நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-15
முருங்கைக் கீரை
அற்புதமான
மருந்துப் பொருளாகும்
முருங்கைக் கீரையை
மருத்துவப் பொக்கிஷம்
என்று சொல்லலாம்
முருங்கைக் கீரையைப்
போல்
அனைத்து
நோய்களையும்
தீர்க்கும் சக்தி
வேறு எந்த
கீரைக்கும் கிடையாது
முருங்கைக் கீரை
உடல் சூட்டைத்
தணிக்கும்
உடல் சூடு அதிகம்
உள்ளவர்கள்
முருங்கைக் கீரை
சாப்பிட்டு வர
உடல் சூடு தணியும்
முருங்கைக் கீரையில்
விட்டமின் ஏ, பி, சி
சத்துக்களும்,
சுண்ணாம்புச் சத்து,
புரதம்,
இரும்பு,
கந்தகம்,
குளோரின்,
தாமிரம்,
கால்சியம்,
மெக்னீசியம்
போன்ற
சத்துக்களும் உள்ளன.
முருங்கைக் கீரையை
உணவில்
சேர்த்துக் கொள்வதால்
உடலுக்கு
நோய் எதிர்ப்பு
சக்தியும்,
உடலுக்கு
வலிமையும்,
உறுதியும்
கிடைக்கிறது
ஒரு நபருக்கு
தினந்தோறும்
வைட்டமின் ஏ
5000 I.U.(Internatiional
Unit)
தேவைப்படுகிறது.
ஒரு வேளை
சாப்பிடும்
முருங்கைக் கீரையில்
வைட்டமின் ஏ
3260 I.U.(Internatiional
Unit)
கிடைக்கிறது.
மனிதனுக்கு
தேவைப்படும்
20 அமினோ அமிலங்களில்
18 அமினோ அமிலங்கள்
முருங்கைக் கீரையில்
உள்ளது
மனித உடலால்
தயாரிக்கப்பட இயலாத
8 அத்தியாவசிய
அமினோ அமிலங்கள்
இறைச்சியில்
மட்டுமே கிடைக்கும்
அந்த 8 அமினோ
அமிலங்களையும்
கொண்ட
ஒரே சைவ உணவு
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரையில்
தயிரில் இருப்பதை விட
2 மடங்கு அதிக புரதமும்,
ஆரஞ்சுப் பழத்தில்
உள்ளதைப் போல
7 மடங்கு அதிக
வைட்டமின் சி யும்,
வாழைப்பழத்தில்
உள்ளதை விட
3 மடங்கு அதிக
பொட்டாசியமும்,
கேரட்டில்
உள்ளதைப் போல்
4 மடங்கு அதிக
வைட்டமின் ஏ வும்,
பாலில் உள்ளதைவிட
4 மடங்கு
அதிக கால்சியமும்,
கடல் பாசியை விட
3 மடங்கு அதிக
இரும்புச் சத்தும்,
இருக்கிறது
பழங்காலத்தில்
அரசர்கள்
வீரர்களுக்கு
முருங்கைக் கீரையை
உணவாகக் கொடுத்து
வந்துள்ளனர்
அதனால்
அவர்கள்
உடல்
வலிமையுடனும்
உறுதியுடனும்
போர் புரிந்தனர்
என்று கூறுகின்றனர்
வரலாற்று
ஆய்வாளர்கள்
முருங்கைக் கீரையில்
உள்ள
அதிசயிக்கத் தக்க
மருத்துவ
குணங்களை
கருத்தில் கொண்டு
அதை
சாப்பிடச் சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
----------
இன்னும் வரும்
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment