பரம்பொருள்-பதிவு-85
உலூபி :
"ஆமாம் விசித்திரமாகத்
தான் இருக்கும் ;
உங்களுக்கு மட்டுமல்ல
இந்த உலகத்திற்கும்
விசித்திரமாகத்
தான் இருக்கும்."
"ஒரு பெண்ணை
விரும்பிய ஒரு ஆண்
தன்னுடைய காதலை
அந்த பெண்ணிடம்
சொல்வதும் தப்பில்லை ;
அவளை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும்
தப்பில்லை. ;
விருப்பப்பட்ட
பெண்ணை அவள்
விருப்பம் இல்லாமல்
கடத்தி செல்வதும்
கூட தப்பில்லை ; "
"ஆனால் ஒரு
ஆணை விரும்பிய
ஒரு பெண்
தன்னுடைய காதலை
அந்த ஆணிடம்
சொல்வதும் தப்பு ;
அவனை திருமணம்
செய்து கொள்ள
விரும்புவதும் தப்பு ;
விருப்பப்பட்ட
ஆணை கடத்தி
வருவதும் தப்பு ;"
"ஆணுக்கு ஒரு
நியாயம் பெண்ணிற்கு
ஒரு நியாயம்
என்று இருவேறுபட்ட
நியாயத்தை
வகுத்து
வைத்திருக்கிறீர்களே
இது எந்த
விதத்தில் நியாயம்?"
"அன்பு ; பாசம் ;
நேசம் ; காதல் ;
காமம் ; போன்ற
அனைத்து உணர்வுகளும்
ஆண். பெண் உட்பட
அனைவருக்கும்
ஒன்று தானே !
அப்படியிருக்கும் போது
ஒரு பெண்ணை
விரும்பும் ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
பெண்ணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
தப்பில்லை ;
ஆனால்
ஒரு ஆணை
விரும்பும் ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விரும்பும்
ஆணிடம்
தன்னுடைய காதலை
வெளிப்படுத்துவது
மட்டும் எவ்வாறு
தப்பாகும் ;"
"காதல் செய்வதில்
கூட ஒரு ஆண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் என்ற
நிலையையும் ;
ஒரு பெண்
தன்னுடைய காதலை
தைரியமாக
வெளிப்படுத்த
முடியாது என்ற
நிலையையும் ;
தானே இச்சமுதாயத்தில்
உருவாக்கி
வைத்திருக்கிறீர்கள் "
"ஒரு பெண்
தன்னுடைய காதலை
தான் விருப்பப்பட்ட
ஆணிடம்
வெளிப்படுத்தும்போது
தன்னுடைய காதலை
வெளிப்படுத்தும்
பெண்ணை
இந்த சமூகம் தவறான
கண்ணோட்டத்துடன்
தானே பார்க்கிறது ;
அவளது நடத்தையை
இழிவான பார்வையுடன்
தானே பார்க்கிறது ;
அவளுடைய
கற்பை சந்தேகப்
படும் விதத்தில்
தானே பார்க்கிறது ; "
"உங்களைப் பார்த்தால்
மிகுந்த கற்றவர்
போல் தெரிகிறது ;
உலக அனுபவம்
அதிகம் பெற்றவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை
கடைபிடிப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
அதை உரைப்பவர்
போல் தெரிகிறது ;
நியாயத்தை உணர்ந்து
நியாயத்தின் வழி
நடப்பவர் போல்
தெரிகிறது ;"
"அப்படி இருக்கும்
தாங்களே
உங்கள் மேல் நான்
கொண்ட காதலைப்
பார்த்து சிரிக்கிறீர்கள் ;
என்னை தவறான
கண்ணோட்டத்துடன்
பார்க்கிறீர்கள் ;
விசித்திரமாக
இருக்கிறது என்று
கேலி செய்கிறீர்கள் ;"
"உணர்வுகள் என்பது
ஆண் பெண்
இருவருக்குமே சமம் ;
என்பதை இச்சமுதாயம்
எப்போது உணர்ந்து
கொள்கிறதோ ?
அப்போது தான்
ஒரு பெண்
தன்னுடைய
காதலை தான்
விரும்பும் ஆணிடம்
தைரியமாக
வெளிப்படுத்த
முடியும் ;"
--------- இன்னும் வரும்
-----------K.பாலகங்காதரன்
-----------17-11-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment