பரம்பொருள்-பதிவு-93
"நாம்
செய்யும் செயலில்
எந்த
செயலில் காலம்
என்ற
ஒன்று கிடையாதோ ?
அந்த
செயல் தெய்வீகத்
தன்மை
வாய்ந்த
செயலாகக்
கருதப்படுகிறது !
உலகம்
முழுவதும்
செய்யப்படும்
செயல்களை
எடுத்துக்
கொண்டால்
மூன்று
செயல்களில்
காலம்
என்பது கிடையாது"
ஒன்று
:
"காதலின்
ஆழத்தில்
காலம்
என்பது கிடையாது !"
இரண்டு
:
"காமத்தின்
உச்சத்தில்
காலம்
என்பது கிடையாது !"
மூன்று
:
"கடவுளாக
மாறும் போது
காலம்
என்பது கிடையாது !"
"காதலின்
ஆழத்தில் ;
காமத்தின்
உச்சத்தில் ;
கடவுளாக
மாறும் போது ;
ஆகிய
மூன்று செயல்களிலும்
காலம்
என்ற ஒன்று
இல்லாத
காரணத்தினால் ,
இந்த
மூன்றும்
தெய்வீகத்
தன்மை வாய்ந்த
செயலாகக்
கருதப்படுகிறது."
"இந்த
மூன்று செயல்களில்
காதலின்
ஆழத்தில்
இருப்பதும்
;
காமத்தின்
உச்சத்தில்
இருப்பதும்
; - ஆகிய
இரண்டு
செயல்களும்
சிற்றின்பத்தைச்
சேர்ந்தது ;"
"கடவுளாகவே
மாறுவது ;
என்ற
ஒரு செயல்
பேரின்பத்தைச்
சேர்ந்தது;"
"இந்த
மூன்று
செயல்களையும்
குறிப்பது
தான்
முக்கோணம் ;
முக்கோணம்
என்பது
மூன்று
புள்ளிகளை
ஒன்றாக
இணைப்பதின்
மூலம்
உண்டாவது ;"
"காதல்
; காமம் ; கடவுள் ;
ஆகிய
மூன்றிலும் காலம்
என்ற
ஒன்று கிடையாது ;
என்பதைக்
குறிப்பது
தான்
முக்கோணம் ;"
"முக்கோணத்தில்
உள்ள
மூன்று
புள்ளிகளில்
கீழே
உள்ள
இரண்டு
புள்ளிகள்
காதல்
; காமம் ; - என்ற
இரண்டு
சிற்றின்பச்
செயல்களையும்
;
மேலே
உள்ள ஒரு
புள்ளி
கடவுள்
என்ற
பேரின்பச்
செயலையும்
குறிக்கிறது ;"
"அதைப்போல
தமிழ்
உயிர் எழுத்தில்
உள்ள
ஃ என்ற எழுத்தில்
கீழே
உள்ள
இரண்டு
புள்ளிகள்
காதல்
; காமம் ; - என்ற
இரண்டு
சிற்றின்பச்
செயல்களையும்
;
மேலே
உள்ள ஒரு
புள்ளி
கடவுள் என்ற
பேரின்பச்
செயலையும் ;
குறிக்கிறது
"
"முக்கோணமும்
;
தமிழ்
உயிர் எழுத்தில்
உள்ள
ஃ என்ற எழுத்தும் ;
காதல்
; காமம் ; கடவுள் ;
ஆகிய
மூன்று
செயல்களிலும்
காலம்
என்ற
ஒன்று கிடையாது
என்பதைக்
குறிக்கிறது"
"அர்ஜுனனும்
உலூபியும்
இரண்டு
தெய்வீகத் தன்மை
வாய்ந்த
செயல்களான
காதலின்
ஆழத்திற்கும் ;
காமத்தின்
உச்சத்திற்கும் ;
சென்று
இன்பத்தைத்
துய்த்தப்
பின் அர்ஜுனன்
தான்
பிரிந்து செல்ல
அனுமதி
அளிக்க வேண்டும்
என்று
உலூபியிடம்
கேட்டதற்கு
உலூபி
எந்த
விதமான
எதிர்ப்பும்
சொல்லாமல்
அமைதியாக
இருந்தாள் ;
அர்ஜுனனின்
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டு
எதுவும்
பேசாமல்
இருந்தாள் ;
அர்ஜுனனின்
வார்த்தைகளைக்
கேட்டு
உலூபி
எந்தவிதமான
எதிர்ப்பும்
தெரிவிக்கவில்லை;
அர்ஜுனன்
தன்னை விட்டு
பிரிந்து
செல்வதற்கு
மௌனத்தின்
மூலமே
சம்மதம்
தெரிவித்தாள் ;
வார்த்தைகளின்றி
மொனத்தின்
மூலம்
உலூபி
பேசிய
சம்மதத்தின்
வார்த்தைகளை
அர்ஜுனன்
புரிந்து கொண்டு
புறப்படத்
தயாராக இருந்தான் ;"
உலூபி
அர்ஜுனனை
அழைத்து
வந்து கங்கைக்
கரையில்
விட்டாள் ;
பிறகு
அர்ஜுனனை நோக்கி,
“நீரில்
வாழ்பவை
உங்களுக்கு
அடிபணியும் ;
தண்ணீரில்
உங்களை
யாராலும்
வெல்ல முடியாது ;”
என்ற
வரங்களை உலூபி
அர்ஜுனனுக்கு
அளித்தாள் .
"பிரிந்து
செல்லும்
நேரம்
வந்து விட்டது ;
அர்ஜுனனின்
கண்களும் ;
உலூபியின்
கண்களும் ;
வார்த்தைகளின்றி
மௌனத்தின்
மூலம்
இறுதியாக
பேசிக் கொண்டன ;"
அர்ஜுனன்,
"நான்
எப்போது
மீண்டும்
உன்னை
பார்ப்பேன்- என்று
எனக்கே
தெரியவில்லை ?
காலம்
தான் பதில்
சொல்ல
வேண்டும்"
என்ற
கேள்விகளை
கண்களில்
தாங்கியபபடி
உலூபியைப்
பார்த்தான்.
உலூபி
."தாங்கள் எப்போது
திரும்பி
வருவீர்கள் என்று
எதிர்பார்த்து
உங்கள்
வருகைக்காக
நான் என்றும்
உங்கள்
நினைவுகளுடன்
காத்துக்
கொண்டிருப்பேன் "
என்ற
ஏக்கத்துடன்
அர்ஜுனனைப்
பார்த்தாள் .
"இருவருடைய
பார்வையும்
கேள்விக்
குறிகளால்
சந்தித்து
முடித்தபின் ;
இருவருமே
ஒருவருக்கொருவர்
மௌனத்தின்
மூலம்
விடை
பெற்றனர் ;
உலூபி
தன்னுடைய
இருப்பிடம்
சென்றாள் ;
அர்ஜுனன்
எதிர்காலத்தை
நோக்கி
தன் பயணத்தை
தொடங்கினான்
;"
----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
----------
06-12-2019
//////////////////////////////////////////
No comments:
Post a Comment