June 17, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-25


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-25

இராமர் அனுமாரை நோக்கி
நாங்கள் சுக்ரீவனைத்
தேடிக் கொண்டு வருகின்றோம்
அவனைக் காட்டு நாங்கள்
பார்க்க வேண்டும் என்கிறார்

நீங்கள் சுக்ரீவனைத் தேடிக்
கொண்டு வருவீர்களானால்
அவர் வாழ்வு உய்யும்
வாய்க்கால் மகாநதியை
நோக்கிச் செல்ல வேண்டும்
மகாநதி வாய்க்காலை
நோக்கிச் செல்லக்கூடாது
நீங்கள் மகாநதி
சுக்ரீவன் வாய்க்கால்
நீங்கள் இங்கேயே
இருங்கள்
நான் என் தலைவனாகிய
சுக்ரீவனை அழைத்துக்
கொண்டு வருகிறேன்
என்றார் அனுமார்.

நம் முன் நிற்பவர்கள்
யார் என்று தெரியாமல்
அவர்களைப் பற்றித்
தெரிந்து கொள்ளாமல்
தகுதி நிறைந்தவர்கள்
யார் என்று தெரியாமல்
தகுதி நிறைந்த
பெரியோர்களை நீங்கள்
யார் என்று கேட்பது
நியாயமாகாது

அதனால் அனுமார்
இராம இலட்சுமணரைப் பார்த்து
நீங்கள் யார் என்று
நேரடியாகக் கேட்காமல்

“””””யார் அழைப்பதாக
என் தலைவனான 
சுக்ரீவனிடம் நான்
கூற வேண்டும்
தங்களை யாரென்று
அவரிடத்தில் தெரிவிக்க
வேண்டும்””””””””

என்று
இராம இலட்சுமணரிடம்
அனுமார் கேட்டார்.

தங்களை யார் என்று
அறிந்து கொள்ளும்
பொருட்டு
சாதுர்யமான
வார்த்தையின் மூலம்
அனுமார் பேசிய
வார்த்தைகளைக் கண்டு
இராமர் மகிழ்ந்தார்.

இவன் கல்லாத கலைகளே
இல்லை என்பது
இவன் கூறிய
சொல்லாலேயே இவன்
யாரென்று விளங்குகின்றது
இவன்
“”””””சொல்லின் செல்வனாக””””””
இருக்கின்றான்

இவன் நம்மை யார் என்று
நேரடியாக கேட்காமல்
என் தலைவனுக்கு
உங்களை யாரென்று
சொல்லுவேன் என்று
கேட்கின்ற சொல்திறம்
மிகவும் பாராட்டுக்குரிது.
என்று இராமர்
இலட்சுமணரைப்
பார்த்து கூறினார்.

சிறிய தாயாரின்
சொல் கேட்டு தன்
அரசச் செல்வத்தைத்
தன் தம்பியாகிய
பரதனுக்கு வழங்கி விட்டு
வந்திருக்கின்றார்
நான் இவருடைய பணியாளர்
என்கிறார் இலட்சுமணர்.

இலட்சுமணரின் சொல் கேட்டு
வந்திருப்பவர்கள்
இராம, இலட்சுமணர்கள்
என்று அனுமார்
தெரிந்து கொண்டார்.

அனுமார் தன் தலைவனான
சுக்ரீவனை அழைத்து வருவதாகக்
கூறிவிட்டு சுக்ரீவனிடம் போய்
இராம இலட்சுமணர்கள்
வந்திருக்கிறார்கள்
என்று கூறாமல்
“”””””வாலிக்குக்
   காலன் வந்திருக்கின்றார்””””””
என்றார் அனுமார்.

சுக்ரீவன் வாலிக்கு
பயந்து மறைந்து வாழ்கின்றார்
அவனுக்கு இராமர்
வந்திருக்கின்றார் என்றால்
அவனுடைய அச்சம் அகலாது

சுக்ரீவனுக்கு யாரிடம்
அச்சம் அகலாமல்
இருக்கின்றதோ
அவனுக்கு எமன்
வந்திருக்கின்றான்
அதாவது வாலியைக்
கொல்ல எமன் வந்திருக்கின்றான்
என்ற பொருளில்
வாலிக்குக் காலன்
வந்திருக்கின்றான்
என்று சொன்ன
அனுமாரின் சொல்லின்
திறன் பாராட்டுக்குரியது

இத்தகைய
காரணங்களினால் தான்
நாம் அனுமாரை
சொல்லின் செல்வன் என்கிறோம்
கம்பரை கவிச்
சக்கரவர்த்தி என்கிறோம்

இராமாயணத்தின் மூலம்
தமிழை வளர்த்த
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment