பரம்பொருள்-பதிவு-127
உலூபி :
“உண்மையாகவே
நீங்கள் நல்லது
செய்வதற்கான
முயற்சியை எடுத்து
இருப்பீர்களேயானால்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்காமல்
இருப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும்
செய்து இருப்பீர்கள்
;
ஆனால்
நீங்கள் அவ்வாறு
செய்யாமல்
துரியோதனன்
அரவானைக்
களப்பலியாகக்
கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய
அனைத்து
முயற்சிகளையும்
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
“
“நீங்கள் செய்யும்
செயல்களைப்
பார்த்தால்
நல்லது
செய்வதற்கான
முயற்சிகளை
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
என்று எப்படி
சொல்ல முடியும்
“
கிருஷ்ணன் :
“துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
அரவான் வாக்கு
கொடுத்து விட்டான்
“
“அரவான்
துரியோதனனுக்கு
கொடுத்த வாக்கை
மீற முடியாது
“
“அரவான் கண்டிப்பாக
களப்பலியாகத்
தான் வேண்டும்
“
“அரவான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது “
“அரவான்
துரியோதனனுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்கள்
நடைபெறாது
வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள்
வாழ
முடியாத சூழ்நிலை
தான் ஏற்படும்;
தர்மம் அழிந்து
அதர்மம்
தலைவிரித்தாடும்
அரவானின் தியாகம்
வீணாகிப் போய்
விடும்;
அரவானுக்கு
கெட்ட
பெயர் ஏற்படும்
“
“ஆனால் அரவான்
பாண்டவர்களுக்காக
களப்பலியானால்
இந்த உலகத்தில்
நல்ல செயல்களே
நடைபெறும் ;
அரவானின் தியாகம்
வீணாகப் போய்
விடாது ;
அரவானுக்கு
கெட்ட
பெயர் ஏற்படாது
; “
என்ற காரணத்தினால்
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
அரவானை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்கு
தேவையான
முயற்சிகளை
செய்து
கொண்டிருக்கிறேன்
“
“களப்பலி கொடுப்பதை
ஆரம்பித்து
வைத்ததே
துரியோதனன்
தான் “
“அதை நல்லபடியாக
முடித்து வைக்க
வேண்டும் என்று
முயற்சி செய்து
கொண்டிருப்பவன்
நான் “
“நான் செய்யும்
செயல்கள் சரியானவை
என்பது - உனக்கு
புரியாததற்குக்
காரணம்
உன்னுடைய தாய்ப்பாசம்
“
“தாய்ப்பாசம்
என்ற
திரை உன் இதயத்தை
மூடி மறைத்து
இருக்கிறது
; - அந்தத்
திரையை விலக்கி
விட்டு பார்
உலூபி
நான் செய்யும்
செயல்கள் அனைத்தும்
சரியானவை என்று
உனக்குப் புரியும்
“
உலூபி :
“வாழ்வு அல்லது
சாவு இரண்டில்
ஒன்று கிடைக்கும்
;
போர் புரிவதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா
என்று
கேட்டால் ஒப்புதல்
அளிக்க முடியும்
;
ஏனென்றால்
போர்க்களத்திற்கு
சென்று
போர் புரிவதற்கு
வீரம் தேவை
- அங்கே
வீரத்தை வெளிப்படுத்த
வாய்ப்பிருக்கிறது
"
"ஆனால்
,
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன் மகனை
அனுப்புகிறாயா
என்று
கேட்டால் எப்படி
ஒப்புதல்
அளிக்க முடியும்
;”
களப்பலியாவதற்கு
வீரம்
தேவை இல்லையே
அங்கே வீரத்தை
வெளிப்படுத்த
எங்கே
வாய்ப்பிருக்கிறது
"
"என் மகன்
களப்பலியானான்
என்று கேட்பதை
விட ;
போர்க்களத்தில்
வீரத்துடன்
போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்பதையே
- நான்
பெருமையாகக்
கருதுகிறேன் "
"நான்
மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள
எந்தத் தாயும்
- தன்
மகன் போர்க்களத்தில்
வீரத்துடன்
போரிட்டு
மடிந்தான் என்பதைக்
கேட்கவே விரும்புவார்கள்"
"
கிருஷ்ணன் :
“களப்பலியாவதற்கு
வீரம் தேவையில்லை
என்கிறாயே உலூபி
!
விரம் இல்லாமல்
களப்பலியாக
முடியாது
என்பது உனக்குத்
தெரியுமா உலூபி
! ””
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
------------
10-02-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment