December 27, 2019

பரம்பொருள்-பதிவு-105


          பரம்பொருள்-பதிவு-105

சகாதேவன் :
"மூன்று பேர்களில்
முதலாவது கிருஷ்ணன் !"

துரியோதனன் :
"ம்ம்ம் ,,,,,,,,,,,,,,,சரி   
இரண்டாவது  "

சகாதேவன் :
"இரண்டாவது அர்ஜுனன் !"

துரியோதனன் :
"ம்ம்ம் ,,,,,,,,,,,,,,,,,,,சரி  
மூன்றாவது "

சகாதேவன் :
"மூன்றாவது அரவான் !"

துரியோதனன் :
"களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
உடையவர்கள் இந்த
மூன்று பேர்களுமா
தம்பி ! "

சகாதேவன் :
"ஆமாம் அண்ணா !
இந்த மூன்று பேர்கள்
தான் களப்பலி
கொடுப்பதற்குத்
தகுதி உடையவர்கள்"

"கிருஷ்ணன்
அர்ஜுனன் அரவான்
ஆகிய மூன்று
பேர் மட்டுமே
32 லட்சணங்கள்
உள்ளவராகவும் ;
எதிர்ரோமம்
படைத்தவராகவும் ;
உள்ளனர். "

"இந்த மூன்று
பேரில் யாரேனும்
ஒருவரை வருகின்ற
அமாவாசை தினத்தன்று
களப்பலி கொடுத்தால்
போரில் வெற்றி
பெறுவது என்பது
நிச்சயம் "

"களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும் போரில்
வெற்றி கொள்ள
முடியாது என்பது
முற்றிலும்
உண்மை அண்ணா ! "

துரியோதனன் :
"நீ சொன்னவைகளைக்
கேட்டு நான்
மிகுந்த மகிழ்ச்சி
அடைந்தேன் தம்பி
இதை பெற்றுக் கொள் "

(என்று கழுத்தில்
இருந்த நகையை
கழட்டி கொடுக்கிறான்
துரியோதனன்)

சகாதேவன் :
"இது எதற்கு அண்ணா
உறவுகளுக்குள்"

துரியோதனன் :
"உறவு என்பது வேறு ;
தொழில் என்பது வேறு ;
நான் என்னுடைய
விஷயத்திற்காக
சோதிடம்
கேட்க வந்தேன் ;
சோதிடம்
கேட்க வந்தவர்
சோதிடம்
பார்த்தவருக்கு
ஊதியம் கொடுப்பது
என்பது உலக
நடப்பு தானே
சகாதேவா ! "
நான் பார்த்த
சோதிடத்திற்கு
ஊதியமாக
இதை வைத்துக்
கொள் தம்பி "

(சகாதேவன்
துரியோதனன் அளித்த
நகையைப் பெற்றுக்
கொள்கிறான்)

"அறையை விட்டு
வெளியே வருகிறான்
துரியோதனன் "

"அறைக்கு வெளியே
பாண்டவர்களுடன்
நின்று கொண்டிருந்த
கிருஷ்ணன்
துரியோதனனிடம்
பேசத் தொடங்குகிறார் "

கிருஷ்ணன் :
"துரியோதனா நீ
வந்த வேலை
எதிர்பார்த்தபடி முடிந்ததா ?"

துரியோதனன் :
"கிருஷ்ணா அறைக்குள்
நீ இல்லையல்லவா
அதனால் வந்த வேலை
நல்லபடியாகவே
முடிந்தது "

கிருஷ்ணன் :
"துரியோதனா வந்த
வேலை நல்லபடியாக
முடிந்தது என்பதை
நீ எப்படி இப்பவே
முடிவு செய்ய முடியும் ?
வருங்காலம் தானே
முடிவு செய்ய வேண்டும் ? "

"வருங்காலம் என்ன
முடிவு செய்து
வைத்திருக்கிறது
என்பதை இப்போது
யாரால் சொல்ல
முடியும் ? "

"வருங்காலம் என்ன
முடிவு செய்து
வைத்திருக்கிறதோ
தெரியவில்லை  ?"

"வருங்காலத்தில்
என்ன நடக்கப்
போகிறது என்பதைப்
பொறுத்திருந்து பார்ப்போம் "

(துரியோதனன்
கோபத்துடன்
மாளிகையை விட்டு
வெளியேறுகிறான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 27-12-2019
//////////////////////////////////////////


No comments:

Post a Comment