April 30, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


    
ஔவையார்-நான்கு கோடி பாடல்-பதிவு-10


"""""உண்ணீர் உண்ணீரென்று
உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"""""

விருந்தினராக வருபவர்களை
உபசரிப்பதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று   : வேறுபாடு காட்டி
           உபசரிப்பது

இரண்டு : வேறுபாடு காட்டாமல்
          உபசரிப்பது

நாம் ஒரு
வேலையாக
ஒரு இடத்திற்கு
செல்கிறோம்
ரொம்ப நேரம்
ஆகி விட்டது
எதிர்பாராத விதமாக
தெரிந்தவர் வீட்டிற்கு
செல்ல வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டு
விட்டது
அவர் வீட்டில்
சாப்பாடு சாப்பிடச்
சொல்கிறார்கள்

நாம் அவர் வீட்டில்
சாப்பிடுகிறோம்
நமக்கு ஒரு
சாப்பாடு போட்டு
அவரும்
அவருடைய குடும்பமும்
வேறு ஒரு
சாப்பாடு
சாப்பிடுகிறார்கள்
அவர்கள் அனைவரும்
நல்ல சாப்பாடும்
நமக்கு ஏதோ
ஒரு சாப்பாடும்
போட்டு சாப்பிட
சொல்கிறார்கள்
இது வேறுபாடு
காட்டி
சாப்பாடு போட்டு
உபசரிப்பது

ஒரு சில
வீடுகளில் பார்த்தால்
சாப்பிட
போகும் போது
சாப்பாடு உள்ள
பாத்திரங்கள்
சாப்பாடு போட்டு
சாப்பிட வேண்டிய
பாத்திரங்கள் என்று
உணவு வகைகள்
அனைத்தையும்
கொண்டு வைத்து
அறையில் வைத்து
அனைவரையும்
ஒன்றாக
அமரச் சொல்லி
அனைவருக்கும்
சாப்பாடு போட்டு
சாப்பிடச் சொல்வது
மட்டும் இல்லாமல்
அனைவரும்
ஒன்றாக அமர்ந்து
சாப்பிடுவார்கள்
இது
வேறுபாடு காட்டாமல்
உபசரித்து சாப்பாடு
போடுவது ஆகும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////


No comments:

Post a Comment