April 30, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


    
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


"""""உண்ணீர் உண்ணீரென்று
உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"""""

விருந்தினராக வருபவர்களை
உபசரிப்பதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று   : வேறுபாடு காட்டி
           உபசரிப்பது

இரண்டு : வேறுபாடு காட்டாமல்
          உபசரிப்பது

நாம் ஒரு
வேலையாக
ஒரு இடத்திற்கு
செல்கிறோம்
ரொம்ப நேரம்
ஆகி விட்டது
எதிர்பாராத விதமாக
தெரிந்தவர் வீட்டிற்கு
செல்ல வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டு
விட்டது
அவர் வீட்டில்
சாப்பாடு சாப்பிடச்
சொல்கிறார்கள்

நாம் அவர் வீட்டில்
சாப்பிடுகிறோம்
நமக்கு ஒரு
சாப்பாடு போட்டு
அவரும்
அவருடைய குடும்பமும்
வேறு ஒரு
சாப்பாடு
சாப்பிடுகிறார்கள்
அவர்கள் அனைவரும்
நல்ல சாப்பாடும்
நமக்கு ஏதோ
ஒரு சாப்பாடும்
போட்டு சாப்பிட
சொல்கிறார்கள்
இது வேறுபாடு
காட்டி
சாப்பாடு போட்டு
உபசரிப்பது

ஒரு சில
வீடுகளில் பார்த்தால்
சாப்பிட
போகும் போது
சாப்பாடு உள்ள
பாத்திரங்கள்
சாப்பாடு போட்டு
சாப்பிட வேண்டிய
பாத்திரங்கள் என்று
உணவு வகைகள்
அனைத்தையும்
கொண்டு வைத்து
அறையில் வைத்து
அனைவரையும்
ஒன்றாக
அமரச் சொல்லி
அனைவருக்கும்
சாப்பாடு போட்டு
சாப்பிடச் சொல்வது
மட்டும் இல்லாமல்
அனைவரும்
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடுவார்கள்
இது
வேறுபாடு காட்டாமல்
உபசரித்து சாப்பாடு
போடுவது ஆகும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////


April 23, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-9

             ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-9

ஆனால் ஒன்று
தனக்கு வேண்டியவர்களை
வாருங்கள் என்று
சொல்வதற்கும்
உபசரிப்பதற்கும்
வசதியானவர்களை
மதிப்பு கொடுத்து
வரவேற்பதற்கும்
நம்மை உபசரிக்காமல்
இருப்பதற்கும்
வேறுபாடு இருக்கிறது

அதாவது
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
பிடித்தவர் பிடிக்காதவர்
என்ற பேதம் பிரித்து
அதாவது
வேறுபாடு காட்டி
வரவேற்பவர்
வீட்டு விசேஷத்திற்கு
சென்று அவமானப்பட்டோம்
அது நம்
மனதில்
ஆறாத வடுவாக
இருக்கிறது

அவர் நம்மை
நடத்திய விதம்
மனம்
கவலையில் வாடுகிறது
அவர் நம்மை
அவமானப் படுத்தியதை
நினைத்து
மனம்
வேதனையில் வாடுகிறது
அவர் நம்மை
உதாசீனப்படுத்தியதை
நினைத்து
மனம்
சோகத்தில் வாடுகிறது
அவர் நம்மை
இழிவாக நடத்திய
விதம்
நம் நெஞ்சில்
ஆறாத வடுவாக
பதிந்து விடுகிறது

இத்தகைய சூழ்நிலையில்
சிறிது காலம் கழித்து
மீண்டும் அவர்
தன்னுடைய
வீட்டு விசேஷத்திற்கு
வரும்படி நம்மை
அழைக்கிறார்

அழைப்பவர்
பெரிய பணக்காரராக
இருக்கிறார்
உயர்ந்த பதவியில்
இருக்கிறார்
அவருக்கு நிறைய
ஆட்களைத் தெரியும்
அதிக அளவு
அனுபவம் இருக்கிறது
அவமானப்பட்டால் என்ன
அவருடைய
வீட்டு விசேஷத்திற்கு
போய் விட்டு
வருவோம்
அவருடைய உதவி
நமக்கு எப்பொழுதாவது
தேவைப்படும்

அவரை
நாம் ஏன்
பகைத்துக் கொள்ள
வேண்டும் என்று
எண்ணாமல்
அழைப்பவர்
எவ்வளவு
பெரிய ஆளாக
இருந்தால் என்ன,
எவ்வளவு
பெரிய பதவியில்
இருந்தால் என்ன,
எவ்வளவு
பெரிய பணக்காரராக
இருந்தால் என்ன,
மதிக்காத அவருடைய
வீட்டு விசேஷத்திற்கு
செல்ல மாட்டேன்
என்று
அவருடைய வீட்டு
விசேஷத்திற்கு செல்லாமல்
இருக்கும் செயல்
கோடி ரூபாய்
மதிப்பு உடையது
என்று சொல்லலாம்
அல்லது
கோடி பொன்
மதிப்பு உடையது
என்று கூட
சொல்லலாம்

இது முதல் செயல்
இது முதல் கோடி
பெறும் செயல்
இது முதல்
கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது முதல்
கோடி பொன்
பெறும் செயல்
இந்த முதல்
செயலை
செய்ய வேண்டாம்
என்று ஔவையார்
சொன்ன செயல்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////

April 22, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8



              ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-8

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்தார்கள்
வெகுமானம்
கிடைக்கவில்லை

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
வகையில்
செயல்களைச்
செய்தும்
திறமையாக வேலை
செய்து
பொன்னும் பொருளும்
பாராட்டும் பெற்றார்

கஷ்டப்பட்டு
வேலை செய்த
புலவர்களுக்கு ஒன்றும்
கிடைக்கவில்லை

திறமையாக
வேலை செய்த
ஔவையாருக்கு
சன்மானம் கிடைத்தது
மட்டும் அல்லாமல்
அவர் எழுதிய பாடல்
நான்கு கோடிப்பாடல்
என்ற சிறப்பும் பெற்றது


ஔவையார் பாடிய
நான்கு கோடி பாடலில்
முதல் கோடி பெறும்
செயல் என்ன என்பதற்கான
அர்த்தத்தை பார்ப்போம்


"""மதியாதார் முற்றம்
மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்""""

ஒருவர் தன் வீட்டில்
ஒரு விசேஷம்
வைத்திருக்கிறார்
அதற்காக நம்மை
கூப்பிடுகிறார்
நாம் அவருடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
அவருடைய
வீட்டிற்கு செல்லுகிறோம்

ஆனால் அவர்
நம்மை
வாருங்கள் என்று
அழைக்காமல்
வாருங்கள் என்று
வரவேற்காமல்
அமருங்கள்
என்று சொல்லாமல்
சாப்பிடுங்கள்
என்று சொல்லாமல்
எப்படி வந்தீர்கள் என்று
கூட கேட்காமல்
இருட்டில் எப்படி
போவீர்கள்
என்று கேட்காமல்
தனியாகவா வந்தீர்கள்
என்று கேட்காமல்
வீட்டில் இருப்பவர்கள்
அனைவரையும்
கூட்டிக் கொண்டு
வர வேண்டியது தானே
என்று கேட்காமல்
கடமைக்கு அழைத்தோம்
இவன் வந்து விட்டான்
என்று நினைத்து
வரவேற்காமல்
மனம் வருத்தப்படும்படி
செய்கிறார்

நமக்கு மனம்
வருத்தமாய் இருக்கிறது
இருந்தாலும் பரவாயில்லை
விசேஷம் முடியும் வரை
இருப்போம் என்று
இருக்கிறோம்

விசேஷம் என்று வைத்தால்
அந்த விசேஷத்திற்கு
பலர் வருவார்கள்
பல வேலைகள் இருக்கும்
அனைவரையும்
கவனிக்க முடியாது
அதற்காக வருத்தப்படக்கூடாது
நாம் போக வேண்டும்
விசேஷத்தில் கலந்து
கொள்ள வேண்டும்
சாப்பிட வேண்டும்
வர வேண்டும்
என்று சொல்வார்கள் சிலர்

விசேஷத்திற்கு அழைத்து
நாம் ஒரு விசேஷத்திற்கு
கலந்து கொள்ள
சென்றால்
நம்மை வரவேற்பவர்
நம்மை பாசத்துடன்
வரவேற்கிறாரா
அல்லது
பாசமற்று வரவேற்கிறாரா
என்பது
அவர்கள் நம்மை
வரவேற்பதிலிருந்து
தெரிந்து விடும்

அவர் நம்மை
வரவேற்பதிலிருந்து
நாம் அவருடைய
விசேஷத்திற்கு வந்தது
அவருக்கு பிடிக்கவில்லை
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்,
---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////


April 21, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7




ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-7


அப்பொழுது அங்கே
ஔவையார்
வருகிறார்
இவர் தான்
திறமையாக
வேலை செய்பவர்
அதாவது
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்.

அவர் நான் ஒரு
பாடல் எழுதி தருகிறேன்
அதை மன்னரிடம்
கொடுங்கள்
என்று கொடுத்தார்

முதலில் புலவர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை
ஔவையார்
என் பாடல்
நான்குகோடிக்கு
ஈடானது
மன்னரிடம் கொடுங்கள்
என்று சொல்லிய
பின்னர் புலவர்கள்
வாங்கிக் கொண்டனர்.

ஔவையார் எழுதிய
அந்தப் பாடலில்
நான்கு செயல்களைச்
சொல்கிறார்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டாம்
என்றும்
இரண்டு செயல்களை
செய்ய வேண்டும்
என்றும் சொல்கிறார்.

நன்றாக உற்றுக்
கவனித்தால்
ஒரு செயலுக்கும்
மற்றொரு செயலுக்கும்
தொடர்பு உள்ளது
தெரியவரும்.

ஔவையார் நான்கு
செயல்களைப்பற்றி
சொல்கிறார்
ஒவ்வொரு செயலையும்
கோடி பெறும்
என்கிறார்

கோடி என்ற சொல்லை
ஔவையார்
பணம் என்று
சொல்லவில்லை
நாம் கோடி என்ற
சொல்லை
பணமாகவோ,
பொன்னாகவோ,
புண்ணியமாகவோ
எடுத்துக் கொள்ளலாம்

எந்த இடத்தில் பணம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில் பொன்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்
புண்ணியம்
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும்
என்பது தான் முக்கியம்

ஒவ்வொரு செயலும்
கோடி மதிப்புடையது
என்றால்
நான்கு செயல்கள்
நான்கு கோடி
மதிப்புடையது

ஒவ்வொரு செயலுக்கும்
மதிப்பு
ஒரு கோடி என்று
மதிப்பீடு செய்து
நான்கு செயல்களுக்கு
நான்கு கோடி என்று
தன்னுடைய பாடலுக்கு
மதிப்பீடு செய்த
செயல்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்துவது ஆகும்.

நான்கு கோடி
பாடல் எழுதாமல்
பாட்டிலேயே
நான்கு கோடியையும்
கொண்டு வந்தது
பிறர் ஏற்றுக் 
கொள்ளத் தக்க
வகையில்
செயல்களைச்
செய்தது ஆகும்.

மற்ற புலவர்கள்
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக்காட்டு.

ஒவையார்
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
செயல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கு
எடுத்துக் காட்டு.

--------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////////////////


April 19, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6


               
ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-6

ஒன்பது நபர்கள்
பத்து ரூபாய்க்கு
ஐம்பது சிப்ஸ்கள்
வைத்து
விற்பனை செய்தாலும்
மக்கள் அதை
பெரும்பாலும்
வாங்கி சாப்பிடுவது
இல்லை
ஆனால்,
பத்து ரூபாய்க்கு
பத்து சிப்ஸ் வைத்து
மீதியிடங்களை காற்றால்
நிரப்பி ஏமாற்றி
விற்பனை செய்தாலும்
மக்கள் ஏன் இப்படி
மக்களை ஏமாற்றும்
விதத்தில் ஏமாற்றி
விற்பனை செய்கிறீர்கள்
என்று யாரும்
கேள்வி கேட்காமல்
ஒரு நபர் செய்த
அந்த சிப்ஸ் பாக்கெட்டை
வாங்கி பெரும்பாலான
மக்கள் அதனை
சாப்பிட்டு வருகின்றனர்,

இதுதான் கஷ்டப்பட்டு
உழைப்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் எற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்



இதே போல்
புலவர்களுக்கும்
ஒவையாருக்கும்
இடையே
நடைபெற்ற
நிகழ்ச்சியானது
கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்களுக்கும்,
வித்தியாசமான
யோசனைகளைப்
பயன்படுத்தியும்,
பிறர் ஏற்றுக்
கொள்ளத்தக்க
செய்ல்களைச் செய்தும்
திறமையாக வேலை
செய்பவர்களுக்கும்
உள்ள வித்தியாசம்
ஆகும்.

நாளை காலைக்குள்
நான்கு கோடி பாடல்கள்
வேண்டும் என்று
சொன்னவுடன்
யோசிக்காமல்
தாங்கள் தொடர்ந்து
செய்யும் வேலையான
பாடல் எழுதுவதையே
நினைவில் கொண்டு
காலைக்குள் எப்படி
பாடல் எழுதி
முடிப்பது
எத்தனை பேர்
அழைத்து
பாடல் எழுத
சொன்னாலும்
நான்கு கோடி பாடல்
எழுத முடியாதே
என்று யோசித்தனர்

அரசர் இட்ட
கட்டளையை
எப்படி முடிப்பது
எத்தனை ஆட்களைக்
கொண்டு முடிப்பது
என்று தான் யோசித்தனர்

இவர்கள் தான்
கஷ்டப்பட்டு
வேலை செய்பவர்கள்

செய்த வேலையை
தொடர்ந்து செய்து
கொண்டிருப்பார்கள்

கஷ்டப்பட்டு வேலை
செய்பவர்கள் அனைவரும்
தொடர்ந்து தாங்கள்
செய்த வேலையை
திரும்ப
திரும்ப செய்வார்கள்

இந்தப் புலவர்கள்
அனைவரும் ஒரே
விஷயத்தைத் தான்
யோசித்தனர்
எப்படி நான்கு கோடி
பாடல் எழுதுவது
என்பதை மட்டும் தான்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////