June 25, 2019

பரம்பொருள்-பதிவு-30


                    பரம்பொருள்-பதிவு-30

" இந்த உலகத்தில்
உள்ள ஒவ்வொருவரும்
அவரவருடைய தேவைக்கேற்ப
அந்தந்த நிலையில்
உள்ள இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர். "

1,அருஉருவ நிலை

" சாதாரண மக்கள்
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர் "

" தங்களுடைய வாழ்க்கைக்குத்
தேவையானவைகளை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு ,
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்வதற்காக ,
இந்துமதக் கோயில்களில்
அருஉருவ நிலையில் உள்ள
கடவுள் சிலைகளை
சாதாரண நிலையில் உள்ள
மக்கள் வணங்குகிறார்கள் ;
அவர்களுக்கு ,
இந்துமதக் கோயில்களில்
உருவநிலையான
கடவுள் சிலைக்குள் ;
அருவ நிலையில்
வாசம் செய்யும் இறைவன்
அருஉருவ நிலையில்
இருந்து பக்தர்களுக்கு அருள்
வழங்கிக் கொண்டிருக்கிறார் "

2.உருவ நிலை
" பக்தி மார்க்கத்தில்
உள்ளவர்கள்
உருவ நிலையில் உள்ள
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தங்களுக்கு
தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர்"

"பக்தி மார்க்கத்தில்
உள்ளவர்கள்
யாகங்கள், ஹோமங்கள்,
பூஜை முறைகள்,
மந்திரங்கள், யந்திரங்கள்
தந்திரங்கள்
ஆகியவற்றைப் பயன்படுத்தி
உருவ நிலையில் உள்ள
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தங்களுக்கு
தேவையானதைப் பெற்றுக்
கொள்கின்றனர்."

3.அருவ நிலை

" ஞானமார்க்கத்தில்
உள்ளவர்கள்
அருவ நிலையில் உள்ள
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தங்களுக்கு
தேவையானதைப் பெற்றுக்
கொள்கின்றனர் "

"அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்து
கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
பரம்பொருளின்
அருளைப் பெற்று
18 சித்தர்களால் செய்யப்பட்டு
அருளப்பட்டதைத் தொடர்ந்து
ஏனைய சித்தர்களால்
செய்யப்பட்டு
வழங்கப்பட்டதைத் தொடர்ந்து
ஞானபிதா
சிவானந்த பரமஹம்சரால்
உணரப்பட்டு செய்யப்பட்டு
இந்த உலகத்திற்கு
அளிக்கப்பட்ட
சித்தவித்தை எனப்படும்
வாசியோகக் கலையை
தகுந்த குருவிடம்
முறையாகப் பயின்று
பயிற்சி செய்து
வருவதின் மூலம்
அருவ நிலையில் உள்ள
இறைவனுடன் தொடர்பு
ஏற்பட்டு கர்ம வினைகள்
கழிக்கப்படுகிறது.

இதனால் அறிவில்
தெளிவு ஏற்பட்டு
ஞானத்தில் உயர்வு ஏற்பட்டு
முக்தியில் பிணைப்பு ஏற்பட்டு
பிறப்பு இறப்பு சுழற்சி
அறுபடும் நிலை
உண்டாகிறது

எனவே, அருவ நிலையில்
உள்ள இறைனை உணர்ந்து
அருவ நிலையை
அடையும் மிகப்பெரும்
பேறு கிடைக்கிறது
அதாவது அருவநிலையில்
இருந்து வந்தது
அருவமாகவே மாறும்
முக்தி சித்திக்கிறது

மூன்று நிலைகள்
சாதாரண நிலையில்
உள்ளவர்கள்
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர்

பக்தி மார்க்கத்தில்
உள்ளவர்கள்
உருவ நிலையில்
உள்ள இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர்

ஞான மார்க்கத்தில்
உள்ளவர்கள்
அருவ நிலையில்
உள்ள இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதைப்
பெற்றுக் கொள்கின்றனர்

இந்த உலகத்தில்
அருஉருவ நிலை
உருவ நிலை
அருவ நிலை - என்று
மூன்று நிலைகளில்
இயங்கிக் கொண்டிருக்கக்
கூடிய இறைவன்
அவரவரின் தேவைக்கேற்ப
வேண்டியதை வழங்கி
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறான்

என்பதை அனைவரும்
உணர்ந்து கொள்ள
வேண்டும்

அருவநிலையில்
உள்ள சிவலிங்கத்தின்
சிறப்பு என்ன என்று
தெரியுமா……………………………..?

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 25-06-2019
//////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment