February 11, 2017

1.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா-பதிவு-(1)-79-2

1.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-கேளப்பா -பதிவு-(1)-79-2

              """"பதிவு எழுபத்துஒன்பதை விரித்துச் சொல்ல
                    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

இயேசு  உடல் நிலை குன்றிய
மனிதனை நோக்கி சொன்னார் - எழுந்திரு
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு
நடந்து செல் என்றார்.

அவர் வார்த்தையில் உள்ள மகிமையினால்,
அவர் வார்த்தையில் உள்ள கருணையினால்,
அவர் வார்த்தையில் உள்ள அன்பினால்,
அவர் வார்த்தையில் உள்ள இரக்கத்தினால்,
அவர் வார்த்தையில் உள்ள சக்தியினால்,
நோய்வாய்ப் பட்டிருந்த மனிதன்
நோய் நீங்கி
நோய் முழுவதும் குணம் அடைந்து
எழுந்து நடந்தான் சென்றான்.

ஆனால்,
அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது
இதனைக் கண்ட யூதர்கள்
இன்று ஓய்வு நாளாயிருக்கிறது
நீ படுக்கையை எடுத்துச் செல்வது
நல்லதல்ல என்று அவனிடம் கூறினார்கள்.

அதற்கு வியாதியால் கட்டுண்டு,
இயேசுவால் குணமடைந்தவன் சொன்னான்,
நான் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தேன்;
பலவித இன்னல்களை அனுபவித்தேன்;
பலவித கவலைகளை அனுபவித்தேன்;
பலவித துன்பங்களை ஏற்றுக் கொண்டேன்;
பலவித சோகங்களால் வருந்தினேன்;
பலவித ஏக்கங்களால் நிறைந்திருந்தேன்;
பலவித துயரங்களால் சூழ்ந்திருந்தேன்;
அந்த நிலையில் இருந்த
என்னை குணமாக்கினவர்;
சொன்ன வார்த்தைகளை நான் பின்பற்றினேன்;
அவர் உன் படுக்கையை
எடுத்துக் கொண்டு நடந்து செல் என்றார்.
நான் என் படுக்கையை
எடுத்துக் கொண்டு நடந்து செல்கிறேன் என்றார்.

அதற்கு யூதர்கள் கேட்டார்கள்
உன் நோயைக் குணமாக்கியவர் யார்
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட - என்று
சொன்னவவர் யார் என்று கேட்டார்கள்.

நோய் குணமடைந்தவன்
யூதர்களை நோக்கி,
அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை,
யார் என்று நான் அறிந்து இருக்கவில்லையே,
அவர் யார் என்று எனக்கு தெரியவில்லையே,
என்றான்.

அதற்கு பிறகு இயேசு,
அவனை தேவாலயத்தில் கண்டு,
நீ குணமாக்கப்பட்டாய்
இனி அதிக கேடானவைகள்
உன்னை பிடிக்காத வண்ணம்
பாவங்களைச் செய்யாதே என்றார்.

அதற்குப் பிறகு நோயால் பாதிக்கப்பட்டு
நோய் குணமடைந்தவன்
தன்னை சுகமாக்கியவர்
தன் நோயை குணமாக்கியவர்
தன் நோயை விலக்கியவர்
இயேசு என்பதை உணர்ந்தான்.

அந்த மனிதன் யூதர்களிடம் சென்று
தன்னை குணமாக்கியவர்
இயேசு கிறிஸ்து என்றான்.

இயேசு இந்த குணமாக்கும்
செயல்களைச் செய்தது
ஓய்வு நாளாக இருந்தபடியால்,
யூதர்கள் அவரைக் கொல்ல
ஏதேனும் வழி இருக்கிறதா என்று
ஆலோசனை செய்தார்கள்.

இயேசு யூதர்களை நோக்கி,
பிதா இதுவரைக்கும்
செய்த கிரியைகளை நான்
செய்து வருகிறேன்.
பிதா இது வரைக்கும் உயர்ந்த
காரியங்களை செய்து வருகிறார்
நானும் அந்த உயர்ந்த காரியங்களை
செய்து வருகிறேன்.

இயேசு நோய் வாய்ப்பட்டவனை
ஓய்வு நாளில் குணமாக்கியது தவறு;
நோயை குணமாக்கி
படுக்கையை எடுத்துக் கொண்டு நட - என்று
சொன்னது தவறு;
பிதா செய்தவைகளையே
நானும் செய்து வருகிறேன் என்று சொன்னது தவறு;
பிதாவை தன்னுடைய பிதா என்று சொன்னது தவறு;
பிதாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசியது தவறு;
பிதாவை தன்னுடன் சமமாக வைத்து பேசியது தவறு;
பிதா செய்தவைகளையே நானும் செய்கிறேன் - என்று
சொன்னது தவறு;
இத்தனை தவறுகளையும் கணக்கில்  கொண்டு
அவரை கொலை செய்ய
வகை தேடினார்கள்;
அவரை கொலை செய்ய
காலம் பார்த்தார்கள்;
அவரை கொலை செய்ய
நேரம் பார்த்தார்கள்;
அவரை கொலை செய்ய
சந்தர்ப்பம்  பார்த்தார்கள் யூதர்கள்.

மக்கள் கூட்டம்
இயேசு பின்னால் செல்வதை
எண்ணி கலக்கமுற்றார்கள்;
அவர் செல்லும் இடமெல்லாம்
மக்கள் கூட்டம் கூடுவதை
கண்டு வருத்தமுற்றார்கள்;
அவர் பேசுவதைக் கேட்க
ஆயிரக்கணக்கான மக்கள் கூடி
கேட்பதை கண்டு பயமுற்றார்கள்;

உலக அளவில் எடுத்துக் கொண்டால்
அரசியல் நான்கு நிலைகளைச் சுற்றி
சுழன்று கொண்டிருப்பதை
நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ஒன்று
இந்த உலகத்தில் உள்ள
எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும்
இரு கட்சிகள் மட்டுமே உள்ள நாடுகளில்
அரசியலைப் பொறுத்தவரை
     ஒன்று ஆளுங்கட்சியாக இருக்கும்
    மற்றொன்று எதிர்க்கட்சியாக இருக்கும்

இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும்
இருக்கும்.

முதல் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது
இரண்டாவது கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்;
முதல் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் போது
இரண்டாவது கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்;
இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே,
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும்
மாறி மாறி இருக்கும்.

இரண்டு
சில நாடுகளில்
அரசியலில் பல்வேறு கட்சிகள்
நிறைய எண்ணிக்கையில் இருக்கும்.
அங்கே வெவ்வேறு கட்சிகள்
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும்
தங்களுக்குள் மாறி மாறி வரும்.
அவைகள் தங்களுக்குள்
வெவ்வேறு கால கட்டங்களில்,
வெவ்வேறு ஆண்டுகளில்,
வெவ்வேறு சூழ்நிலைகளில்,
வெவ்வேறு நிலைகளில்,
ஆளுங்கட்சியாகவும்எதிர்க்கட்சியாகவும் வரும்.

மூன்று
சில நாடுகளில்
பல்வேறு கட்சிகள் என்ற நிலை இருந்தாலும்
இரண்டு கட்சிகள் மட்டுமே
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் வரும்;
இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே
ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் வரும்;
வேறு கட்சிகள்
ஆளுங்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ
வருவதற்கு வாய்ப்போ, சூழ்நிலையோ கிடையாது
இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கும்.
வேறு கட்சிகள் வருவதற்கான
சூழ்நிலைகள் குறைவு,
வாய்ப்புகள் குறைவு,
அந்த நாட்டை நன்கு உற்று நோக்கினால்
அந்த இரண்டு கட்சிகளின்
வலிமை, பாராம்பரியம், வரலாறு - ஆகியவற்றை
உற்று நோக்கினால்
ஏதோ ஒரு காரணத்தை
அடிப்படையாகக் கொண்டே
அந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி
ஆளுங்கட்சியாகவும்எதிர்க்கட்சியாகவும்
வந்து கொண்டு இருப்பதை
நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நான்கு
நான்காவது ஒன்று உண்டு
ஒரே ஒரு ஆட்சி மட்டுமே உண்டு
அது மன்னராட்சியாக இருக்கலாம்
அல்லது
சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்.

இந்த நான்கு நிலைகளை எடுத்துக் கொண்டால்
இரு கட்சிகளில் இருகட்சி ஆட்சி;
பல்வேறு கட்சிகளில் இரு கட்சி ஆட்சி;
பல்வேறு கட்சிகளில் இரு கட்சி மட்டுமே ஆட்சி;
ஒரு கட்சியில் ஒரு கட்சி ஆட்சி;
என்ற நிலைகளில்,
உலக அளவில் இந்த அரசியலில்
இந்த நான்கு நிலைகள் மட்டுமே இருக்கிறது.

மூன்று நிலைகளை விட்டு விடலாம்
ஆனால் இந்த நான்காவது நிலை
மிகவும் முக்கியமானது ஆகும்.
நான்காவது நிலை என்பது
ஒரு கட்சி ஆட்சி
அதாவது,
ஒரே கட்சி ஆட்சி
ஒரு கட்சி ஆட்சி என்பது,
பெரும்பாலும் சர்வாதிகார
ஆட்சியாக இருக்கலாம்
சர்வாதிகார ஆட்சி என்பது - அந்த நாட்டில்
அந்த ஒரு ஆட்சி மட்டுமே இருக்கும்.
முன்னால் எப்படி மன்னர் ஆட்சியாக
ஒரு ஆட்சி இருந்ததோ,
அதைப்போல ஒரு கட்சி ஆட்சியாக
சர்வாதிகார ஆட்சி இருக்கிறது.

மன்னர் ஆட்சியும்,
சர்வாதிகார ஆட்சியும்,
ஒரு கட்சி ஆட்சி தான் என்றாலும்,
இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.
மன்னர் ஆட்சி என்பது,
மக்களின் தேவையை நிறைவேற்ற
செயல்களைச் செய்வது;
காரியங்களை நிறைவேற்றுவது;
நல்லவைகளை உருவாக்குவது;
உயர்வுகளை ஏற்படுத்துவது;
உன்னதங்களை பிறப்பிப்பது;
உண்மைகளை வளர்ப்பது;
இல்லாமைகளை போக்குவது;
நீதியை நிலைநாட்டுவது;
ஏழ்மையை விலக்குவது;
சிந்தனையை செதுக்குவது;
சமத்துவத்தை விதைப்பது;
சகோதரத்துவத்தை உலவவிடுவது;
சமாதானத்தை கட்டவிழ்ப்பது;
ஆனால்,
சர்வாதிகார ஆட்சி என்பது
மக்களை அடிமையாக வைத்திருக்கும் ஆட்சி
மக்களை ஊமையாக வைத்திருக்கும் ஆட்சி
மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்கும் ஆட்சி
இரண்டிலுமே எதிர்க்கட்சி என்பது
ஒன்று இருக்காது.
மன்னர் ஆட்சியில்
எதிர்க்கட்சி என்பது கிடையாது என்றாலும்,
அரசாங்கத்தில் நடக்கும் குறைகளை சுட்டி காட்டி
திருத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்;
அறிவுரைகள் சொல்லி
திருத்துவதற்கான செயல்கள் மேற்கொள்ளப்படும்;

ஆனால் சர்வாதிகார ஆட்சியில்
இதெல்லாம் கிடையாது;
அவர்கள் வைத்தது தான் சட்டம்
யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது;
எதிர்த்து கேள்வி கேட்பவர்கள்.
யாரும் இருக்க மாட்டார்கள்.
இது தவறு என்று சுட்டி காட்ட முடியாது.
அதனால் நடப்பது தவறு என்று தெரிந்தாலும்
உயிர் மேல் உள்ள பயத்தால்
யாரும் பேச மாட்டார்கள்;
அமைதியாக இருப்பார்கள்;
அடிமையாக இருப்பார்கள்;

எப்படி இருந்தாலும்
இந்த நான்கு நிலையில்
எந்த நிலையில் இருந்தாலும்
புதியதாக புத்தம் புதிய சக்தி
அதாவது மக்கள் எழுச்சி தோன்றுவதை
அது ஒத்துக் கொள்ளுவது கிடையாது.
புதியதாக தோன்றும் சக்தி
தங்களுக்கு எதிராக இருக்கும்
என்ற காரணத்தினால்,
அவைகள்
புதியதாக ஒரு நிலை
உருவாகுவதை விரும்புவதில்லை.
ஒத்துக் கொள்வதில்லை.
அவை உருவாவது
தங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல
என்று முடிவெடுத்து
அதை உருவாக அனுமதிப்பதில்லை.
அவைகள் உருவாவது
தங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்
என்பதை உணர்வதால்
அவைகள் அதை அனுமதிப்பதில்லை.

புதியதாக உருவாகும் ஒரு சக்தி
ஏதாவது ஒரு காரணத்திற்காக உருவாகலாம்;
ஏதாவது ஒரு கொள்கைக்காக உருவாகலாம்;
ஏதாவது ஒரு தீர்மானத்தை
நிறைவேற்ற இணைந்தாக இருக்கலாம்;
அவை சாதாரண காரணமாக இருக்கலாம்;

இது எல்லாம் ஒரு காரணமா
என்று நினைக்கலாம்;
நாட்டில் எவ்வளவோ
பிரச்சினைகள் இருக்கும்போது
ஒனறும் இல்லாத இந்த பிரச்சினைக்காக
ஒரு புதிய சக்தியாக
இந்த சக்தி தோன்ற வேண்டும்
என்று நினைக்கலாம்;
நாட்டில் எவ்வளவோ மிக முக்கியமான
பிரச்சினைகள் இருக்கும்போது
இந்த பிரச்சினைக்காக
இந்த புதிய சக்தி தோன்றியது
என்று நினைக்கலாம்;
இழப்புகள் எவ்வளவோ
இருந்தபோது
தோன்றாத சக்தி;
கவலைகள் எவ்வளவோ
அழுத்தியபோது
தோன்றாத சக்தி;
துன்பங்கள் எவ்வளவோ
தாக்கியபோது
தோன்றாத சக்தி;
கண்ணீர் பெரு வெள்ளமாக
பெருக்கெடுத்து ஆறாக ஓடியபோது
தோன்றாத சக்தி;
அடிமை நிலை ஆர்த்தெழுந்த போது
தோன்றாத சக்தி;
தீண்டாமை தலை விரித்து ஆடிய போது
தோன்றாத சக்தி;
ஆளும் வர்க்கத்தின்
அதிகாரம் ஆவேசம் கொண்டு
ஆடிய வேலையில்
தோன்றாத சக்தி;
ஒரு இனம் மற்றொரு இனத்தை
அழிக்க முயன்ற போது இனத்தை காக்க
தோன்றாத சக்தி;
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு
துன்பத்தில் உழன்ற போது
தோன்றாத சக்தி;
திடீர் என்று தோன்றினால் எப்படி இருக்கும்.
திடீரென தோன்றிய சக்தியை
பார்த்து அனைத்து கட்சிகளுமே வியந்து நிற்கும்.
அவர்கள் எதற்காக ஒன்று கூடினார்களோ
அது வெற்றி பெற்று விட்டால்
தங்கள் ஆட்சியும்,
அரசியல் கட்சியும் ஒன்றும் இல்லை,
ஒன்றுக்கும் உபயோகம் இல்லைஎன்ற நிலை
மக்கள் மனதில் பதிந்து விடும் - என்ற  நிலை
உருவாகி விடும் - என்ற நிலையை
கருத்தில் கொண்டு,
அந்த சக்தி வளர்ந்தால்
தங்களுக்கும்
தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கும்
தங்கள் அரசியல் வாழ்வுக்கும் ஆபத்து
என்பதை உணர்ந்து,
புதியதாக தோன்றும் அந்த சக்தியை,
புதியதாக தோன்றிய அந்த சக்தியை,
எதற்காக தோன்றியதோ,
எந்த செயலை நிறைவேற்ற ஒன்று கூடியதோ,
அந்த செயலை நிறைவேற விடாமல்,
அந்த செயல் வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ளும்.

அனைவரும் நினைப்பது போல்
ஒன்றாக இணைந்த சக்தி,
ஒன்றாக கூடிய சக்தி,
ஏதோ ஒரு சாதாரணமான காரணத்திற்காக
தோன்றிய சக்தியாக இருக்காது;
கூடிய சக்தியாக இருக்காது;
சாதாரண காரணத்திற்காக
இணைந்த கூட்டமாக இருக்காது.
பல ஆண்டுகளாக
தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள்
துரோகங்கள், துயரங்கள்;
கவலைகள் , கண்ணீர்கள்;
சோகங்கள் , துன்பங்கள்;
ஆகியவற்றை யாரும் துடைக்கவில்லை
என்ற நிலை வந்து விட்ட பிறகு,
என்ற முடிவுக்கு வந்து விட்ட பிறகு,
தங்களை காப்பாற்ற யாரும் இல்லை
என்ற நிலை வந்து விட்ட பிறகு,
யாராலும் தங்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை,
யாரும் தங்களுக்கு
நன்மை செய்ய மாட்டார்கள்.
என்ற நிலை வந்த பிறகு,
இறுதி கட்ட நிலையில்,
உணர்வுகள் வந்த நிலையில்,
உண்மைகள் புரிந்த நிலையில்,
அதை துடைக்க புதியதாக
ஒரு சக்தி சுயமாகவே தோன்றும்.
இயற்கையாகவே தோன்றும்
அந்த சக்தியை
யாரும் உருவாக்கத் தேவையில்லை;
யாரும் சேர்க்கத் தேவையில்லை;
யாரும் கூட்டத் தேவையில்லை;
யாரும் இணைக்கத் தேவையில்லை;
அது தானாக பிறக்கும்
தன்னால் சேரும்.
ஏனென்றால் அது சுயமரியாதை
நெருப்பில் பூத்த
சுடரொளி.

பல்வேறு விதமான இழப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள்;
பல்வேறு விதமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்கள்;
பல்வேறு விதமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள்;
பல்வேறு விதமான கொடுமைகாளல் பாதிக்கப்பட்டவர்கள்;

தங்கள் உள்ளக் குமுறலை தீர்க்கக் கூடியவர்கள்
எந்த உள்ளத்திலும் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

தங்கள் கவலைகளை தீர்க்கக் கூடியவர்கள்
எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

தங்கள் சோகங்களை தீர்க்கக் கூடியவர்கள்
எந்த உயர் பதவியிலும் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

தங்கள் கண்ணீரை துடைக்கக் கூடியவர்கள்
எந்த அதிகாரத்திலும் இல்லை என்று நினைக்கக் கூடியவர்கள்;

தங்கள் துன்பங்களை தீர்க்கக் கூடியவர்கள்
எந்த சினிமாவிலும் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

தங்கள் துன்பங்களை தீர்க்கக் கூடியவர்கள்
எந்த பத்திரிக்கைத் துறையிலும் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

தங்கள் இழப்புகளை சரிசெய்யக் கூடியவர்கள்
யாரும் பொறுப்பான பதவியில் இல்லை என்று நினைக்கக்கூடியவர்கள்;

சரியான சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருப்பார்கள்,
சரியான நேரம் கிடைத்தால்,
சரியான சந்தர்ப்பம் கிடைத்தால்,
சரியான சூழ்நிலை கிடைத்தால்,
காலம் சரியான வாய்ப்பை
அதற்கென்று ஏற்படுத்திக் கொடுத்தால்,
தனியாக தலைமை இல்லாமலும்
ஒன்றாக கூடுவார்கள்;
தனித்தன்மை கொண்ட
ஒரு தலைமையின் கீழும்
ஒன்று கூடுவார்கள்;
தலைவர் இல்லாமல் ஒரு கூட்டமாகவோ அல்லது
ஒரு தலைவரின் கீழ் புதியதாக
ஒரு கூட்டமாகவோ மக்கள் சக்தி கூடும்.
இதைத் தான் நாம்
ஒரு புதிய சக்தி அல்லது
ஓரு மகா சக்தி அல்லது
ஒரு புதிய கூட்டம் அல்லது
ஒரு புரட்சிக் கூட்டம் என்கிறோம்.

இந்த மாபெரும் சக்தி
ஆட்சியாளர்களுக்கெதிராக தோன்றாது.
புதிய ஒன்றை உருவாக்கி வைப்பதற்காக,
புதிய ஒன்றை பிறப்பிக்க வைப்பதற்காக ,
புதிய ஒன்றை நிலை நிறுத்துவதற்காக,
புதிய ஒன்றை செதுக்கி வைப்பதற்காக,
புதிய ஒன்றை தோற்றுவிப்பதற்காக,
புதிய ஒன்றை தீட்டுவதற்காக,
புதிய சகாப்தம் ஒன்றை படைப்பதற்காக,
புதிய வரலாறு ஒன்றை எழுதுவதற்காக,
புதிய சரித்திரம் ஒன்றை உருவாக்குவதற்காக  தோன்றும்;
புதிய கருத்தை உற்பத்தி செய்வதாற்காக தோன்றும்;
புதிய வரலாறு படைப்பதற்காக தோன்றும்;

அந்த சக்தி எதையும் சார்ந்தது கிடையாது;
அந்த சக்தி எதையும் தாக்குவது கிடையாது;
அந்த எதையும் அழிப்பது கிடையாது;
புதியது ஒன்றை படைக்கும்
அவ்வளவு தான்.
புதிய ஒன்று படைக்கப்பட்டால்
பழைய ஒன்று அழிந்து விடக்கூடிய
சூழ்நிலை உருவாகும் என்ற காரணத்தினால் தான்
பழைய கட்சிகள் அனைத்தும் பயப்படும்.
கூடிய சக்தி வெற்றி பெற விடாது,
கூடிய சக்தி வெற்றி பெற்று விடக்கூடாது,
கூடிய சக்தி சாதித்து விடக்கூடாது,
என்பதை மனதில் கொண்டு
கூடிய சக்தி தோல்வியைத் தழுவ
தேவையான நிலைகளை
அனைத்து தரப்பும் மேற்கொள்ளும்
அபாண்ட பழியை போட நினைக்கும்

அதில் வெற்றி பெறுவதற்காக
சாத்தியக்கூறுகளை உருவாக்கி
அதில் வெற்றியும் பெறும்.

அத்தகைய இரண்டு விதமான சக்திகளில்
தலைவர் இல்லாமல் கூடிய சக்தி என்று இல்லாமல்,
புதிய ஒரு தலைவர் கீழ் தோன்றும் ஒரு சக்தியாக
இயேசு கிறிஸ்து இருந்த காரணத்தினால்
ஆட்சியாளர்கள் பயந்தனர்.

ஒரு கட்சி ஆட்சி செய்யும் நிலையில்
புதியதாக உருவெடுக்கும் ஒரு தூய்மை சக்தி,
அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு உயர்ந்த சக்தி,
சிந்தனையை மீறிய ஒரு தனித்தன்மையான மகா சக்தி,
மற்றொரு தலைமையை பின்பற்றும் சிறந்த சக்தி,
மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்தால்
எப்படி இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த சக்தி
பின் தொடரும் சக்தியாக
மக்கள் வெள்ளமாக,
இயேசு நிற்கும் இடங்களில் எல்லாம்
அவர் உடன் நின்றால்,
இயேசு நடந்து செல்லும் இடங்களில் எல்லாம்
அவர் உடன் ஒன்று கூடினால்,
இயேசு பேசும் இடங்களில் எல்லாம்
அவர் பேச்சை கேட்க கூடினால்,
இயேசு இருக்கும் இடங்களில் எல்லாம்
அவரைப் பார்க்க ஒன்று கூடினால்,
கூட்டத்தைப் பார்த்து ஆட்சியாளர்கள்
பயப்படத்தானே செய்வார்கள்.
அத்தகைய ஒரு நிலை தான்
இயேசுவின் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

மக்கள் சக்தி என்பது
தலைமையில்லாமல் கூடும் அல்லது
மக்கள் சக்தி என்பது
ஒரு தலைமையின் கீழ் கூடும்
இங்கே மக்கள் சக்தி
இயேசு என்ற ஒரு தலைமையின் கீழ்
இயேசு பின்னால் கூடியதைக் கண்டு
ஆட்சியாளர்கள் பயந்தனர்.

இயேசு செல்லும் இடங்களில் எல்லாம்
மக்கள் வெள்ளமென
திரண்டு வருவதையும்,
இயேசு பேசும் இடங்களில் எல்லாம்
மக்கள் எறும்பென
சாரை சாரையாக அணிவகுத்து
வருவதையும் கண்டு
ஆட்சியாளர்கள் கலக்கமுற்றனர்.

இயேசு யூதர்களை நோக்கி சொன்னார்.
நான் மெய்யாகவே சொல்கிறேன்
நான் மெய்யானவைகளைளே சொல்கிறேன்
பிதாவானவர் எவைகளை எல்லாம் செய்கிறாரோ,
குமாரன் பிதாவானவர் செய்கிற
எவைகளைக் காண்கிறாரோ,
அவைகளைத் தான் செய்கிறாரே தவிர
பிதாவானவர் செய்பவைகளைத் தவிர்த்து
வேறு எந்த ஒன்றையும் குமாரன் செய்வது கிடையாது
தாமாக சொந்தமாக செய்வது கிடையாது.


பிதாவானவர் எந்த செயல்களை
எந்த நிலையில்
எப்படி செய்கிறாரோ
அப்படியே குமாரனும் செய்கிறார்
பிதாவானவர் செய்யாதவைகளை
குமாரன் செய்வதில்லை
பிதாவானவர் செய்யாததை
குமாரன் சொந்தமாக செய்வதில்லை.


பிதாவானவர் குமாரனுக்கு
எவைகளை வெளிப்படுத்த வேண்டுமோ,
எவைகளை காட்ட வேண்டுமோ,
எவைகளை செய்கிறாரோ
அதைக் காண்பிக்கிறார்.
நீங்கள் நினைத்து கூட பார்க்கமுடியாத,
நீங்கள் சிந்தித்து கூட பார்க்க முடியாத,
நீங்கள் யோசித்து கூட பார்க்க முடியாத,
மிகப் பெரிய விஷயங்களை எல்லாம்,
மிக்ப் பெரிய செயல்களை எல்லாம்,
மிகப் பெரிய நிகழ்வுகளை எல்லாம்,
மிகப் பெரிய நடப்புகளை எல்லாம்,
பிதாவானர் எனக்கு காண்பிக்கிறார்
என்றார் இயேசு.

இயேசுவின் வார்த்தையில் பொதிந்துள்ள
அர்த்தங்களை புரிந்து கொள்ளாமல்,
மறை பொருள் ரகசியங்களை தெரிந்து கொள்ளாமல்,
உயர்வகை கருத்துக்களை உணர்ந்து கொள்ளாமல்,
கிடைப்பதற்கரிய சிந்தனைகளை அறிந்து கொள்ளாமல்,
இயேசு வளர்ந்து வருவதையும்,
தனிப்பட்ட ஒரு சக்தியாக உயர்ந்து வருவதையும்,
மக்கள் சக்தி அவர் பின்னால் செல்வதையும்,
மக்கள் சக்தி அவர் பேச்சுக்கு கட்டுப்படுவதையும்,
தாங்க முடியாத அரசியல்வாதிகளும்,
சில சுயநல அடிமைகளும்,
வாழ்வதற்காக அண்டி வாழுபவர்களும்,
இயேசு தனிப்பட்ட சக்தியாக வளர்வதை விரும்பாமல்,
அவரிடம் குறை கண்டு பிடித்து,
அவரிடம் குற்றம் கண்டு பிடித்து,
அவரை கொலை செய்ய நேரம் பார்த்தார்கள்.

அன்றைய காலகட்டம் முதல்
இன்றைய காலகட்டம் வரை,
உண்மையை உணர்ந்தவர்கள் பின்னால்
உண்மையயை இந்த உலகத்திற்கு அறிவிக்க
வந்தவர்கள் பின்னால்,
உண்மையை இந்த உலகத்திற்கு தெரிவிக்க
வந்தவர்கள் பின்னால்,
உண்மையை இந்த உலகத்திற்கு உரைக்க
வந்தவர்கள் பின்னால்,
உண்மையை இந்த உலகத்திற்கு உணர்த்த
வந்தவர்கள் பின்னால்,
உண்மையை இந்த உலகத்திற்கு அளிக்க
வந்தவர்கள் பின்னால்,
மக்கள் சக்தி கூடினால்
உண்மையானவர்கள் பின்னால் சென்றால்
பொய்யானவர்கள் எப்போதும்
இதை விரும்பாதவர்கள் அனைவரும்
ஒன்று கூடி,
உண்மையை இந்த உலகத்திற்கு
அளிக்க வந்தவர்களை
அழிப்பதற்கான நேரம் பார்த்து,
அதற்கான சந்தர்ப்பம் பார்த்து,
அதற்கான சூழ்நிலை பார்த்து,
அதற்கான காலம் பார்த்து
உண்மையானவர்களை
அழிக்கத்தான் நினைப்பார்கள்
என்பதை பைபிள் நமக்கு விலக்குகிறது.


---------இதன் தொடர்ச்சி
2.இயேசு கிறிஸ்து-அகத்தியர்-
கேளப்பா -பதிவு-(2)-79-1
 --------பார்க்கவும், படிக்கவும்



No comments:

Post a Comment