நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-24
வீபிஷ்ணன்
தன் அண்ணன்
இராவணனிடம்
சீதையைக்
கவர்ந்து வந்து
சிறை வைத்தது
தவறு என்று
எவ்வளவோ
எடுத்துச் சொல்லியும்
இராவணன் கேட்காததால்
வீபிஷ்ணன்
இராவணனை விட்டுப்பிரிந்து
வெளியே வந்தான்
வீபிஷ்ணன்
இராமரிடம் சேருவதற்காக
அவரிடம் வந்தார்
இராமர் வீபிஷ்ணனை
தன்னுடன் சேர்த்துக்
கொள்வதற்கு முன்
தன்னுடன் இருப்பவர்களின்
கருத்தைக் கேட்டார்
அதில் அனைவரும்
அண்ணன் என்பவன்
தெய்வத்திற்கு சமம்
அவனை காட்டிக்
கொடுக்க வந்த
வீபிஷ்ணன் கெட்டவன்
சகோதரத் துரோகி
சீதையைக்
கவர்ந்து சென்ற
இராவணின் தம்பி
அவனைச் சேர்க்கக்
கூடாது என்று
சுக்ரீவன், ஜாம்பவான்,
நீலன், அங்கதன்
போன்றோர்
ஒரே மாதிரியாகத்
தெரிவித்தனர்
இராமர் அனுமாரிடம்
கேட்டார்
அதற்கு அனுமார்
“””””கண்டவர்கள்
பேச்சைக்
கேட்காதீர்கள்”””””
“””””கண்டவன்
பேச்சைக்
கேளுங்கள்”””””
என்றார்
கண்டவர்கள் பேச்சைக்
கேட்காதீர்கள் என்றால்
வீபிஷ்ணன்
எத்தகைய குணங்களை
உடையவன்
எத்தகைய தன்மைகளை
உடையவன்
என்பதை அறியாதவர்கள்
பேசும் பேச்சு
அதைக் கேட்காதீர்கள்
என்று பொருள்
கண்டவன் பேச்சைக்
கேளுங்கள் என்றால்
வீபிஷ்ணன்
என்பவர் யார்
அவர் எப்படிப் பட்டவர்
எத்தகைய
தன்மைகளை உடையவர்
எத்தகைய
குணங்களை உடையவர்
என்பதை நேரில்
கண்டவன் நான்
என்னுடைய பேச்சைக்
கேளுங்கள்
என்று பொருள்
நான்
இலங்கை சென்று
சீதா தேவியைத்
தேடியபோது
வீபிஷ்ணன்
அரண்மனையைப் பார்த்தேன்
அங்கே சிவலிங்கம்
இருந்தது
சிவ பூஜைக்குரிய
பொருள்கள் இருந்தது.
வீபிஷ்ணர் சிவபூஜை
பண்ணுகின்றவர்
அரக்கர் குலத்தில்
பிறந்த நல்லவன்
அரக்கர்கள் வீட்டில்
ஏராளமான மதுப்பாட்டில்கள்
இருந்தபோது
வீபிஷ்ணன் வீட்டில்
பூஜைக்குரிய பன்னீர்
பாட்டில்களே நிரம்ப
இருந்தன
இராவணன் என்னைக்
கொல்ல வேண்டும்
என்று சொன்னபோது
வீபிஷ்ணன்
மாதரையும், தூதரையும்
கொல்லக்கூடாது என்று
இராவணனைத் தடுத்தார்
வீபிஷ்ணன் பரம சாது
வீபிஷ்ணன் தீயவன்
அல்லன்
நல்லவன்
எனவே அடைக்கலமாய்
வந்த வீபிஷ்ணனை
நாம் சேர்த்துக் கொள்ளலாம்
என்கிறார் அனுமார்.
கண்டவர்கள் பேச்சைக்
கேட்காதீர்கள்
கண்டவன் பேச்சைக்
கேளுங்கள்
என்று சொன்ன
அனுமாரின்
சொல்லின் மூலம்
கவிச் சக்கரவர்த்தி
கம்பரின் கவித்திறத்தை
நாம் தெரிந்து
கொள்ளலாம்
இதிகாசத்திலும்
தமிழ் வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள் என்பதை
நாம் நினைவில்
கொள்வோம்
---------
இன்னும் வரும்
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment