பரம்பொருள்-பதிவு-73
தர்மர்
:
"நாங்கள்
மன
வேற்றுமையினால்
பிரிந்ததில்லை
!"
"எங்களுக்குள்
சண்டை
என்பது
உண்டானதில்லை !"
"சண்டையினால்
நாங்கள்
பிளவு பட்டு
நின்றதில்லை
!"
"ஒரு
பெண் எங்கள்
ஐவரையும்
பிரித்து
விடுவாள்
என்பதை
ஏற்றுக்
கொள்வதற்கில்லை!"
"ஒரு
பெண்ணால் எங்கள்
வாழ்க்கையில்
பிரிவு
ஏற்படும்
என்பதற்கான
எந்தவிதமான
சாத்தியக்கூறுகளும்
இல்லை"
"யாராலும்
எங்களை
பிரித்து
விட முடியாது ;
என்ற
நிலை
இருக்கும்
போது
ஒரு
பெண் எங்கள்
ஐவரையும்
எப்படி
பிரித்து
விட முடியும்? "
"அன்றும்
நாங்கள்
ஒற்றுமையாக
இருந்தோம் ;
இன்றும்
நாங்கள்
ஒற்றுமையாக
இருக்கிறோம் ;
நாளையும்
நாங்கள்
ஒற்றுமையாகத்
தான்
இருப்போம்
;"
"ஒரு
பெண் எங்கள்
ஐவரையும்
பிரித்து
விடுவாள்
என்ற
சந்தேகம்
கொள்ளத்
தேவையில்லை"
நாரதர்
;
"உலகில்
நடக்கும்
எந்த
ஒரு செயலும்
ஒன்றுடன்
ஒன்று
தொடர்பு
உடையது "
"ஒன்றுடன்
ஒன்று
தொடர்பு
இல்லாமல்
எந்த
ஒரு செயலும்
நடைபெற
முடியாது "
"ஒரு
செயல் ஒரு
விளைவைக்
கொடுத்தால்
அதே
செயலும்
அந்த
செயலை ஒத்திருக்கும்
மற்றொரு
செயலும்
அதே
விளைவைத்தான்
கொடுக்கும்
என்று
நினைத்தால்
தவறாகும்"
"ஒவ்வொரு
செயலின்
விளைவும்
காலத்திற்கு
ஏற்றாற்
போல்
மாறிக்
கொண்டே இருக்கும்"
"இறந்த
காலத்தில்
ஒற்றுமையாக
இருந்தீர்கள்
;
நிகழ்காலத்தில்
ஒற்றுமையாக
இருக்கிறீர்கள் ;
எதிர்காலத்திலும்
ஒற்றுமையாக
இருப்பீர்கள் ;
என்று
எவ்வாறு
சொல்ல
முடியும்?"
"நாளை
என்ன நடக்கும்
என்பது
யாருக்கும்
தெரியாது
;
அப்படி
இருக்கும்போது
ஒற்றுமையாகத்
தான்
இருப்போம்
என்று
எப்படி
அரிதியிட்டுச்
சொல்ல
முடியும் ;
நிச்சயமில்லாத
ஒன்றை
நிச்சயமாக
எப்படி
சொல்ல
முடியும் ?"
“பரம்பரை
பரம்பரையாக
ஒற்றுமையாக
இருந்த
குடும்பம்
திருமணம்
முடித்து
குடும்பத்தில்
நுழைந்த
ஒரு பெண்ணால்
பிரிந்த
கதைகள்
இந்த
உலகத்தில் உண்டு ;
ஒரே
வீட்டினுள்
ஒன்றுபட்டு
ஒற்றுமையாக
இருந்த
குடும்பம்
திருமணமான
பெண்
உள்ளே
புகுந்ததால்
வீடும்
சொத்தும்
பிரிக்கப்பட்ட
கதைகளும்
இந்த
உலகத்தில் உண்டு ;
ஊரே
போற்ற வாழ்ந்த
குடும்பங்களும்
;
மாடிமீது
மாடி கட்டி
வாழ்ந்த
குடும்பங்களும் ;
ஒன்றுபட்டு
ஒற்றுமையாக
வாழ்ந்த
குடும்பங்களும் ;
திருமணமான
பெண்
உள்ளே
நுழைந்ததால்
பிரிந்த
கதைகளும்
இந்த
உலகத்தில் உண்டு ;"
"அப்படி
இருக்கும் போது
இறந்த
காலத்தையும்
நிகழ்காலத்தையும்
ஒப்பிட்டு
எதிர்காலத்தில்
இப்படித்தான்
இருப்போம்
என்று
சொல்வதை
எப்படி
ஏற்றுக்
கொள்ள
முடியும் "
"அறிவுபூர்வமாக
சிந்தித்து
பார்த்தீர்களானால்
உண்மை
என்ன
என்பது
விளங்கும் "
"நாளை
ஒரு தவறு
நடக்கப்போகிறது
என்று
தெரிந்தும்
அதை
தடுப்பதற்கான
நடவடிக்கைகள்
எதுவும்
எடுக்காமல்
இருப்பது
புத்திசாலித்தனமில்லை
;
தவறு
நடந்த பிறகு
வருத்தப்படுவதை
விட
தவறு
நடக்காமல்
இருப்பதற்கு
எந்தவிதமான
நடவடிக்கைகளை
மேற்கொள்ள
வேண்டும்
என்று
யோசிப்பது நல்லது;"
"எத்தகைய
ஒரு
செயலை
பின்பற்றினால்
திரௌபதியும்
நீங்கள்
ஐவரும்
மனக்கசப்பு
இல்லாமல்
சண்டை
இல்லாமல்
ஒற்றுமையாக
இருக்கமுடியுமோ?
அந்த
செயலைச் செய்ய
நடவடிக்கை
எடுக்க
வேண்டும்”
“ஒற்றுமையாக
இருந்த
அண்ணன்
தம்பிகள்
ஒரு
பெண்ணால்
பிரிந்த
கதை
உங்களுக்கு
தெரியுமா ?
அந்த
கதையை
உங்களுக்கு
சொல்கிறேன்
கேளுங்கள்
என்று
கதையை
சொல்லத்
தொடங்கினார்
நாரதர்”
-------- இன்னும் வரும்
----------
K.பாலகங்காதரன்
----------17-10-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment