பரம்பொருள்-ஜபம்-107
கிருஷ்ணன்
:
"களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்கள்
யார்
என்பதையும் ?
அவர்களுடைய
பெயர்கள்
என்ன
என்பதையும் ?
நானே
உனக்குச்
சொல்கிறேன்
பீமா ! "
பீமன்
:
"சொல்
கிருஷ்ணா சொல்
யார்?
என்று சொல்
கிருஷ்ணா
சொல் "
கிருஷ்ணன்
:
"களப்பலியாக
கொடுப்பதற்கு
உரிய தகுதி
படைத்தவர்கள்
- இந்த
ஈரேழுலோகத்திலும்
மொத்தமே
மூன்று பேர்கள்
மட்டுமே
உள்ளனர் பீமா ! "
பீமன்
:
"மொத்தமே
மூன்று
பேர்கள்
மட்டுமே
உள்ளனரா
கிருஷ்ணா?"
கிருஷ்ணன்
:
"ஆமாம்
பீமா !
ஆமாம்"
பீமன்
:
"யார்
அந்த மூன்று
பேர்கள்
கிருஷ்ணா"
கிருஷ்ணன்
:
"ஒன்று
அர்ஜுனன்
இரண்டாவது
அரவான்"
பீமன்
:
மூன்றாவது
யார்
கிருஷ்ணா
?"
கிருஷ்ணன்
:
"வேறு
யார்
நானே
தான் பீமா !
களப்பலி
கொடுப்பதற்கு
தகுதி
உடைய மூவரில்
நானும்
ஒருவன் என்பதை
நினைவில்
கொள் பீமா! "
பீமன்
:
"கிருஷ்ணா!
உன்னையுமா
களப்பலியாக
கொடுப்பதற்கு
உரிய
பட்டியலில்
சேர்த்து
இருக்கிறார்கள்
- என்ன
கொடுமை
இது கிருஷ்ணா?"
கிருஷ்ணன்
:
"ஏன்
என்னை
சேர்க்கக்
கூடாதா பீமா!"
"நீ
நினைப்பது போல்
களப்பலியாக
யாரை
வேண்டுமானாலும்
;
விருப்பப்படுபவர்களை
எல்லாம்
தேர்ந்தெடுத்து
களப்பலி
கொடுத்து
விட
முடியாது ; "
"களப்பலி
கொடுப்பதற்கென்றே
வரையறுக்கப்பட்ட
விதிமுறைகள்
இருக்கின்றன ;
அதற்கென்று
சில
தகுதிகள்
இருக்கின்றன;
அத்தகைய
தகுதிகளைக்
கொண்டவர்கள்
யார்
இருக்கிறார்கள்
என்பதைக்
கண்டறிந்து
அத்தகையவர்களை
மட்டுமே
கண்டு பிடித்து
களப்பலி
கொடுத்தால்
மட்டுமே
போரில்
வெற்றி
பெற முடியும் "
பீமன்
:
"எத்தகைய
தகுதிகளைப்
பெற்றிருக்க
வேண்டும்
கிருஷ்ணா
! "
கிருஷ்ணன்
:
"32
லட்சணங்கள்
கொண்டவராக
இருக்க
வேண்டும் :
எதிர்ரோமம்
படைத்தவராக
இருக்க
வேண்டும் ;
இந்த
இரண்டு
விதிகளையும்
பூர்த்தி
செய்பவர்கள்
– நான் ;
அர்ஜுனன்
; அரவான் ;
ஆகிய
மூன்று பேர்கள்
மட்டுமே!
- ஆகவே
தான்
களப்பலியாக
கொடுக்கக்கூடியவர்கள்
பட்டியலில்
எங்கள்
மூன்று
பெயரையும்
சேர்த்து
இருக்கிறார்கள் ;"
"களப்பலி
கொடுப்பதற்கு
ஏற்ற
நாள்
எந்த
நாள் என்பதையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதி
உடையவர்கள்
யார்
என்பதையும்
;
சகாதேவன்
குறித்துக்
கொடுத்து
துரியோதனன்
அதை
தெரிந்து
கொண்டு
சென்று
விட்டான் ; "
"களப்பலி
கொடுப்பதற்கு
ஏற்ற
நாளில்
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவரை
துரியோதனன்
களப்பலியாக
கொடுத்து
விட்டான்
என்றால் ;
துரியோதனனை
யாராலும்
வெற்றி
கொள்ளவே
முடியாது ;
துரியோதனனை
எதிர்த்து
யார்
போரிட்டாலும்
அவர்கள்
அனைவரும்
தோல்வியையே
தழுவுவர்
என்பது
உண்மை ; "
"தர்மா
இனி நாம்
போர்
செய்வதால் ஒரு
பயனும்
இல்லை "
"இப்போதே
போரின் முடிவு
தெரிந்து
விட்டது - ஆமாம்
துரியோதனன்
தான் போரில்
வெற்றி
பெறப்போகிறான்
என்பது
தெரிந்து விட்டது"
"ஆகவே
பாண்டவர்களாகிய
நீங்கள்
தோற்பது என்பது
உறுதியாகி
விட்டது"
"இனிமேல்
போர் செய்ய
வேண்டிய
அவசியமே இல்லை ;
வெற்றி
என்பது
ஒருவருக்கு
நிச்சயிக்கப்பட்டு
விட்ட
பிறகு - நாம்
போர்
செய்வதால்
ஒரு
பயனும் இல்லை."
"ஆகவே
நீங்கள் அனைவரும்
போர்
செய்யாமல்
மீண்டும்
காட்டுக்கே
செல்வதே
மேல்
போர்
செய்து
ஏன்
தோல்வியை
தழுவப்
போகிறீர்கள் ".
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
30-12-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment