3-ஜியார்டானோ
புருனோ உருவான
கதை
அன்பிற்கினியவர்களே,
திரைப்படத்
துறையில்
பணிபுரியும்
பலர்
என்னுடைய
நண்பர்கள்-அதில்
திரைக்கதை
வசனம்
எழுதுபவர்களில்
மிகவும் திறமை
வாய்ந்த
ஒருவர் என்னுடைய
நண்பர்
அவரை போனில்
தொடர்பு
கொண்டு பேசினேன்
நான்
அவரிடம் ஜியார்டானோ
புருனோ
என்பவருடைய
வாழ்க்கை
வரலாற்றை
எழுதிக்
கொண்டு வருகிறேன்
விசாரணைக்
காட்சிகளை
திரைக்கதை
வசனம் வடிவில்
எழுதலாம்
என்று இருக்கிறேன்
சரியாக
வருமா பார்த்துச்
சொல்லுங்கள்
- நான் அந்த
கதையைச்
சொல்கிறேன்
கேளுங்கள்
என்றேன்
அவர்
சொல் என்று
சொன்னவுடன்
நான்
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை
வரலாற்றை
எளிமையாக
புரியும்படி
சொன்னேன்-அமைதியாக
கேட்டுக்
கொண்டிருந்த அவர்
கதையை
நான் சொல்லி
முடித்ததும்
என்னிடம்
பேசத்
தொடங்கினார்
திரைக்கதை
வசனம்
எழுதும்
போது எளிமையானதாக
இருப்பதை
எடுத்து எழுத
வேண்டும்
குடும்ப கதை
காதல்
கதை எழுதினால்
எளிமையாக
எழுதுவதற்கு
உதவிகரமாக
இருக்கும்
வரலாற்றுக்
கதையை
கற்பனையில்
எழுதலாம்
உண்மை
வரலாற்றுக் கதையை
அதுவும்
ஜியார்டானோ புருனோ
போன்ற
சிக்கலான வரலாற்றுக்
கதையை
எழுதக் கூடாது
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை
வரலாறு என்பது
சிக்கலான
கதை அதற்கு
சரியான
விதத்தில் திரைக்கதை
வசனம்
எழுதவில்லை என்றால்
கதை
காமெடி படமாகிவிடும்
ஏற்கனவே
கொல்லப்பட்ட
ஜியார்டானோ
புருனோவை
மீண்டும்
கொன்றதாகி விடும்
ஆரம்பத்தில்
திரைக்கதை
வசனம்
எழுத ஆரம்பிப்பவர்கள்
எளிமையான
கதையாக
எடுத்து
எழுத வேண்டும்
இதைப்போன்ற
கதைகளை
தேர்வு
செய்வது என்பது
தவறாக
முடிந்து விடும்
என்று
அவர் சொல்லிக்
கொண்டிருக்கும்
போதே
நான்
சரி நீங்கள் எதுவும்
சொல்ல
வேண்டாம் நான்
எழுதுகின்ற
கதையை
உங்களுக்கும்
அனுப்புகிறேன்
படித்துப்
பாருங்கள் என்று
கோபத்துடன்
போனை
வைத்து
விட்டேன்
ஆனால்
யோசித்து பார்த்ததில்
அவர்
சரியாகத் தான்
சொன்னார்
நான் கோபப்பட்டது
தான்
தவறு என்று உணர்ந்தேன்
திரைக்கதை
வசனம்
சரியாக
அமையவில்லை
என்றால்
ஜியார்டானோ
புருனோ
என்ற புரட்சியாளரின்
வாழ்க்கை
வரலாறு
நகைப்புக்கு
இடமாகிவிடும்
எனவே,
திரைக்கதை வசனம்
சரியாக
அமைய வேண்டும்
என்று
பெரு முயற்சி
எடுத்து
விசாரணைக்
காட்சிகளை
எழுதினேன்
ஒவ்வொரு
விசாரணைக்
காட்சியும்
வித்தியாசமான
திரைக்கதையுடன்
அமைத்தேன்
ஜியார்டானோ
புருனோ
உயிருடன்
எரித்துக் கொல்லப்பட்ட
17-02-1600
அன்று வரை
அனைத்து
விசாரணைக்
காட்சிகளையும்
மிகுந்த
கவனத்துடன்
எழுதினேன்
17-02-2019
பல்வேறு தடைகளுக்கு
மத்தியில்
ஜியார்டானோ
புருனோவை
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
காட்சிக்கான
பதிவையும்,
வீடியோவையும்
பதிவு
செய்து விட்டேன்
அன்றைய
நாளில் இரவு
10.30
மணிக்கு எனக்கு
ஒரு
போன் கால் நான்
கோபப்பட்ட
திரைக்கதை
வசனம்
எழுதும் என்
நண்பர்
நான் உன்னிடம்
கொஞசம்
பேச வேண்டும்
என்றார்-
பேசுங்கள் என்றேன்
அவர்
பேசினார்
“
உன்னுடைய திரைக்கதை
வசனத்தால்
எழுதப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை
வரலாறு
அனைவருக்கும்
பிடிக்கும்”
“அதைப்போல
ஜியார்டானோ
புருனோவை
யாருக்கெல்லாம்
பிடிக்காதோ
அவர்களை
எல்லாம்
அழைத்து வந்து
நீ
எழுதிய திரைக்கதை
வசனம்
கொண்ட ஜியார்டானோ
புருனோ
வாழ்க்கை வரலாற்றை
படிக்கச்
சொன்னால்
ஜியார்டானோ
புருனோவை
பிடிக்காதவர்களுக்கும்
பிடிக்கும்
அதற்குக்
காரணம் திரைக்கதை
வசனத்தில்
நீ கையாண்டிருக்கும்
தமிழ்
என்று அவர் சொன்ன
போது
அவர் என் மேல் உள்ள
அன்பால்
அவ்வாறு சொன்னார்
என்பதை
உணர்ந்து கொண்டேன்
“தன்னிடம் என்ன திறமை
இருக்கிறது
என்பதை
கண்டுபிடிப்பதற்கு
காலம்
பல
வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுக்கிறது
! - அந்த
வாய்ப்புகளை
பயன் படுத்திக்
கொண்டு
தன்னிடம்
என்ன
திறமை இருக்கிறது
என்பதை
கண்டு பிடித்து
செயல்படுத்தத்
தெரிந்தவனால்
மட்டுமே
மக்கள் மனதில்
இடம்
பிடிக்கவும் முடியும் ;
இந்த
உலகத்தையே தன்னை
நோக்கி
திரும்பிப் பார்க்க
வைக்கவும்
முடியும்;-தன்னிடம்
என்ன
திறமை இருக்கிறது
என்பதை
கண்டு பிடிக்க
முடியாதவன்
இந்த உலகத்தை
பார்த்தவாறு
இருக்க வேண்டியது
தான்
என்ற ரகசியத்தை
தெரிந்து
கொண்டேன்
என்றும்
அன்புடன்
K.பாலகங்காதரன்
No comments:
Post a Comment