December 16, 2018

திருக்குறள்-பதிவு-68


                       திருக்குறள்-பதிவு-68

1576-ஆம் ஆண்டு
ஜியார்டானோ
புருனோ
ரோமை விட்டு
வெளியேறினார்

அவர் முதலில்
ஜெனிவா (Geneva)
சென்றார்

1579-ஆம் ஆண்டு
ஜெனிவாவிலிருந்து
டௌலோவ் (Toulouse)
சென்றார்

அங்கு
1579 முதல் 1581 வரை
இரண்டு ஆண்டுகள்
தங்கினார்
முதுகலை
பட்டம் பெற்றார்
கற்பித்தல் தொழிலை
நடத்தி வந்தார்

ஜியார்டானோ புருனோ
காலத்தில்
அரிஸ்டாட்டில்
சொல்வது தான்
சரியானது என்றும்
அது தான் அறிவியல்
என்றும் இருந்தது

அரிஸ்டாட்டில்
சொன்னால்அனைத்தும்
சரியானதாக இருக்கும்
என்று அனைவரும்
கண்மூடித்தனமாக
நம்பிக் கொண்டிருந்த
காலகட்டம்

அந்தக் காலகட்டத்தில்
வாழ்ந்த மக்கள்
ஒருவர் கூட
அரிஸ்டாட்டில்
சொன்ன கண்டுபிடிப்பில்
தவறு இருக்கிறது
என்று சொன்னால்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்

நாம் ஒருவரை
கண்மூடித் தனமாக
நம்பி விட்டால்
அவர் உண்மையாக
தப்பு செய்து
இருந்தாலும்
அவர் தப்பு
செய்திருக்கிறார்
என்று பிறர் சொன்னால்
நாம் அந்த உண்மையை
ஏற்றுக் கொள்ள
மாட்டோம்

அத்தகைய ஒரு
மனநிலையில்
அதாவது
அரிஸ்டாட்டில் செய்த
தப்பை சொன்னாலும்
அதை ஏற்றுக்
கொள்ளாத மன
நிலையில்
மக்கள் இருந்தனர்

அதாவது மக்கள்
அனைவரும்
அரிஸ்டாட்டிலின் மீதும்
அவருடைய அறிவியல்
கண்டுபிடிப்பின்
மீதும் அளவற்ற
நம்பிக்கை
வைத்து இருந்தனர்
அரிஸ்டாட்டிலை
விஞ்ஞான
உலகத்தின் கடவுளாக
நினைத்திருந்தனர்

அந்த
காலகட்டத்தில் தான்
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து பல்வேறு
விதமான கருத்துக்களை
வலியுறுத்தி
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்களை
தப்பு என்று
எடுத்துக் காட்டுகளுடன்
எடுத்துச் சொல்லி
கட்டுரைகள்
எழுதி இருந்தார்

ஆண்களுக்கும்
பெண்களுக்கும்
பற்களின்
எண்ணிக்கை வேறுபடும்
பெண்களின் பற்களின்
எண்ணிக்கை
ஆண்களின் பற்களின்
எண்ணிக்கையை
விட குறைவு
என்று அரிஸ்டாட்டில்
எழுதி இருந்தார்

அதைத் தவறு
என்று சுட்டிக் காட்டி
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அதுமட்டுமல்லாமல்
அரிஸ்டாட்டிலின்
பெரும்பாலான
கருத்துக்கள்
பைபிளில் உள்ள
கருத்துக்களுடன்
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினால்
ஜியார்டானோ  புருனோ
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து
கருத்து சொன்னது
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
மறைமுகமாக
ஜியார்டானோ
புருனோ எதிர்க்கிறார்
என்ற நிலையை
உருவாக்கி விட்டது

அரிஸ்டாட்டிலின்
கருத்து தவறு என்றால்
பைபிளின் கருத்தும்
தவறு என்று தானே
அர்த்தம்

பைபிளை மக்களிடம்
கொண்டு செல்லும்
கத்தோலிக் கிறிஸ்தவ
திருச்சபையின்
செயல்களும் தவறு
என்று தானே அர்த்தம்

ஜியார்டானோ புருனோ
அரிஸ்டாட்டிலின்
கருத்தை தவறு
என்று சொன்னதன்
மூலமாக
மறைமுகமாக
பைபிளையும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும்
இழிவு படுத்தியது
போல் ஆகிவிட்டது

எனவே
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
ஜியார்டானோ புருனோ
மீது அளவற்ற
கோபம் கொண்டது

அதன் விளைவாக,
ஜியார்டானோ புருனோ
டௌலோவ்விலிருந்து
பிரான்ஸ் நோக்கி
1581-ஆம் ஆண்டு
பயணம் செய்ய
வேண்டியது
ஆகிவிட்டது

---------  இன்னும் வரும்
---------  16-12-2018
///////////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment