு
தண்டனை பெற்றவர்கள் இச் சமுதாயத்தில் குறைவு
தவறு செய்து மாட்டிக் கொள்ளாதவர்கள்
தவறு செய்து தண்டனை பெறாதவர்கள்
தவறு செய்தும் தவறே செய்யாமல் போல இருப்பவர்கள்
சுருக்கமாக சொல்லப்போனால்
நல்லவர்கள் போல நடிப்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம்.

இச் சமுதாயத்தில் நல்லவர்களாக இருந்தால் வாழ முடியாது
கெட்டவர்களாக இருந்தால் வாழ முடியாது ஆனால்
நல்லவர்கள் போல நடிப்பவர்கள் நன்றாக வாழ முடியும்.
அந்த நிலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது
நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்களும் வாழ முடிவதில்லை
தவறு செய்து விட்டு திருந்தி வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள் கூட வாழ முடிவதில்லை.

நல்லவர்கள் போல் நடிப்பவர்ளைத் தான்
இச்சமுதாயம் நம்புகிறது அவர்கள் பின்னால் போகிறது.

தவறு செய்து விட்டு தண்டனை அனுபவித்து விட்டு
திருந்தி வாழ விரும்புவர்களை
இச்சமுதாயம் வாழ விடுவதில்லை இந்த தேவையற்ற செயலை
தேவையுள்ள செயல் என்று இச்சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது.

அவர்களை வாழ வைக்க என்ன என்ன  செயல்களைச் செய்ய வேண்டுமோ,
அந்த தேவையுள்ள செயல்களை செய்து விட்டு,
அவர்களை வாழ வைக்க விடாமல் தடுக்கும்
தேவையற்ற செயலை விட்டு விட வேண்டும்.

நிகழ்வு-3
நமது நாட்டில்,
பல்வேறு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்
பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்
பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்
பல்வேறு கடவுளைக் கும்பிடுபவர்கள் இருக்கிறார்கள்

இவர்கள் அனைவருமே மூன்றுக்குள் அடக்கம்
ஆண் இனம்; பெண் இனம்; திருநங்கை இனம்;

ஒரு மொழி பேசுகிறவர் தவறு செய்தால்
அந்த மொழி பேசுகிறவர் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
ஒரு சாதியைச் சேர்ந்தவர்  தவறு செய்தால்
அந்த சாதியைச் சேர்ந்தவர் அனைவரையுமே  தவறாகப் பேசுவர்;
ஒரு மதத்தைச் சேர்ந்தவர் தவறு செய்தால்
அந்த மதத்தைச் சேர்ந்தவர் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
ஒரு கடவுளைக் கும்பிடுகிறவர் தவறு செய்தால்
அந்த கடவுளைக் கும்பிடுகிறவர் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
ஒரு ஆன்மீகவாதி தவறு செய்தால்
அந்த ஆன்மீகவாதியைப் பின்பற்றும் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
ஒரு சினிமாவில் நடிப்பவர் தவறு செய்தால்
சினிமாவைச் சேர்ந்தவர் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
ஒரு விளையாட்டு வீரர் தவறு செய்தால்
விளையாட்டைச் சேர்ந்தவர் அனைவரையுமே  தவறாகப் பேசுவர்;
ஒரு அரசியல்வாதி தவறு செய்தால்
அரசியல்வாதிகள் அனைவரையுமே  தவறாகப் பேசுவர்;
ஒரு நாடகத்தில் நடிப்பவர் தவறு செய்தால்
நாடகத்தில் நடிப்பவர்கள் அனைவரையுமே தவறாகப் பேசுவர்;
தவறு செய்பவர் தனிப்பட்ட மனிதனாக இருந்தாலும்
அவதூறு கெட்ட பெயர் ஏற்படுவது
அவரைச் சார்ந்தவர்களையே சாரும்.

தவறு செய்பவரை மட்டுமே குற்றவாளியாக பார்க்காமல்
அவர் சார்ந்த இனத்தையே குற்றவாளியாக பார்ப்பது
ஒரு தேவையற்ற செயல்.
தவறு செய்தவர் யாரோ அவரை மட்டுமே
தவறாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்
ஆனால், இச்சமுதாயம் அப்படிப் பார்ப்பதில்லை
தவறு செய்தவரை மட்டுமல்ல
அவர் சார்ந்த இனத்தையே தவறாக பேசுவது
என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது.

திருநங்கையர்களை எடுத்துக் கொண்டால்,
அதில் ஒரு பிரிவினர் பிச்சை எடுக்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் பாலியல் தொழில் செய்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் செல்வாக்கான நிலையில் இருக்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் படித்து உயர்த நிலையில் இருக்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் சமூக ஆர்வலராக இருக்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் தொழில் செய்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் வியாபாரம் செய்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் சிறு தொழில் செய்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் குடும்பத்துடன் வாழ்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் கூடி வாழ்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் மாடலிங் செய்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் சினிமாவில் நடிக்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் அழகிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்;
அதில் ஒரு பிரிவினர் நல்ல வேலையில் இருக்கின்றனர்; என்று,
பல்வேறு விதமான திறமைகளையும்,
பல்வேறு விதமான சிந்தனைகளையும்,
பல்வேறு விதமான கற்பனைகளையும்,
பல்வேறு விதமான யோசனைகளையும்,
தன்னுள் கொண்டு இச்சமுதாயத்தில் வாழ்ந்தாலும்
சமுதாயத்தின் கண்களில் படுவது அவர்கள் பிச்சை எடுப்பது
அவர்கள் பாலியல் தொழில் செய்வது
ஏன் அவர்களில் உள்ள மற்ற பிரிவினர்
இச்சமுதாயத்தின் கண்களுக்கு தெரிவதில்லை
ஒரு சில பிரிவினர் செய்த தவறுக்காக
இச்சமுதாயம் திருநங்கை இனத்தையே
மிகவும் கேவலமாக ; மிகவும் இழிவாக;
இச்சமுதாயம் திருநங்கைகளை நடத்துகிறது

ஒரு சில பேர் தவறு செய்கிறார்கள்
என்பதற்காக ஏன் ஒட்டு மொத்த திருநங்கை இனத்தையே
கேலி செய்ய வேண்டும் ; கிண்டல் செய்ய வேண்டும்;
அவமரியாதையாக நடத்த வேண்டும் இந்த நிலை மாற வேண்டும்.

ஆண் இனத்தில் தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள்
அதற்காக ஆண் இனத்தையே குறை சொல்ல முடியுமா?
பெண் இனத்தில் தவறு செய்கிறவர்கள் இருக்கிறார்கள்
அதற்£ பெண் இனத்தையே குறை சொல்ல முடியுமா?
ஆனால், ஒரு சில திருநங்கைகள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக
நாம் ஏன் ஒட்டு மொத்த திருநங்கை இனத்தையே
தவறாக சொல்ல வேண்டும்; தவறாக பார்க்க வேண்டும்;
தவறாக நடத்த வேண்டும்; தவறாக சிந்திக்க வேண்டும்;

திருநங்கைகளை தவறானவர்கள் என்று முடிவெடுத்து விட்டு
அவர்களை சமுதாயத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளை
ஏற்படுத்தித் தருவதில்லை என்ற செயலை
இச்சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது.
இத்தகைய தேவையற்ற செயலை நீக்கி விட்டு
தேவையுள்ள செயலான திருநங்கைகளை மதிப்பதற்கான
வழிமறைகளை ஏற்படுத்த வேண்டும்.

நாம் தேவையற்ற செயலை செய்து கொண்டிருக்கிறோம்
திருநங்கைகளை மதிப்பது தேவையுள்ள செயல் என்று உணர்ந்து
அவர்களை மதிக்கும் தேவையுள்ள செயலை செய்ய வேண்டும்
தேவையற்ற செயலை நீக்கி விட்டு தேவையுள்ள
செயலை செய்ய வேண்டும்.

வாரத்தின் முதல் நாளாகிய அன்றையத் தினம்
சாயங்கால வேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில்
அவர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள்
பூட்டியிருக்கையில் இயேசு வந்து நடுவே நின்றார்
தங்களுக்கு சமாதானம் உண்டாகக் கடவது என்றார்.

அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும்
விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார்
சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

ஆண்டவனின் அருள் இன்றி  நாம் எந்த ஒன்றையும் அசைக்க முடியாது
ஆண்டவனின் அருள் இருந்தால் நாம் எந்த ஒன்றையும் சாதிக்க முடியும்.

பாவத்தை கடவுள் ஒருவரால் மட்டுமே மன்னிக்க முடியும் ;
பாவத்தை கடவுள் ஒருவரால் மட்டுமே கழிக்க முடியும்;
சாதாரண மனிதர்களால்  மற்றவர் பாவத்தை மன்னிக்க முடியாது;
கடவுள் அருள் பெற்றவர்களால் மட்டுமே பாவத்தை மன்னிக்க முடியும்;
கடவுள் அருள் பெற வேண்டுமென்றால் கடவுளை விசுவாசிக்க வேண்டும்;
கடவுளை நம்ப வேண்டும்; கடவுள் நம்மை காப்பாற்றுவார்;
கடவுள் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார்;
கடவுள் நம் பாவத்தை மன்னிப்பார்; கடவுள் நம் பாவத்தை எரிப்பார்;
கடவுள் நம் பாவத்தை கழிப்பார்; கடவுள் நம் பாவத்தை ஏற்றுக் கொள்வார்;
கடவுள் நம் பாவத்தை ஏற்றுக் கொண்டு
நம்மை சுத்தப்படுத்துவார்; என்பதை நம்ப வேண்டும்.

இயேசு அதைத் தான் செய்தார் இயேசு தனது சீடர்களிடம்
என் பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்
பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

நீங்கள் எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ
அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்
எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ
அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

ஆண்டவனின் அருள் இருந்தால் ஆண்டவரின் அருள் ஆசி இருந்தால்
ஆண்டவரின் ஆசியை பெற்றால்
நாம் மற்றவருடைய பாவத்தை மன்னிக்க முடியும்.
ஆண்டவரை நம்பி விசுவாசித்தவர்களுக்கு
ஆண்டவனின் அருள் கிடைக்கும்
ஆண்டவனின் அருள் பெற்றவர்கள் மட்டுமே
மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்க முடியும்.

அதனால் தான் இயேசு
பரிசுத்த ஆவியை தன்னுடைய சீடர்களின் மேல் செலுத்தி
பாவங்களை தீர்க்கக் கூடிய சக்தியை அவர்களுக்கு அளித்தார்.

இத்தகைய ஒரு தன்மை ஆண்டவனின் ஆசி பெற்றவர்களுக்கே
ஆண்டவனின் அருள் பெற்றவர்களுக்கே கிடைக்கும்.
இயேசுவின் அருள் அவர்களுடைய சீடர்களுக்கு கிடைத்தது
அது மட்டுமில்லை இயேசுவை விசுவாசித்தால்
இயேசுவை நம்பி விசுவாசிப்பவர்களுக்கு
மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கக்கூடிய
உயர்ந்த நிலை கிடைக்கும் ஆண்டவனின் அருள் கிடைக்கும்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய
திதிமு என்னப்பட்ட தோமா என்பவன்
அவர்களுடன் கூட அந்தத் தருணத்தில் இருக்கவில்லை.

மற்றவர்கள் இயேசுவைக் கண்டேன் என்று சொல்லியும்
அதை நம்பாத தோமா இயேசுவின் கைகளில் உண்டான
ஆணிகளால் உண்டான காயத்தை தான் கண்டு
தான் அந்தக் காயத்திலே விரலை விட்டு
என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய
இது உண்மை என்று நாம் நம்ப மாட்டேன்
இயேசு வந்து அனைவருக்கும் காட்சி தந்தார்
என்பதை நாம் நம்ப மாட்டேன் என்று சொன்னார்.

ஒருவரிடம் நாம் கேள்விகள் கேட்கும்போது
அது இரண்டு நிலைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது

     ஒன்று தன்னுடைய சந்தேகத்தை
                               தீர்த்துக் கொள்வதற்காக கேள்விகள் கேட்பது
       இரண்டு மற்றவருக்கு ஒன்றைப் பற்றி எவ்வளவு தூரம்
                              தெரிந்திருக்கிறது என்ற விதத்தில் கேள்விகள் கேட்பது

தனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக
கேள்விகள் கேட்பது ஒரு முறை
மற்றவருக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது
என்ற நிலையில் கேள்விகள் கேட்பது இரண்டாவது முறை.

தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதற்காகவும்;
தனக்கு புரியாத ஒன்றை புரிந்து கொள்வதற்காகவும்;
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காகவும்;
அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்
தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்
கேட்கப்படும் கேள்வி தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள உதவும்.

மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்வதற்கும்,
மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறதா என்று
அறிந்து கொள்வதற்கும்,
மற்றவர்கள் அதை அறிந்து வைத்திருக்கிறார்களா
என்று சோதித்துப் பார்ப்பதற்கும்,
கேட்கப்படும் கேள்வியால் ஒரு பயனும் இல்லை.

மற்றவர்களை சோதிப்பதைக் காட்டிலும்
நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வது நல்லது
மற்றவர்களையே சோதித்துப் பார்த்துக்
கொண்டிருந்தால் நம்மால் ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாது.

நாம் தொடர்ந்து மற்றவர்களை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தால்,
மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது
என்று சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தால்,
தன்னுடைய அறிவு வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிந்தால்,
நம்மால் கேள்விகள் மட்டுமே
மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியும்.
நம்முடைய அறிவுத் தனத்தை காட்ட தான் முடியுமே தவிர
ஒன்றையும் நம்மால் கற்றுக் கொள்ள முடியாது.

மற்றவர்கள் எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறார்கள்
என்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை
நாம் எவ்வளவு தூரம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்
என்பது தான் முக்கியம்.

நாம் கேள்விகள் கேட்பது என்பது
நாம் ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக இருக்க வேண்டும்
மற்றவர்கள் எவ்வளவு தெரிந்திருக்கிறார்கள்
என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இருக்கக் கூடாது.

கேள்விகள் கேட்பது என்பது தன்னுடைய
சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இருக்க வேண்டும்
மற்றவர்களை சோதித்துப் பார்ப்பதற்காக இருக்கக் கூடாது.

சந்தேகம் என்பது எழுந்து விட்டால்
மற்றவர்களை நம்பாமல் சந்தேகம் என்பது
எழுந்து விட்டால் நம்மால் எதையும் நம்ப முடியாது
உண்மையானதாகவும் இருந்தாலும்
நம்மால் எதையும் நம்ப முடியாது.

அதனால் தான் தோமா சந்தேகத்துடன்
இயேசு வந்ததை நம்பாமல் இயேசு வந்தாரா
என்று சந்தேகத்துடன் கேட்டார்.

சந்தேகம் என்பது தோமா மனதில் தோன்றியதால் தான்
இயேசு வந்ததை நம்பாமல்
இயேசு தனக்கு காட்சி கொடுத்து உண்மையாகவே
பார்த்தால் ஒழிய நம்ப மாட்டேன் என்ற சந்தேகத்துடன் கேட்டான்
சந்தேகம் என்பது தோமா மனதில் எழுந்தது
மட்டுமல்லாமல் மற்றவர்கள் கூறுவது உண்மையா
என்பதையும் சந்தேகப்பட்டான்.

தோமா கேட்ட கேள்வி தன்னுடைய சந்தேகத்தை
தீர்த்துக் கொள்வதற்காக இல்லை
மற்றவர்கள் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்
என்பதை தெரிந்து கொள்வதற்காகத் தான்.

அதனால் தான் தோமாவால் இயேசு வந்து
காட்சி கொடுத்ததை அவரால் நம்ப முடியவில்லை.

மறுபடியும் எட்டு நாளைக்குப் பின்பு
அவருடைய சீடர்கள் வீட்டிற்குள்ளே இருந்தார்கள்
தோமாவும் அவர்களுடன் கூட இருந்தார்கள்
கதவு பூட்டப்பட்டிருந்தது அப்பொழுது அந்த நேரத்தில்
இயேசு வந்து நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார்.

பின்பு இயேசு தோமாவை நோக்கி பேசினார்
தோமா நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளைப் பார்
உன் கையை நீட்டி என் விலாவிலே போடு
சந்தேகப்படாமல் மற்றவர்களை நம்பாமல்
மற்றவர்கள் சொல்வது உண்மையா என்று
மற்றவர்களை சோதித்து பார்க்காமல் இரு என்னைப் பார் என்றார்.

சந்தேகப்படாமல் விசுவாசியாய் இரு
விசுவாசமாய் இருப்பவர்களுக்கே உண்மை தெரியும்
உண்மையின் உரு தெரியும் உண்மை புரியும்
கடவுள் இருக்கிறார் என்று விசுவாசிப்பவர்களுக்கு கடவுள் இருக்கிறார்
இயேசு காட்சி கொடுத்தார் என்று சொன்னதை
விசுவாசிப்பவர்களுக்கு இயேசு காட்சி கொடுத்தார்
இயேசு இருக்கிறார் என்று சொன்னதை
விசுவாசித்தால் விசுவாசிப்பவர்களுக்கு  இயேசு இருக்கிறார்.

தோமா பிரதியுத்தரமாக
என் ஆண்டவரே என் தேவனே என்றான்.
இப்போது தான் தோமா இயேசு இருக்கிறார்
என்பதை நம்பினான் விசுவாசித்தான்
அதனை உணர்ந்து கொண்ட இயேசு
தோமா நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய்
என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள்
பாக்கியவான்கள் என்றார்.

கண்டும் விசுவாசிப்பவர்களை விட
காணாதிருந்தும் விசுவாசிப்பவர்கள் உயர்ந்தவர்கள்;
கண்டு விசுவாசிப்பவர்களை விட
காணாதிருந்தும் விசுவாசிப்பவர்கள் நம்பிக்கை உடையவர்கள்;
காணாதிருந்தும் விசுவாசிப்பவர்கள் கடவுள் இருக்கிறார்
என்ற கொள்கை உடையவர்கள் என்கிறார் இயேசு.


---------இதன் தொடர்ச்சி

இயேசு கிறிஸ்து-அகத்தியர்-உண்ணும்போது-பதிவு-75-(பாகம்-2)

------------பார்க்கவும், படிக்கவும்


No comments:

Post a Comment