பரம்பொருள்-பதிவு-60
“இந்த உலகம்
முழுவதும் நடைபெற்றுக்
கொண்டிருக்கும்
எந்த ஒரு செயலை
எடுத்துக் கொண்டாலும்
அந்த செயலில் இரண்டு
விதமான நிலைகள்
மறைந்து இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்”
ஒன்று :இயக்கமற்ற நிலை
இரண்டு: இயக்க நிலை
“இயக்கமற்ற நிலையும்
இயக்க நிலையும்
ஒன்றுக் கொன்று
தொடர்பு கொண்டு
ஒன்றுபட்டு இருக்கும்போது ;
இயங்கிக் கொண்டும்
நகர்ந்து கொண்டும்
இருக்கும் சக்தியானது
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டிருந்தால்
செயலானது நடைபெறும் “
என்ற விதியை
இந்திய நாட்டில் வாழ்ந்த
நம்முடைய
முன்னோர்களாகிய
இந்தியர்கள் கண்டுபிடித்து
அதை உலகம்
முழுவதும் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களிலும் மக்கள்
பயன்பெறும் வகையில்
அமைத்து வைத்தனர் “
“கோயில் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது ;
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைக்கப்பட்டு
இருக்கிறது ;
கோயிலுக்கு வரும்
பக்தர்கள் கடவுள்
சக்தியுடன் தொடர்பு
கொண்டு தங்களுடைய
தேவையை பூர்த்தி
செய்து கொள்கின்றனர்;”
“கோயிலுக்குள் இருக்கும்
இந்த அமைப்பை
அப்படியே காப்பி அடித்த
விஞ்ஞானம் அதை
பல்வேறு விதமான
கண்டு பிடிப்புகளில்
தற்போது வரை
பயன்படுத்தி வருகிறது”
“விஞ்ஞானம்
கண்டுபிடித்ததாக சொல்லும்
ஆட்டுக்கல்லை எடுத்துக்
கொள்வோம் ;
ஆட்டுக்கல் உருண்டை
வடிவமான கல்லில்
நடுவில் குழியைக்
கொண்டிருக்கும் - இந்தக்
குழியின் அகலத்தை விட
சிறிது குறைவான
சுற்றளவில் சிறிது
உயரமாக கையால்
பிடித்து அரைக்கக்கூடிய
வடிவமைப்பில் குழவிக்கல்
ஒன்றும் இதனுடன் இருக்கும் “
“இயக்கமற்ற நிலையில்
இருப்பது ஆட்டுக்கல்
அந்த ஆட்டுக்கல்லில்
நடுவில் உள்ள குழிக்குள்
அதாவது ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டிருப்பது குழவிக்கல் ;
ஆட்டுக் கல்லில் குழியாக
இருக்கும் பகுதியில்
அரைக்க வேண்டிய
தானியத்தைப் போட்டு
குழவியைக் கொண்டு
கையால் சுழற்றினால்
குழியில் இருக்கும்
தானியம் அரைபடும் ;”
“ஆட்டுக் கல்லையும்
கோயிலையும் ஒப்பிட்டு
நன்றாக உற்று நோக்குங்கள்”
“கோயில் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது;
அதைப்போல
ஆட்டுக்கல்லும் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது;”
“கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டு இருக்கிறது ;
அதைப்போல
ஆட்டுக்கல்லின்
குழிக்குள் இருக்கும்
குழவிக் கல்லானது ஒரு
குறிப்பிட்ட எல்லை
கொண்ட குழிக்குள்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது ;”
“கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்டஎல்லைக்குள்
குவித்து வைக்கப்பட்ட
கடவுள் சக்திக்குள் வரும்
பக்தர்கள் இயங்கிக்
கொண்டு இருக்கும்
கடவுள் சக்தியுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதை
பூர்த்தி செய்து
கொள்கின்றனர் ;
அதைப்போல
ஆட்டுக்கல்லில் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
உள்ள குழிக்குள்
அரிசியானது வரும்போது
இயங்கிக் கொண்டு
இருக்கும் குழவிக்
கல்லானது அரிசியை
மாவாக மாற்றுகிறது;”
“இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
பயன்பெற வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன் இந்தியாவில்
வாழ்ந்த நம்முடைய
முன்னோர்களான
இந்தியர்களால்
மெய்ஞ்ஞானம் மூலம்
கண்டு பிடிக்கப்பட்ட
மிகப்பெரிய விஷயத்தை
காப்பி அடித்து
இன்று வரை
பல்வேறு விதமான
கண்டு பிடிப்புகளை
கண்டு பிடித்துக்
கொண்டிருக்கும்
விஞ்ஞானத்தை
மெய்ஞ்ஞானத்தை விட
உயர்ந்தது என்று
சொல்ல முடியாது”
“கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
மெய்ஞ்ஞானம் மூலம்
கண்டுபிடிக்கப்பட்ட
இந்த விதியைப்
பயன்படுத்தி ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
எப்படி குவித்து
வைக்கிறார்கள் என்று
தெரியுமா………?”
-------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 05-09-2019
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment