August 13, 2019

பரம்பொருள்-பதிவு-53


                   பரம்பொருள்-பதிவு-53

" இறந்து
எலும்பும் ; சாம்பலுமாக;
இருந்த பூம்பாவை
எலும்பும்; சதையுமாக;
அங்கம் பெற்று ;
உடல் பெற்று ;
உயிர்பெற்று  ;
வந்த காரணத்தினால்
பூம்பாவை !
அங்கம் பூம்பாவை ! என்ற
பெயரைப் பெற்றாள் "

"அங்கம் என்றால்
உறுப்பு என்று பொருள் ;
பாவை என்றால்
பெண் என்று பொருள் ;
அங்கம் பூம்பாவை
என்றால்
பூவைப் போன்ற
உடலைக் கொண்ட
பெண் என்று பொருள் ;"

" உயிர்பெற்ற
அங்கம் பூம்பாவையும்
சிவநேசரும்
அவருடைய மனைவியும்
அங்குக்கூடியிருந்த மக்கள்
அனைவரும் ஒன்றாக
திருஞான சம்பந்தரை
பக்தியுடன் வணங்கி
நின்ற வேளையில் மக்கள்
திருஞான சம்பந்தரைப்
பார்த்து பேசத் தொடங்கினர் "

மக்கள் :
" இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பிக்காட்டி
நீங்கள் செய்த
அற்புதத்தைக் கண்டு
நாங்கள் மெய்
மறந்து நின்றோம் !"

" சிவபெருமானுடைய
சக்தியையும்
சிவபெருமானுடைய
அடியவராகிய உங்களுடைய
சக்தியையும் நேரில் கண்டு
தெரிந்து கொண்டோம் !"

" நாங்கள் அனைவரும்
சைவமதத்திற்கு
மதம் மாறுவது என்றும் ;
சிவபெருமானை
வழிபடுவது என்றும்
முடிவு செய்துள்ளோம் !"

திருஞான சம்பந்தர் :
" ஒரு மதத்தில் உள்ள
கடவுளை வணங்கிக்
கொண்டிருப்பவர்கள் ;
வேறு மதத்தில் உள்ள
ஒருவர் செய்யும்
அற்புதச் செயல்களைப்
பார்த்து அந்த
அற்புதத்தால் ஈர்க்கப்பட்டு
அற்புதம் செய்தவருடைய
மதத்திற்கு மதம் மாறி
அந்த மதத்தில் உள்ள
கடவுளை வணங்குவது
என்பது தவறான
செயல் ஆகும் "

" கடவுளின்
உண்மைத் தன்மையை
உணர்ந்து தான்
கடவுளை வணங்க
வேண்டுமே தவிர
அற்புதங்களைக் கண்டு
மதம் மாறுவதும்  ;
கடவுளை
வணங்குவதும் கூடாது ;"

" நான் இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பியதற்கு
காரணம் இறந்தவரை
உயிரோடு எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
எங்கள் மதத்தில்
மட்டுமே உள்ளனர் ;
வேறு மதத்தில் இல்லை ;
என்று பிற மதத்தவர்கள்
சொல்லிக் கொண்டு
திரியும் பொய்யான
கருத்துக்களைத் தவறு
என்று நிரூபிக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் "

" இறந்தவரை எழுப்பும்
சக்தி படைத்தவர்கள்
சிவபெருமானை
வழிபடும் சைவ
மதத்திலும் உள்ளனர் ;
என்ற விஷயத்தை
பிற மதத்தினரை
உணரச் செய்ய வேண்டும் ;
என்ற காரணத்திற்காகவும் '

"இந்த உலகத்தில்
சைவ மதமே
உண்மையான
மதம் என்பதையும் ;
இந்த உலகத்தில்
சிவபெருமானே
உண்மையான
கடவுள் என்பதையும் ;
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
உணர்ந்து கொள்ள
வேண்டும் ; என்ற
காரணத்திற்காகவும் '

"இறந்த பூம்பாவையை
உயிரோடு எழுப்பினேன்!
அற்புதம் செய்து காட்ட
வேண்டும் என்ற
எண்ணத்தினால் அல்ல"

" கடவுளின்
உண்மைத் தன்மையை
உணர்ந்து தான்
மதம் மாறி
கடவுளை வணங்க
வேண்டுமே தவிர ;
கடவுளின் உண்மைத்
தன்மையை உணராமல்
மதம் மாறி கடவுளை
வணங்கக் கூடாது ;"

(மக்கள் அமைதியாக
நின்று கொண்டிருந்தனர்
சிவநேசர் பேசத்
தொடங்கினார்)

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 13-08-2019
//////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment