திருக்குறள்-பதிவு-133
“ கலிலியோ கண்களை
இழந்து குருடாகிப்
போன நிலையில்
கலிலியோ தரப்பில்
இருந்து - மருத்துவ
உதவிகள் பலமுறை
கேட்டும்…………………..? ”
“ கலிலியோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக !”
“கலிலியோ பைபிளில்
உள்ள கருத்துக்கு எதிராக
கருத்து சொன்னார்
என்ற காரணத்திற்காக !”
“கலிலியோ கிறிஸ்தவர்களின்
மனம் புண்படும் வகையில்
ஆண்டவரின் வார்த்தைகளை
ஏற்றுக் கொள்ளாமல் இழிவு
படுத்தும் விதத்தில் நடந்து
கொண்டார் என்ற
காரணத்திற்காக !”
“ கலிலியோ பல்லாண்டுகளாக
கிறிஸ்தவர்களால் உண்மை
என்று நம்பப் பட்டு
வருபவை அனைத்தும்
தவறானவை என்றும் ;
கிறிஸ்தவர்கள் தவறான
ஒன்றை பின்பற்றி
வருகிறார்கள் என்றும் ;
சொன்ன காரணத்திற்காக !”
சர்ச்சுகள் ;
கிறிஸ்தவர்கள் ;
ஆகியோர் கடுமையான
எதிர்ப்பு தெரிவித்ததால்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
கலிலியோவிற்கு
மருத்துவ உதவிகள்
எதுவும் அளிக்கவில்லை “
“காய்ச்சல், இதயநோய்
போன்ற பல்வேறு
நோய்களுக்கு ஆளான
கலிலியோவிற்கு
தகுந்த சிகிச்சை
அளிக்காத காரணத்தினால்
தள்ளாத வயதிலும்
தன்னுடைய அடிப்படைக்
கடமைகளைக் கூடச்
செய்ய முடியாமல்
கஷ்டத்துடன் வாழ்ந்து
வந்தார் கலிலியோ”
“ கலிலியோ கண்களை
இழந்து குருடாகிப்
போய் இருந்ததையும் ;
கலிலியோ தள்ளாத
வயதில் கஷ்டப்பட்டுக்
கொண்டிருந்ததையும் ;
கலிலியோ உடல்நலம் குன்றி
நோயால் அவதிப்பட்டுக்
கொண்டு இருந்ததையும் ;
கருத்தில் கொள்ளாமல்
அவருக்கு தொடர்ந்து
எந்தவிதமான அடிப்படை
வசதிகளும், மருத்துவ
வசதிகளும் செய்யாமல் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடந்து
கொண்ட விதம் ;
கிறிஸ்தவர்கள்
கலிலியோவின் மீது
கொண்ட விரோத
மனப்பான்மையின்
காரணமாக கலிலியோவின்
வாழ்க்கையை
சூறையாடிய விதம் :
ஆகியவற்றை
பார்த்துக் கொண்டிருந்த
மனிதநேயம் கொண்ட
பலதரப்பட்ட மக்களால்
தாங்கிக் கொள்ள
முடியாமல் இருந்தும்
அவர்களால் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சர்ச்சுகள், கிறிஸ்தவர்கள்
ஆகியவற்றை எதிர்த்து
கேள்வி கேட்க யாருக்கும்
தைரியமில்லாத காரணத்தினால்
யாரும் கேள்வி கேட்கவில்லை “
“ கலிலியோவிற்கு
தொடர்ந்து தேவையான
மருத்துவ வசதிகள்
எதுவும் வழங்கப்படாத
காரணத்தினால் நோயின்
தாக்கம் அதிகமாகி
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருந்தார்
கலிலியோ “
“ நவீன அறிவியலின் தந்தை ;
நவீன இயற்பியலின் தந்தை ;
நவீன ஆய்வுகளின் தந்தை ;
என்று அழைக்கப்பட்ட
கலிலியோ “
“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று வார்த்தைகளில்
மட்டுமே சொல்லாமல்
தொலைநோக்கி மூலம்
நிரூபித்துக் காட்டிய
கலிலியோ “
“சனிக்கிரகத்தை சுற்றி
உள்ள வளையத்தை
கண்டு பிடித்த கலிலியோ”
“வியாழன் கோளுக்கு
நான்கு நிலாக்கள்
இருக்கிறது என்பதைக்
கண்டு பிடித்த கலிலியோ “
“ சூரியனில் காணப்படும்
கரும்புள்ளிகளை
முதன் முதலில்
ஆராய்ந்த கலிலியோ “
“ தொலைநோக்கியை
கண்டு பிடித்த கலிலியோ “
“ வடிவவியல் மற்றும்
இராணுவ திசைகாட்டி
கண்டு பிடித்த கலிலியோ “
“ வெப்பமானியை கண்டு
பிடித்த கலிலியோ “
“1642-ஆம் ஆண்டு
ஜனவரி மாதம்
8-ஆம் நாள்
தன்னுடைய 77-ஆம்
வயதில் இவ்வுலக
வாழ்வை நீத்தார்
கலிலியோ “
---------
இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 06-04-2019
/////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment