June 27, 2019

பரம்பொருள்-பதிவு-32


                      பரம்பொருள்-பதிவு-32

" இந்த உலகத்தில்
இறைவன்
அருஉருவ நிலை ;
உருவ நிலை ;
அருவ நிலை ;
என்ற மூனறு நிலைகளில்
வெளிப்பட்டு
பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டிருந்தாலும்
அன்றும்; இன்றும்; என்றும்;
இறைவன் இருப்பது
அருவநிலையில் தான் ;"

" இறைவன்
அருவநிலையில் இருக்கிறான்
என்பதையும் ;
இந்த உலகம்
முழுவதும் இறைவன்
அருவநிலையில் விளங்கி  
இந்த உலகத்தை காப்பாற்றிக்
கொண்டிருக்கிறான்
என்பதையும் ;
அருவநிலையில் உள்ள
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவமாகவே மாறும்போது
பிறப்பு; இறப்பு; கிடையாது
என்பதையும் ;
இந்த உலகத்தில்
உள்ளவர்கள் அனைவரும்
உணர்ந்து கொள்ள வேண்டும்
என்ற நோக்கத்திற்காக
வடிவமைக்கப்பட்டது தான்
"சிவலிங்கம்" ; "

"உலகத்தில் உள்ள
அனைத்து இந்துமதக்
கோயில்களில் உள்ள
கடவுள் சிலைகள்
அருஉருவ நிலையில்
உள்ளவை ;
அதாவது கடவுள் சிலை
உருவத்தைக் கொண்டது ;
அதில் கடவுள்
அருவ நிலையில்
வாசம் செய்து பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டிருக்கிறான்;"

" ஆனால் சிவலிங்கத்தின்
கடவுள் சிலை
உருவமற்றது  ;
அதாவது சிவலிங்கம்
அருவ நிலையில் உள்ளது ;
அருவ நிலையில்
உள்ள சிவலிங்கத்தில்
கடவுள் அருவநிலையில்
வாசம் செய்கிறான் ;
இதனால் சிவலிங்கத்தில்
இறைவன் அருவ - அருவ
நிலையில் வெளிப்பட்டு
பக்தர்களுக்கு
அருள் வழங்கிக்
கொண்டு இருக்கிறான் "

"இது தான்
இந்து மதத்தில்
இந்துமதக் கோயில்களில்
உள்ள அனைத்து
கடவுள் சிலைகளுக்கும்
சிவலிங்கத்திற்கும்
உள்ள முக்கியமான
வேறுபாடு ஆகும் "

" அருஉருவ நிலையில்
உள்ள கடவுள் சிலைகளை
வணங்கும் போது
அருஉருவ கடவுள்
சிலையில் உள்ள
உருவம் மறைந்து
அருவத்திற்குள் நுழைந்த
பின்பு தான் அருஉருவ
கடவுள் சிலையை
வணங்குகிறவன்
அருவமாகவே மாறுகிறான் "

" ஆனால் சிவலிங்கத்தை
வணங்குகிறவன்
அருவத்திலிருந்து
நேரடியாக அருவத்திற்குள்
நுழைந்து விடுவதால்
நேரடியாகவே அருவமாக
மாறுகிறான் "

" அருவமாக இருக்கக்கூடிய
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவமாகவே மாறுவதற்கு
எளிய வழி
" சிவலிங்கம் "
மட்டுமே ஆகும் "

"சிவலிங்கம் என்பது
ஒரு கடவுள் சிலை
மட்டுமல்ல ;
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு வேண்டியதை
பெற்றுக் கொண்டு
தங்களுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டது
மட்டுமல்ல ;
சிவலிங்கம் என்பது
மிகப்பெரிய ரகசியத்தை
வெளிப்படுத்தும் குறியீடு
மட்டுமல்ல ;
மிகப்பெரிய பிரம்ம
ரகசியத்தை தன்னுள்
கொண்டு - இந்த உலகத்தில்
உள்ள மக்கள் அனைவரும்
புரிந்து கொண்டு பின்பற்றி
உயர்வடைய வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்தில்
வடிவமைக்கப்பட்டது தான்
" சிவலிங்கம் "

" பிரம்ம ரகசியம்
பிரம்ம ரகசியம்
என்று சொல்லிக் கொண்டு
கடவுளை உணராமல்
கடவுளை உணர்ந்தவன்
போல் காட்டிக் கொண்டு
திரிபவர்கள் மத்தியில் ;

" கடவுளை அடையக்கூடிய
வழிகள் அனைத்தும்
அடைக்கப்பட்டு
வைக்கப்பட்டு
உள்ள நிலையில் ;

" சுயநலவாதிகளாலும்
வியாபாரிகளாலும்
மதவாதிகளாலும்
ஆன்மீகவாதிகளாலும்
சொற்பொழிவாளர்களாலும்
கடவுளை அடையக்கூடிய
வழிகள் சிக்கலாக்கி
வைக்கப்பட்டு உள்ள
நிலையில் "

"அருவ நிலையில் உள்ள
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
அருவத்தில் கரைந்து
அருவமாகவே மாறி
முக்தி அடையக்கூடிய
வழி வகையினை
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
புரிந்து கொள்ளும் வகையிலும்
எளிமையாக அனைவரும்
காணும் வகையிலும்
சிவலிங்கம் என்னும்
கடவுள் சிற்பமாக செதுக்கி
வைத்துவிட்டு சென்ற
நம் முன்னோர்களின்
மெய்ஞ்ஞான அறிவு
போற்றுதலுக்குரியதாகும் ;"

" பல்வேறு விதமான
அதிசயிக்கத் தக்க
பிரம்ம ரகசியங்கள்
பலவற்றை தன்னுள் கொண்ட
சிவலிங்கத்தை அறிவதற்காக
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"
சிவலிங்கமாகவே
மாறிக் கொண்டிருக்கிறோம்……..?"

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-06-2019
//////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment