September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(6)


இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(6)

     """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

அழுகுணிச் சித்தர்:

கடவுளை இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்

 ஒன்று : இயக்க நிலையில் இருக்கும் கடவுள்
இரண்டு : இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுள்

இயக்க நிலையில் இருக்கும் கடவுளுக்கும்
இயக்கமற்ற  நிலையில் இருக்கும் கடவுளுக்கும்
மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது;
ஆனால் அதை புரிந்து கொள்வது கடினம்;
புரிந்து கொண்டவர்களும் குறைவு;
புரிந்து கொண்டாலும் சொல்ல முடியாமல்
இருப்பவர்களும் குறைவு;

இயக்க நிலையில் இருக்கும் கடவுள் என்பது
இயங்கிக் கொண்டிருக்கும் நிலையைக்
குறிக்கும்;
இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுள் என்பது
இயக்கமற்ற  நிலையில் இருக்கும்
கடவுளைக் குறிக்கும்
ஆனால் இயங்கிக் கொண்டிருக்கும்
நிலையைத் தான் குறிக்கும்;
இயக்கமற்ற கடவுள் என்பது
ஒன்றே  ஒன்று தான்;
இயக்கநிலையில் இருக்கும் கடவுள் என்பது
பல நிலைகளில் இருக்கும்
கடவுளைக் குறிக்கும்;

இயக்கமற்ற கடவுள் என்பது
எதைக் குறிக்கிறது என்றால்
ஆதி நிலை, முதல் நிலை, மூல நிலை
சுத்த வெளி, வெட்ட வெளி, பரம்பொருள்
என்று வார்த்தைகளால் சொல்லப்படுபவைகளைக் குறிக்கும்;
இதை இயக்கமற்ற கடவுள் என்கிறோம்.
ஆனால் இயங்கிக் கொண்டிருக்கிறது;
இதைப் பற்றி படித்தால் தெரியாது;
இதைப் பற்றி சொன்னால் புரியாது;
இதைப் பற்றி உணர்ந்தால் மட்டுமே தெரியும்;
அது அதுவானால் மட்டுமே தெரியும்;
உணராமல் இயக்கமற்ற கடவுள்
எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி மற்றவற்றை இயக்கிக்
கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி மற்றவற்றை
காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி உணர்ந்து கொள்ள முடியாத
செயல்களையும் செய்கிறது என்பதையும்,
உணர்ந்து கொள்ள முடியும்.

இயக்கமுள்ள கடவுளை
எல்லோராலும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்;
எல்லோராலும் அறிந்து கொள்ள முடியும்;
அதன் செயல்களை புரிந்து கொள்ள முடியும்;

இயக்கமற்ற கடவுளுக்கும்,
இயக்கமுள்ள கடவுளுக்கும்,
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
கொள்ள வேண்டுமானால்
எளிமையான உதாரணம் ஒன்றை
எடுத்துக் கொள்ளலாம்.

சிவம் மற்றும் சிவன்
இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது
சிவம் இயக்கமற்ற  நிலையில்
இருக்கக்கூடிய கடவுள்;
சிவன் இயக்க நிலையில்
இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய கடவுள்;

இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய
கடவுளை குறிக்க வேண்டியே
உருவம் கொண்ட சிவனை வைத்திருப்பார்கள்;
உருவம் கொண்ட சிவன்
இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய கடவுள்;

சிவலிங்கம் உருவமற்ற கடவுள்;
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய கடவுள்;
இயக்கமற்ற கடவுளைக் குறிக்க வேண்டும்
என்பதற்காகத் தான் சிவம் என்றார்கள்.
சிவத்தை உருவகப் படுத்தினார்கள்;

இயக்கமற்ற நிலையில் இருப்பது;
ஆனால் இயங்கிக் கொண்டிருப்பது;
அது தான் சிவம்;
இயங்கிக் கொண்டிருப்பது
சிவன்;

சிவம் மற்றும் சிவன் இரண்டுக்கும்
உள்ள முக்கிய வேறுபாடு
இது தான்.

இயங்கிக் கொண்டிருக்கக்  கூடிய கடவுளையும்;
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய கடவுளையும்;
அந்த அந்த  நிலைகளுக்குரிய
பொருள்களை வைத்து அறியலாம் உணரலாம்.

இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளைக்
கொண்டு அறியலாம்.
இயக்கநிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ளவைகளைக்
கொண்டும் அறியலாம்
இயக்கமற்ற நிலைகளில் உள்ளவைகளைக்‘
கொண்டும் அறியலாம்.

இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமற்ற நிலையில் உள்ள
பொருட்களைக் கொண்டு அறியலாம்;
இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமுள்ள நிலையில் உள்ள
பொருட்களைக் கொண்டு அறிய முடியாது;
இயக்கநிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ள பொருட்களைக்
கொண்டும் அறியலாம்;
இயக்கமற்ற நிலையில் உள்ள பொருட்களைக்
கொண்டும் அறியலாம்;

இயக்க நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ள பொருள்
எது என்பதை அறிவது கடினம்
இருந்தாலும் அறிந்து  கொள்ளலாம்
இந்த பொருட்களைப் பயன்படுத்தினால்
அதை அடையலாம்
என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால்,
இயக்கமற்ற நிலையில் இருக்கும்
கடவுளை அறிந்து கொள்ளக் கூடிய
பொருள் எது என்பதை அறிந்து கொள்வது கடினம்.

இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுளை
இயக்கமற்ற பொருளைக் கொண்டு
தான் அறிய முடியும்;
இயக்கமுள்ள பொருளைக் கொண்டு
அறிய முடியாது;
ஆனால்,
இயக்கமுள்ள கடவுளை
இயக்கமுள்ள பொருளைக் கொண்டும் அறியலாம்;
இயக்கமற்ற பொருளைக் கொண்டும் அறிலாம்;

இயக்கமுள்ள கடவுளையும்,
இயக்கமற்ற கடவுளையும்,
அறிந்து கொள்ளக் கூடிய
பொருள் எது என்பதை
உணர்ந்து கொள்வதற்காக,
சமுதாயத்தில் பல்வேறு முறைகள் உள்ளன.
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக பல்வேறு முறைகள்
ஏற்படுத்தப் பட்டுள்ளன.

கடவுளை அறியக்  கூடிய  வழிகளை
முக்கியமாக இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்;
பல்வேறு முறைகளில் பிரிக்கலாம் என்றாலும்
இரண்டு முக்கியமான நிலைகளாக பிரிக்கலாம்;

ஒன்று     :  பக்தி  மார்க்கம்
இரண்டு   :  ஞான மார்க்கம்

பக்தி மார்க்கம் என்றால்
இன்னது செய்தால்
இன்னது விளையும்
ஆகவே இன்னது  செய்து வாழ் என்று
யாராவது சொல்லி அதை நாம் பின்பற்றினால்
அதற்குப் பெயர் பக்தி மார்க்கம்
மார்க்கம் என்றால் வழி.

ஞானமார்க்கம் என்பது
இன்னது செய்தால் இன்னது விளையும்
ஆகவே இன்னது செய்து வாழ வேண்டும்
என்று தானே உணர்ந்து செய்து வாழ்வது
ஞான மார்க்கம்.

பக்தி மார்க்கம் என்பது
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
கடவுளுடன் தொடர்பு கொள்வது.

ஞான மார்க்கம் என்பது
இயக்கமற்ற ஒன்றைக் கொண்டு
இயக்கமற்ற கடவுளுடன் தொடர்பு கொள்வது.

பக்தி மார்க்கம் என்பது
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
இயக்க நிலையில் உள்ள கடவுளுடன்
தொடர்பு கொள்வது.
இயக்கநிலையில் உள்ளவைகள் கொண்டு
இயக்கமற்ற கடவுளுடன் தொடர்பு
கொள்ள முடியாது.

ஞான மார்க்கம் என்பது
இயக்க மற்ற நிலையில் உள்ள ஒன்றைக்
கொண்டு இயக்கமற்ற நிலையில் உள்ள
கடவுளை தொடர்பு கொள்ளவும் முடியும்;
இயக்க நிலையில் உள்ள கடவுளையும்
தொடர்பு கொள்ள முடியும்;

இயக்க நிலையில்  உள்ள
கடவுளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பொருளுக்கும்
இயக்கமற்ற நிலையில்
உள்ள தொடர்பு கொள்ளக்கூடிய பொருளுக்கும்
சிறிதளவு வேறுபாடும் உண்டு;
பெருமளவு வேறுபாடும் உண்டு;

அதனைப் புரிந்து கொண்டு
எது அது என்பதை அறிந்து கொண்டால்
நாம் எதை அறிய நினைக்கிறோமோ
அதை அறியலாம்.

மந்திரங்கள், பூசைகள், ஓமங்கள்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்
மந்திரங்கள்
இயக்க நிலையில் உள்ளவைகள்
இந்த இயக்க நிலையில் உள்ளவைகளை
இயக்க நிலையில் உள்ள
கடவுளை அறிந்து கொள்ள
பயன்படுத்தலாம்;
இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம்
இயக்க நிலையில் உள்ள
கடவுளிடம் நமக்கு தேவையானதை
பெற்றுக் கொள்ளலாம்;
நம்முடைய குறைகளை
தீர்த்துக் கொள்ளலாம்;

மந்திரங்கள் என்பவை
ஒலி உச்சரிப்பு
ஒலி இயங்க ஒரு ஊடகம்
ஒரு ஊடகம் இல்லாமல்
மந்திரத்தால் இயங்க முடியாது;
மந்திரங்கள் எனப்படுபவை
இயக்க நிலையில் இருக்கக் கூடியவை
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை
அறிந்து கொள்ள முடியாது.

மந்திரங்கள் இயக்கமற்ற நிலையில் இயங்காது;
எனவே,
இயக்க நிலையில் உள்ள மந்திரங்களைக்  கொண்டு
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய
கடவுளை தொடர்பு கொள்ள முடியாது;
இயக்க நிலையில் இருக்கும்
கடவுளை மட்டுமே தொடர்பு கொள்ள
முடியும்;

இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய
பொருள் ஒன்று உள்ளது;
அது மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது;
அதை வாசி என்கிறோம்;
அது இயக்கமற்றது;
ஆனால் இயங்கக் கூடியது;
இயக்கமற்றதையும், இயக்கமுள்ளதையும்
தன்னுள் கொண்டுள்ளது;
இயக்கமற்றது
ஆனால் இயங்கிக் கொண்டிருப்பது;
இயக்கமற்ற நிலையில் இருக்கும்
கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு
இந்த வாசியைத் தான்
பயன்படுத்துகிறோம்.

சமுதாயத்தில் ஆன்மீகத்தில்
உயர்நிலை அடைந்தவர்கள்
இந்த வாசியை பயன்படுத்தித் தான்
இயக்கமற்ற நிலையை அடைகிறார்கள்;

வீடுபேறு பெறுகிறார்கள்;
அது அதுவாக மாறுகிறார்கள்;

வாசியை வைத்து
இயக்கமற்ற கடவுளுடனும் தொடர்பு கொள்ளலாம்;
இயக்க நிலையில் உள்ள கடவுளுடனும்
தொடர்பு கொள்ளலாம்;

நம் சுவாசக் காற்றானது
நம் உடலில் வளைந்து நெளிந்து செல்கிறது
அவ்வாறு செல்வதால் அது
கடவுள் இருக்கும் இடமான
முச்சந்திக்குள் செல்ல முடியாது;

சுவாசக் காற்றானது நேராகச் சென்றால் மட்டுமே
அது கடவுள் இருக்கும் இடத்தை அடைய முடியும்;
அவ்வாறு நம் சுவாசக் காற்றானது
நேரானால் மட்டும்
இறைவன் இருக்கும்
இடத்தை அடைய முடியாது;

நம் சுவாசத்தை நேராக்கினால் மட்டும்
இறைவன் இருக்கும் இடத்தை அடைய முடியாது;
கர்மா கழிந்தால் மட்டுமே
நம் சுவாசம் இறைவன் இருக்கும்
இடைத்தை அடைய முடியும்
அதற்கு நாம் பயன்படுத்துவது தான் வாசி.

வாசி நாம் செய்ய செய்ய
பயிற்சி முறையை தொடர்ந்து செய்து வர
நம் சுவாசம் நேராகிறது மற்றும்
நம் கர்மா கழிகிறது;
கர்மா கொஞ்சம் கொஞ்சமாக கழிகிறது;

வாசி தொடர்ந்து செய்து வர
வளைந்து வளைந்து சென்ற
சுவாசக் காற்றானது நேராகிறது;
வளைந்து வளைந்து
உடலில் உள்ள துளைகள் வழியாக
வெளியே சென்ற சுவாசக் காற்றானது
வெளியே செல்லாமல்
உடலுக்குள்ளேயே சு.ற்றுகிறது;

கோலப்பதியடியோ என்றால் நம்
உடலில் வளைந்து நெளிந்து
சென்ற காற்றானது என்று பொருள்.

குதர்க்கத் தெரு நடுவே என்றால்
வளைந்து நெளிந்த காற்றானது
வாசிப் பயிற்சி செய்வதன் மூலம்
நேராக செல்கிறது
சூட்சும வழியாக செல்கிறது என்று பொருள்
யாரும் அவ்வளவு எளிதில்
கண்டுபிடிக்க முடியாத இடம்  என்று பொருள்
அதாவது நமது சுவாசக் காற்றானது
நேராகிறது என்று பொருள்.

சாலப்பதிதனிலே தணலாய் நின்ற கம்பம் என்றால்
வாசிப் பயிற்சி  செய்ததன் மூலம்
நேரான சுவாசக் காற்றானது அக்கினியாகும்
கம்பம் எவ்வாறு நேராக இருக்கிறதோ
அவ்வாறு நேராக நம் சுவாசக் காற்றானது
மாறுகிறது என்று பொருள்.

மேலப்பதிதனிலே என் கண்ணம்மா உன்
விளையாட்டைப் பாரேனோ
வாசிப்பயிற்சி செய்து வர
தொடர்ந்து செய்து வர,
நம் சுவாசக் காற்றானது நேராகிறது;
அக்கினிக் கம்பமாகிறது;
நம் கர்மா கழிகிறது;
அதன் விளைவாக சுவாசக் காற்றானது
பத்தாவது வாசலைத் திறந்து
கடவுள் இருக்கும் இடத்தை அடைகிறது;
அதனால் மனிதன் அதுவாகவே மாறுகிறான்;
மனிதன் கடவுள் அருளைப் பெறுகிறான்;
கடவுள் நிலையை அடைகிறான்;
அதுவாகவே மாறுகிறான்;

அதனால் அவன் பரம்பொருளின்
அனைத்து ரகசியங்களையும் தெரிந்து கொள்கிறான்;
கடவுளின் விளையாட்டைத் தெரிந்து கொள்கிறேன்;
பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்கிறான்;
பரம்பொருளை உணர்ந்து கொள்கிறான்;
மூலத்தைத் தெரிந்து கொள்கிறான்;
சூட்சுமங்களை அறிந்து கொள்கிறான்;
ரகசியங்களை அறிந்து கொள்கிறான்;

கடவுள் நம் உடலில்
எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து,
அவரை அடையக்கூடிய வழி எது என்பதை அறிந்து,
எதை வைத்து அவரை அடைய வேண்டும் என்பதை அறிந்து,
அதை பயன்படுத்தி அறிந்து கொள்வதன் மூலம்
பரம்பொருளின் தன்மைகளைத் தெரிந்து
கொள்ளலாம் என்கிறார்
அழுகுணிச்சித்தர்.


இயேசு கிறிஸ்து -  அழுகுணிச் சித்தர்:

உயிரற்றவைகளையும்
உயிருள்ளவைகளையும்
விட்டு விட்டு வருபவர்களுக்கே
பரலோக ராஜ்ஜியம் கிடைக்கும் என்கிறார்
இயேசு,

அவ்வாறே,
அழுகுணிச் சித்தரும்,
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால்
அனைத்து கர்மாக்களையும் கழித்து விட்டால்
மட்டுமே முடியும் என்கிறார்.

 """"போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                போற்றினேன் பதிவுஎண்பத்து ஒன்றுந்தான்முற்றே""""




No comments:

Post a Comment