நம்
முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-2
மக்கள் நடமாட்டம்
அதிகம் இல்லாத
அடர்ந்த காட்டில்
ஒரு பகுதியில்
குடில் அமைத்து
ஒரு குருவும்
பல சீடர்களும்
வாழ்ந்து வந்தார்கள்
அவர்கள் அனைவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட
அன்றாடபணிகள்
அனைத்தையும்
முடித்து விட்டு
மாலை வந்ததும்
ஒன்றாகக் குடிலில்
கூடுவார்கள்.
மாலை 06.00 மணிக்கு
குரு சீடர்களுக்கு
சொற்பொழிவின் மூலம்
ஆன்மீகக் கருத்துக்களையும்,
கடைபிடிக்க வேண்டிய
ஒழுக்கங்களையும்,
பின்பற்ற வேண்டிய
பழக்க வழக்கங்களைப்
பற்றியும் சொற்பொழிவு
ஆற்றுவார்
அவ்வாறு ஒரு நாள்
குரு சொற்பொழிவு
ஆற்றிக் கொண்டிருக்கும்போது
ஒரு பூனை அங்கும்
இங்கும் ஓடியது,
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது
இரண்டாம் நாள்
குரு பேசும்போதும்
முதல் நாள் வந்த
அந்த பூனையே
மீண்டும் அந்த
குடிலைச்சுற்றி
சுற்றி வந்தது
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது
எனவே, குரு
அந்த பூனையை பிடித்து
தன் பேச்சு
முடியும் வரை.
தூணில் கட்டி
வைக்கச் சொன்னார்
மூன்றாம் நாளும்
அந்த பூனை
இடையூறு செய்தது
குரு தன்
சீடர்களை நோக்கி
நாளை முதல் நான்
பேச்சை ஆரம்பிப்பதற்கு
முன்னர் அந்த பூனை
எங்கிருந்தாலும் கண்டு
பிடித்து கொண்டு வந்து
என் கண்ணில் படுமாறு
பூனையை தூணில்
கட்டி வைக்க வேண்டும்
என்று ஆணை இட்டார்
அவ்வாறே நான்காம் நாள்
சீடர்களும் குரு பேச்சை
ஆரம்பிப்பதற்கு முன்
பூனையை
தேடிக்கண்டு பிடித்து
குருவின் பார்வையில்
படும்படி
குருவின் அருகில் உள்ள
ஒரு தூணில் கட்டி
வைத்து விட்டனர்.
இவ்வாறே தொடர்ந்து
வந்த நாட்களிலும்
குரு உரை ஆற்றும் முன்னர்
சீடர்கள் பூனை எங்கிருந்தாலும
அதை தேடிக்கண்டுபிடித்து
பிடித்து வந்து
குருவின் அருகில்
உள்ள ஒரு தூணில்
குரு கண்ணில் படுமாறு
கட்டி வைத்து விட்டனர்
சிறிது நாட்கள் கழிந்த பின்பு
குரு இறந்து விட்டார்
அதே நாளில் அந்த
பூனையும் இறந்து விட்டது
எனவே குருவுக்கு சமாதி
வைக்கும் போது
குரு அருகிலேயே
பூனையையும் அடக்கம்
பண்ணி விட்டனர்.
குருவுக்கு செய்ய
வேண்டிய காரியங்கள்
அனைத்தும்
முடிந்த பின்பு
அடுத்த ஒருவர்
குரு என்ற நிலைக்கு
வந்தார்.
அவர் முதல் நாள்
மாலை பேச ஆரம்பிக்கும்
போது கோபத்துடன்
சீடர்களை நோக்கி
குரு பேசும்போது
தூணில் ஒரு பூனை
கட்ட வேண்டும்
என்ற முறை உங்களுக்கு
தெரியாதா
முதலில் ஒரு பூனையை
பிடித்து வாருங்கள்
அதை அந்த
தூணில் கட்டுங்கள்
நான் பேசுகிறேன் என்றார்
தனக்கு முன்னால்
இருந்த குரு
பேசும் போது
பூனையை எதற்காக
தூணில் கட்டி வைத்தார்
என்ற விவரம் கூட
தெரியாமல்
அடுத்த வந்த குரு
தனக்கு முன்னால்
இருந்த குரு பின்பற்றிய
அதே முறையை
பின்பற்றி
தான் பேசும் போதும்
பூனையை தன் கண்ணில்
படுமாறு தூணில்
கட்டி வைக்கச் சொல்கிறார்.
இதைப்போலத்
தான் நாம்
நம்முடைய
முன்னோர்கள்
நமக்கு
சொல்லி
விட்டுச்
சென்ற
பழக்க
வழக்கங்களில்
உள்ள
அர்த்தம்
சரியா
தவறா
என்று
புரியாமல் நாம்
சடங்குகளையும்
பண்டிகைகளையும்
விழாக்களையும்
பின்பற்றி
வருகிறோம்.
---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////
No comments:
Post a Comment