March 21, 2019

திருக்குறள்-பதிவு-129


                        திருக்குறள்-பதிவு-129

"பிப்ரவரி 11, 1929
ஆம் ஆண்டு
ரோமானிய வினா
(Roman Question)
என்று அழைக்கப்படும்
லடான்
உடன்படிக்கையில்
(Latern Accords)
பெனிடோ முசோலினி
(Benito Mussolini)
மற்றும்
பியுஸ் XI (Pius XI)
ஆகியோர்
கையெழுத்து இட்டனர்"

" நவீன இத்தாலியின்
தலை நகரமாக
ரோம் அறிவிக்கப்பட்டது"

" வாட்டிகன் நகரத்தின்
புனிதப் பார்வையின்
இறையாண்மையை
ஏற்றுக் கொள்வதாகவும் ;

புனித பார்வைக்கு
ஏற்பட்ட சொத்துக்களின்
இழப்புக்களுக்காகவும் ;

இத்தாலியின்
ஒருங்கிணைப்புக்காக
முந்தைய நூற்றாண்டில்
ஏற்பட்ட மற்றும்
எடுக்கப்பட்ட முயற்சிகளின்
செலவுகளுக்காகவும் ;

ஒரு குறிப்பிட்ட
தொகையை இத்தாலி
கொடுக்க ஒப்புக்
கொண்டது; "

" ஒரு கூடுதல்
முயற்சியாக
முசோலினியிடம்
வாத்திகன் நகரம் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் - ஆக
மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்கள் சார்பாக
முசோலினி அவர்களிடம்
கோரிக்கை வைக்கப்பட்டது '

" ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது வைக்கப்பட்டு
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின் சிலை
உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களையும்
இழிவு படுத்தும் விதத்தில்
அமைந்திருக்கின்ற
காரணத்தினாலும் ;
உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
மனத்தை புண்படுத்தும்
விதத்தில்
அமைந்திருக்கின்ற
காரணத்தினாலும் ;
அந்த இடத்தில்
இருக்கின்ற
ஜியார்டானோ புருனோவின்
சிலையை அகற்ற
வேண்டும் என்றும் ;
அந்த இடத்தில்
பரிசுத்த தேவனும் ;
பிதாவின் குமாரனுமாகிய
இயேசு கிறிஸ்துவின் ;
சிலையை அங்கே
அமைக்க வேண்டும்
என்றும்; - முசோலினி
அவர்களிடம்
கோரிக்கை வைத்தனர், "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
சார்பாக கேட்டுக்
கொண்ட கோரிக்கையை
முசோலினி ஏற்றுக்
கொள்ளவில்லை ;"

"ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி
ஃபியோரியில்
(Campo dei Fiori)
நிறுவப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவினுடைய சிலை
மக்களுடைய ஆதரவிலும் ;
மக்களுடைய நேரடியான
பார்வையிலும் ;
அவர்களுடைய
பாதுகாப்பிலும் ;
இருக்கின்ற காரணத்தினால்
அந்த சிலையை
அந்த இடத்தில்
இருந்து எடுத்தால் ;
பல்வேறு விதமான
விரும்பத்தகாத
விளைவுகளை
ஏற்படுத்தி விடக்கூடும் ;
என்ற காரணத்தினால்
சிலையை அகற்ற
முடியாது என்று
முசோலினி மறுத்து
விட்டார் ; "

" உலகில் உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களின்
மனதை சாந்தப்படுத்தி
திருப்தி படுத்த வேண்டும்
என்ற காரணத்திற்காக ;
முசோலினியால் அந்த
இடத்தில் ஒரு
பழ அங்காடியை மட்டுமே
நிறுவ முடிந்தது ; "

" வாட்டிகன் நகரம் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆக மொத்தம்
உலகத்திலுள்ள
கிறிஸ்தவர்கள்  அனைவரும்
ஜியார்டானோ புருனோ
சிலையை அகற்றுவதற்காக
1929-ஆம் ஆண்டு எடுத்த
முயற்சி தோல்வியில்
முடிந்தது ;

" ஜியார்டானோ புருனோ
சிலை நிறுவப்பட்டுள்ள
இடத்திலிருந்து
அந்த சிலையை எடுக்க
முடியவில்லை  "

" மக்களுடைய
எழுச்சிக்கு முன்னால்
மதப்பற்று ;
அரசியல் அதிகாரம் ;
பொருளாதார மிரட்டல் ;
ஆகியவை ஒன்றும்
செய்ய முடியாது
என்பதை நாம்
உணர்ந்து கொள்ள
வேண்டும் ; "

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  21-03-2019
/////////////////////////////////////////////////////





No comments:

Post a Comment