திருக்குறள்-பதிவு-113
“ 17-02-1600-ஆம்
ஆண்டு ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடமானது
வாட்டிகனுக்கு
அருகில் மிக
நெருங்கிய
இடத்தில் இருந்தது “
“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருந்த
செயல்பாடுகளில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
போராடியவரும் ;
கிறிஸ்தவர்களால்
பின்பற்றப்பட்டு வந்த
மத நம்பிக்கைகளை
மாற்ற வேண்டும்
என்று முயற்சி
செய்தவரும் ;
பைபிளில் உள்ள
கருத்துக்களுக்கு
எதிராக கருத்து
சொன்னவருமான ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையால்
கொல்லப்பட்டவருமான ;
ஜியார்டனோ
புருனோவினுடைய
சிலையை
வாட்டிகனுக்கு அருகில் ;
வாட்டிகனுக்கு எதிராக ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு
அருகில் ;
நிறுவுவது என்பது
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையையும் ;
கிறிஸ்தவர்களையும் ;
இழிவு படுத்தும்
விதத்தில் அமையும்
என்ற காரணத்தினால்
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில்
ஜியார்டானோ
புருனோவினுடைய
சிலையை
வைக்கக்கூடாது என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
கிறிஸ்தவர்களும் ;
சர்ச்சுகளும் ;
எதிர்ப்பு தெரிவித்தன “
“ஆனால் பல்வேறு
தரப்பட்ட இடங்களில்
இருந்து வந்த
எதிர்ப்புகளை
எல்லாம் கடந்து
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில்
ஜியார்டானோ
புருனோவுக்கு
முழு உருவ
வெண்கல சிலை
அமைப்பதற்கான
ஏற்பாடுகள்
1885-ஆம் ஆண்டு
தொடங்கியது :
“ ரோம் நகரத்தின்
பல்கலைக் கழகத்தில்
படித்துக்
கொண்டிருந்த
மாணவர்கள்
அனைவரும்
ஒரு குழுவாக
இருந்து செய்த
முயற்சியாலும் ;
விக்டர் ஹ்யூகோ
(Victor Hugo - France)
ஹொன்றிக் இப்சன்
(Henrik Ibsen - Norway)
போன்ற அறிவு
ஜீவிகளின்
ஒத்துழைப்பாலும் ;
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில் ;
ஜியார்டானோ
புருனோவுக்கு
முழு உருவ
வெண்கல சிலை
அமைப்பதற்கான ;
முயற்சிகள்
மேற்கொள்ளப்
பட்டன ; ‘
“ ஜியார்டானோ
புருனோவின்
முழுஉருவ வெண்கல
சிலையை உருவாக்க
எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
என்பவர் நியமிக்கப்
பட்டார் “
“ எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
ஒரு சிற்பி (Sculptor)
மட்டுமல்ல ;
இத்தாலி
பாராளுமன்றத்தின்
ஒரு துணைவராவார் ;
(Deputy in Italian
Parliament)
இது தவிர அவர்
XXV ரோமன்
நாட்டுப்புற
உறுப்பினராக இருந்தார் ;.
(Member of xxv
Roman Countryside) “
“ ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ வெண்கல
சிலை பல்வேறு
விதமான சிறப்புகளைத்
தன்னுள் கொண்டது“
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 26-02-2019
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment