அன்பிற்கினியவர்களே,
10-10-2018-ம் தேதி
அன்று பிறந்த நாள்
கொண்டாடும் எனக்கு
வாழ்த்து தெரிவித்த
அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும்
என் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
நான் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த
காலத்தில்
தலைப்பு கொடுத்தவுடன்
கவிதை எழுதும் பழக்கமும்,
ஒரு காட்சியைக்
காண்பித்தால் உடனே
கவிதை எழுதும் பழக்கமும்
எனக்கு இருந்தது
சில கவிதைகளுக்கு
என்று தனிப்பட்ட
கதைகள் உண்டு
அந்த கதைகளை
நான் நினைக்கும் போது
நான் எந்த நிலையில்
இருந்திருக்கிறேன்
என்பதை நினைத்துக்
கொள்வேன்
என்னுடன் படித்துக்
கொண்டிருந்த நண்பர்கள்
கவிதை எழுதுவதற்கு
சில சமயம் தலைப்பு
சொல்வார்கள்
சில சமயம் காட்சியைக்
காண்பித்து கவிதை எழுதச்
சொல்வார்கள் நான்
அவர்கள் சொன்னதற்கு
ஏற்ப கவிதைகள்
எழுதுவேன்
பெரும்பாலும் நான்
கவிதைகளை பேருந்து
பயணச்சீட்டின் பின்புறத்திலும்,
சிறு சிறு துண்டு பேப்பரிலும்
தான் எழுதினேன்
எங்கே நிற்கிறேனோ
அந்த இடத்திலேயே நின்று
கவிதை எழுதி விடுவேன்
அப்புறம் வீட்டிற்கு
வந்த உடன் நோட்டில்
எழுதி வைப்பேன்
அவ்வாறு நான்
கவிதைகள் எழுதிக்
கொண்டிருந்த காலத்தில்
ஒரு நாள் பேருந்து
நிலையத்தில் நான்
நண்பர்களுடன் நின்று
கொண்டிருந்தேன்
அப்பொழுது என்
நண்பர்கள் ஒரு
காதல் கவிதை எழுது
என்றார்கள்
நான் காதல் கவிதை
தானே எழுதித் தருகிறேன்
காட்சியை சொல்லு
அல்லது காட்சியைக்
காட்டு என்றேன்
ஒரு நண்பன் சொன்னான்
காதல் கவிதை
அகர வரிசையில்
இருக்க வேண்டும் என்றான்
சரி நான் எழுதுகிறேன்
ஆனால் கல்லூரியில்
சென்று எழுதுகிறேன்
என்றேன் இல்லை நீ
இங்கேயே எழுத
வேண்டும் என்றார்கள்
நான் எழுதாமல்
தப்பிப்பதற்காக
நான் சொல்கிறேன்
யாரேனும் எழுதுங்கள்
என்னை மறுபடியும்
கேட்கக் கூடாது
நான் ஒரு முறை தான்
கூறுவேன் என்று கூறினேன்
நாங்கள் எழுதுகிறோம்
நீ சொல்லு என்றார்கள்
இந்த பதிலை நான்
எதிர்பார்க்கவில்லை
சரி என்று நான்
நிதானமாக மெதுவாக
ஒரு ஒரு
வார்த்தையாக சொன்னேன்
சொன்ன வார்த்தையை
நான் மீண்டும் திருப்பி
சொல்லவேயில்லை
நான் கண்ணை மூடிக்
கொண்டு தொடர்ச்சியாக
கவிதையைக் கூறி முடித்து
நண்பர்களைப் பார்த்தேன்
உணர்ச்சி வசப்பட்டு
ஒரு நண்பன் சொன்னான்
நண்பா இன்று நாம்
ஓட்டலுக்கு போகிறோம்
என்ன வேண்டுமானாலும்
சாப்பிடு அனைத்து
செலவும் என்னுடையது
என்றான்
மற்ற நண்பர்களும்
சொன்னார்கள்
நாங்கள் அனைவரும்
சேர்ந்தே செய்கிறோம்
இன்று முழுவதும்
சுற்றப் போகிறோம்
உனக்கு என்ன
வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்
செலவுகள் அனைத்தும்
எங்களுடையது என்று
சொன்னார்கள்
நான் வேண்டாம் என்று
எவ்வளவு எடுத்துச்
சொல்லியும் யாரும்
என்னை விடவில்லை
நண்பர்களுடன் அன்று
முழுவதும் பொழுதைக்
கழித்தேன்
நான் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்தபோது
நடந்த இன்பமான
நிகழ்வுகளை நினைத்துக்
கொண்டிருந்தபோது
இந்த நிகழ்வும்,
நான் கையினால் எழுதாமல்
வாயினால் வார்த்தையால்
சொல்லிய அந்தக்
கவிதையும் என்
நினைவுக்கு வந்தது
அந்தக் கவிதை இது தான்
“அ ன்பே
ஆ சையுடன் கேட்கிறேன்
இ ல்லை என்று
சொல்லாதே
ஈ ந்து விடு
உன் இதயத்தை
உ னக்காகத் தான் நான்
ஊ ரைப்பற்றி
கவலைப்படாதே
எ ன்னுடன் ஓடிவா
ஏ க்கம் கொள்ளாதே
ஐ யப்பாட்டை நீக்கி
வா
ஒ ன்றாக இருப்போம்
ஓ ரிடத்தில்-நீ
ஔ வையாராய்
ஆனாலும்
உன்னை நான்
காப்பாற்றுவேன்”
என்ற கவிதையைஅன்று
நான் சொல்லிய போது
நான் எத்தகைய நிலையில்
இருந்திருக்கிறேன் என்பதை
என்னுடைய பிறந்த
நாளான இன்று நினைத்துப்
பார்த்துக் கொள்கிறேன்
என்னுடைய பிறந்த
நாளில் அந்த நிகழ்வை
நான் தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில்
நான் மனம் மகிழ்கிறேன்
என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
No comments:
Post a Comment