July 31, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-52


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-52
இராமர் தான்
அமர்ந்து இருந்த
இருக்கையை விட்டு
எழுந்து சென்று
ஶ்ரீநிவாசனை
நோக்கி ஓடினார்.
இராமர் முதலில்
அவனை அடிக்கட்டும்
பின்னர் எல்லோரும்
சேர்ந்து அவனை
அடிப்போம் என்று
அனைவரும் எண்ணினார்கள்.

இராமர் ஶ்ரீநிவாசனை
நோக்கி ஓடி
அவனைக் கட்டியணைத்து
தன்னுடைய மார்புடன்
அன்புடன் தழுவிக்
கொண்டார்,
நண்பா நேற்று
தான் வந்தேன்
உன்னைக் காண
வேண்டும் என்று
நினைத்தேன் துடித்தேன்
நல்ல வேளையாக
நீயே வந்து விட்டாய்
நான் மிகுந்த
மகிழ்ச்சி அடைகிறேன்
என்று நண்பனை
அழைத்துக் கொண்டு
போய் அரியணை மீது
தன்னுடன் அமர்த்திக்
கொண்டார் இராமர்,
சபையில் பரபரப்பும்
அதிசயமும் ஏற்பட்டன

ஆச்சரியத்தால் அதிசயித்து
நின்ற சபையோர்களைப்
பார்த்து இராமர்
பேசத் தொடங்கினார்.

குருநாதா,
தம்பி பரதா,
இலட்சுமணா, சத்ருகனா,
ஆஞ்சநேயா, மன்னர்களே
பதினான்கு ஆண்டுகளாக
தீராத கவலை ஒன்று
என் மனதை வாட்டிக்
கொண்டிருந்தது
அந்த கவலை
இன்று தான் தீர்ந்தது

சித்திரகூட பருவதத்தின்
அருகில் மந்தாகினி
நதிக்கரையில் நான்
தங்கியிருந்த போது
தம்பி பரதன் வந்து
தந்தையார் பொன்னுலகம்
புகுந்தார் என்று சொன்னான்.

என்னுடைய பாசமிகு
தந்தையார் எனக்கு
முடிசூட்டி மகிழ
விரும்பினார்.
இந்த முடிசூட்டு
விழாவில் தந்தையார்
கலந்து கொண்டு
மகிழ்ச்சி அடைவதற்கு
வழி இல்லையே
என்று எண்ணி
எண்ணி வருந்தினேன்
இந்த உலகத்தில்
உள்ள எல்லோரும்
என்னை ராகவேந்திரா,
ரகுநாதா என்று
தான் அழைப்பார்கள்

இந்த உலகத்திலேயே
அப்பா ஒருவர்
மட்டும் தான் என்னை
“அடே ராமா!” என்று
பாசமழை பொழிய அழைப்பார்
எனவே என்னுடைய
மனக்கவலை
மாற “அடே ராமா!”
என்று அன்பு கனிய
அழைத்த என்னுடைய
நண்பனான ஶ்ரீநிவாசன்
தான் என் அப்பாவாகும்

என்னுடைய நண்பன்
ஶ்ரீநிவாசன் என் தந்தை
வடிவில் வந்து
“அடே ராமா!” என்று
அழைத்து என்
மனக்கவலையை
மாற்றி விட்டார்
என்று கூறி கண்ணீர்
சிந்தினார் இராமர்,

இந்த நிகழ்வைக்
கண்ட அனைவரும்
வியந்தனர்
இராமர், ஶ்ரீநிவாசன்
நட்பைக் கண்டு
அதிசயித்தனர்,


இராமர்
மிகப்பெரிய அரசர்
அரசவையில் மன்னர்கள்
கூடியிருக்கிறார்கள்
மரியாதைக்குரிய
மனிதர்கள்
கூடியிருக்கிறார்கள்
என்று நினைக்காமல்
ஶ்ரீநிவாசன்
இராமரை நண்பனாக
மட்டும் பார்த்தான்
காலம் , இடம், நேரம்
பார்த்து தனது நட்பை
வெளிப்படுத்தவில்லை

தன்னுடைய நண்பனான
இராமருடைய நட்பை
மட்டுமே நினைத்தார்
அதனால் அரசவையில்
உள்ள யாரைப் பற்றியும்
கவலைப் படாமல்,
யாரேனும் ஏதேனும்
சொல்வார்களா என்று
அச்சமுறாமல்
அனைவர் முன்னிலையிலும்
“அடே ராமா!” என்று
நண்பனான இராமரை
உரிமையுடன்
நட்பு பொழிய அழைத்தார்.

இராமர் மேல்
எத்தகைய தூய்மையான
நட்பு கொண்டிருந்தானோ
அத்தகைய நட்பை
அரசவையில் அனைவர்
முன்னிலையிலும்
வெளிப்படுத்தினான்

அதைப்போல இராமரும்
காலம், இடம், நேரம்
பார்க்காமல் அரசவையில்
மன்னர்கள் கூடியிருக்கிறார்கள்
மரியாதைக்குரிய மனிதர்கள்
கூடியிருக்கிறார்கள்
தன்னுடைய உறவினர்கள்
கூடியிருக்கிறார்கள்
என்பதை நினைக்காமல்
தன்னுடைய நண்பன்
ஶ்ரீநிவாசனுடைய நட்பை
மட்டுமே நினைத்தார்
அதனால் அரசவையில்
உள்ள யாரைப் பற்றியும்
கவலைப் படாமல்,
யாரேனும் ஏதேனும்
சொல்வார்களா என்று
அச்சமுறாமல்
அனைவர் முன்னிலையிலும்
நண்பனைக் கட்டி
அணைத்துக் கொண்டார்,

ஶ்ரீநிவாசன் மேல்
எத்தகைய தூய்மையான
நட்பு கொண்டிருந்தாரோ
அத்தகைய நட்பை
அரசவையில் அனைவர்
முன்னிலையிலும்
வெளிப்படுத்தினார் இராமர்.

இதிலிருந்து ஶ்ரீநிவாசன்
இராமர் மேல்
வைத்த நட்பும்,
இராமர் ஶ்ரீநிவாசன்
மேல் வைத்த நட்பும்
எந்த சூழ்நிலையிலும்
ஒரே மாதிரியாக
இருக்கும் நட்பு
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்,

----------இன்னும் வரும்
------------31-07-2018
//////////////////////////////////////////////


No comments:

Post a Comment