November 27, 2018

திருக்குறள்-பதிவு-59


                      திருக்குறள்-பதிவு-59

பூமியை மையமாக
வைத்து சூரியன் சுற்றுகிறது
என்று பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டைச்    
சொல்லி கிறிஸ்தவ
மடாதிபதிகளின் நேரடி
கோபத்திற்கு ஆளாகி
பல்வேறு பட்ட
துன்பங்களுக்கு
உள்ளாக்கப் பட்டவர்களில்
முக்கியமாக மூன்று
பேரைக் குறிப்பிடலாம்.

சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை
போலந்து மேதை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் (1473 – 1543)
என்பவர் சொல்லிச்
சென்ற பிறகு அவருக்குப்
பின்னால் வந்த
இத்தாலிய மேதை
கலிலியோ (1564 – 1642)
மட்டும் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று சொல்லவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும்
இடையில் வந்த
ஒரு விஞ்ஞானி
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்ற கோட்பாட்டை
சொல்லி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும் இடையில்
ஒரு விஞ்ஞானியின்
மறக்கப்பட்ட வரலாறு
ஒன்று இருக்கிறது
என்று சொல்லலாம்
(அல்லது)
மறக்கடிக்கப்பட்ட
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்
(அல்லது)
மறைந்து கொண்டிருக்கும்
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்
(அல்லது)
நினைவூட்டத் தவறிய
வரலாறு ஒன்று
இருக்கிறது என்று
சொல்லலாம்

ஆமாம்
இந்த உலகத்தால்
மறக்கடிக்கப் பட்ட
மாபெரும் வரலாற்றுக்குச்
சொந்தக்காரர்;
ஒரு மாபெரும்
விஞ்ஞானி என்ற
போற்றுதலுக்குரியவர்;
தன்னுடைய உயிரைப்
பற்றி கவலைப்படாமல்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்று
சொன்னவர் ;
அதன் விளைவாக
கிறிஸ்தவ மடாதிபதிகள்
கிறிஸ்தவ மதவாதிகள்
ஆகியோரின்
கோபத்திற்கு ஆளானவர் ;

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்ற
விஞ்ஞானிக்கும்
கலிலியோ என்ற
விஞ்ஞானிக்கும்
இடையில் வந்தவர்
அவர் தான்
இத்தாலிய மேதை
கியோர்டானோ புருனோ
(1548 – 1600)

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கிறிஸ்தவ மடாதிபதிகளால்
அவமானப்படுத்தப்பட்டு
மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டு
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இறந்தார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கியோர்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
கலிலியோ
வீட்டுக் காவலில்
வைத்து கொல்லப்பட்டார்

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று பைபிளில்
உள்ள கருத்திற்கு
எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
மூன்று மாபெரும்
விஞ்ஞானிகள்
கொடுமைப்படுத்தப்பட்டு
இறந்தனர்

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
அவமானப் படுத்தப்பட்டு
மன்னிப்பு கேட்க
வைக்கப்பட்டார் என்றால்
அவர் எதற்காக
மன்னிப்பு கேட்டார்
என்பதையும் ,
கியோர்டானோ புருனோ
உயிருடன் எரித்து
கொல்லப்பட்டார் என்றால்
அவர் எதற்காக உயிருடன்
கொளுத்தப்பட்டார்
என்பதையும்
கலிலியோ
வீட்டுக் காவலில்
வைத்து கொல்லப்பட்டார்
என்றால் அவர் எதற்காக
கொல்லப்பட்டார்
என்பதையும்
நாம் தெரிந்து கொண்டால்
தான் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது என்ற
கருத்தை நிரூபிக்க
விஞ்ஞானிகள் எவ்வளவு
கஷ்டங்களை அனுபவித்தார்கள்
என்பது நமக்கு தெரியும்

---------  இன்னும் வரும்
---------  27-11-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment