May 10, 2019

பரம்பொருள்-பதிவு-14


                       பரம்பொருள்-பதிவு-14

" கடவுள் சிலை
செய்வதற்காக
உயிருள்ள கல்லைத்
தேர்ந்தெடுத்து ;
தேர்ந்தெடுக்கப்பட்ட
கல்லிடம்
கடவுள் சிலை
செய்வதற்கான
அனுமதியைப் பெற்று ;
ஆகம சாஸ்திர
முறைப்படி
கடவுள் சிலையை
செதுக்கி ;
பிராண பிரதிஷ்டை
மூலம்
சக்தியை செலுத்தி ;
கடவுள் சிலையை
கடவுளாகவே
மாற்றிய பின்னர் ;
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றைப்
பயன்படுத்தி
கடவுள் சிலையை
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவ வேண்டும் “

“கடவுள் சிலையை
நிறுவுவதற்கு
பயன்படுத்தும் முறைக்கு
அஷ்ட பந்தனம்
என்று பெயர்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
வைக்கப்படும்
கடவுள் சிலை
அசையாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
கடவுள் சிலைக்கு
அஷ்ட பந்தனம்
சாத்துவார்கள்”

“கல்லால் செய்யப்பட்ட
கடவுள் சிலையை
கர்ப்பக்கிரகத்தில்
நிறுத்தி வைக்க
வேண்டும் ;
அதாவது கல்லால்
ஆன கடவுள்
சிலையை கல்லோடு
ஒட்டி நிறுத்தி
வைக்க வேண்டும் ;
கல்லால் ஆன
கடவுள் சிலையை
வேறொரு கல்லுடன்
ஒட்டுவதற்கு
கலவை ஒன்று
தயாரிக்கப்படுகிறது;
இதற்கு அஷ்ட
பந்தனம் என்று பெயர்: ”

அஷ்ட பந்தனம்
“அஷ்டம் என்றால்
எட்டு என்று பொருள்;
பந்தனம் என்றால்
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;
அஷ்ட பந்தனம்
என்றால் எட்டுவிதமான
பொருள்களை ஒன்றாக
ஒட்டி வைத்தல்
என்று பொருள்;”

“இந்தக் கலவையில்
எட்டு விதமான
பொருட்கள்
சேர்க்கப்பட்டிருக்கும்”

அவையாவன ;

1.கொம்பரக்கு
2.சுக்கான் தூள்
3.குங்கிலியம்
4.கற்காலி
5.செம்பஞ்சு
6.சாதிலிங்கம்
7.வெள்ளை மெழுகு
8.எருமை எண்ணெய்

ஆகிய எட்டு
பொருள்களாகும்

“இந்த அஷ்டபந்தனம்
என்பதை மருந்து
சாத்துதல் என்றும்
சொல்லலாம்”

“கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தின் மீது
கடவுள் சிலையை
வைத்து பீடத்திலிருந்து
கடவுள் சிலை
அகலாமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
அஷ்ட பந்தன மருந்து
சாத்துவார்கள்”

“இந்த அஷ்ட பந்தன
மருந்து கடவுள்
சிலையை பீடத்துடன்
அழுந்தப் பிடித்துக்
கொள்ளும்”

“கர்ப்பக்கிரகத்தில்
கடவுள் சிலைக்கு
சாத்தப்பட்ட
அஷ்ட பந்தன மருந்து
12 வருடங்களுக்கு
மட்டுமே வேலை
செய்யும் ;
12 வருடங்களுக்குப்
பிறகு அஷ்ட பந்தன
மருந்தானது செயல்
இழந்து விடும் ;
எனவே,
12 வருடங்களுக்கு
பிறகு அஷ்ட பந்தன
மருந்தை மாற்ற
வேண்டும் ;”

“கர்ப்பக் கிரகத்தில்
அஷ்ட பந்தன மருந்து
சாத்தப்பட்டு
கடவுள் சிலை
நிறுவப் படுகிறது ;
இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில்
பீடத்தில் நிறுவப்பட்ட
கடவுள் சிலை
12 ஆண்டுகள் கழித்து
பிரித்து எடுக்கப்
படுகிறது ;
மேலும் கடவுள்
சிலையை பீடத்துடன்
ஒட்டி வைப்பதற்காக
சாத்தப்பட்ட
பழைய அஷ்டபந்தன
மருந்து முற்றிலுமாக
வெளியே எடுக்கப்படுகிறது;
புதியதாக அஷ்ட பந்தன
மருந்து தயாரிக்கப்பட்டு
கர்ப்பக் கிரகத்தில்
கடவுள் சிலை
பீடத்துடன்
ஒட்டி வைக்கப்படுகிறது”

“இந்த நிகழ்வு
கும்பாபிஷேகத்தின்
போது செய்யப்படுகிறது”

“கும்பாபிஷேகம் எப்படி
நடத்தப் படுகிறது
என்று பார்ப்போம்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  10-05-2019
/////////////////////////////////////////////////////


No comments:

Post a Comment