பரம்பொருள்-பதிவு-132
தர்மர்
:
“அப்படி
சொல்லாதீர்கள்
பரந்தாமா
! “
“பாலகனான
அரவானை
களப்பலி
கொடுக்காமல்
குருஷேத்திரப்
போரில்
வெற்றி
பெறுவதற்கு
வேறு
ஏதேனும்
உபாயம்
இருக்கிறதா
என்பதைத்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என்பதற்காகவே
கேட்டேன் ? “
கிருஷ்ணன்
:
“நீங்கள்
என்னைப் பற்றி
முழுமையாக
தெரிந்து
வைத்துக்
கொண்டு
இருப்பீர்கள்
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளித்து
இருப்பீர்கள் ;
ஆனால்
நீங்கள்
என்னைப்பற்றி
முழுமையாக
தெரிந்து
வைத்துக் கொள்ளாத
காரணத்தினால்
தான்
பாண்டவர்களுக்காக
அரவானை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல்
அளிக்கவில்லை
“
தர்மர்
:
“பரந்தாமா
உங்களைப் பற்றி
எங்களுக்கு
எதுவும் தெரியாது
என்று
சொல்லாதீர்கள் “
"பரந்தாமா
நீங்கள்
எங்களை
ஒரு விஷயத்தை
செய்யச்
சொன்னால் - அது
எங்களுடைய
நன்மைக்காகத்
தான்
இருக்கும் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"
நீங்கள் இந்த உலகத்திற்காக
ஒரு
செயலைச் செய்தால்
அந்த
செயல் இந்த
உலகத்தின்
நன்மைக்காகத்
தான்
இருக்கும் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
ஒரு செயலை
முயற்சி
எடுத்து செய்தால்
அந்த
செயல் தோல்வியில்
முடியாது
என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
ஒரு செயலை
வெற்றிகரமாக
முடிக்க
வேண்டும்
என்று முடிவு
எடுத்து
செயலில் இறங்கி
விட்டால்
- அந்த செயலில்
உங்களை
எதிர்த்தவர்கள்
அனைவரும்
தோல்வியையே
தழுவார்கள்
என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
எந்த ஒரு
தேவையற்ற
விஷயத்தையும்
பேச
மாட்டீர்கள் என்பதும் ;
எந்த
ஒரு தேவையற்ற
செயலையும்
செய்ய
மாட்டீர்கள்
என்பதும் ;
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
பேசும் பேச்சில்
மட்டுமல்ல
- நீங்கள்
செய்யக்கூடிய
ஒவ்வொரு
செயலிலும்
ஆயிரம்
அர்த்தங்கள்
இருக்கும் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
இல்லாமல்
செய்யப்படும்
- எந்த ஒரு
செயலும்
சுமூகமாக
முடியாமல்
பிரச்சினையில்
தான்
முடியும் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"நீங்கள்
யார் பக்கம்
இருக்கிறீர்களோ
- அவர்கள்
வெற்றியைத்
தவிர வேறு
எதையும்
சுவைக்க
மாட்டார்கள்
என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"யாருக்கு
வெற்றியை
அளிக்க
வேண்டும் ;
யாருக்கு
தோல்வியை
அளிக்க
வேண்டும் ;
என்பதை
நிர்ணயிக்கக்கூடிய
மிகப்பெரும்
சக்தியாக
நீங்கள்
இருக்கிறீர்கள் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"உங்களை
நம்பி
வந்தவர்களை
- எந்த
காலத்திலும்
கைவிடாமல்
அவர்களுக்காக
எதையும்
செய்யத்
துணிவீர்கள் என்பது
எங்களுக்குத்
தெரியும் ! "
"அதனால்
தான் சொல்கிறேன்
பரமாத்மா
- உங்களைப் பற்றி
எங்களுக்கு
எதுவும் தெரியாது
என்று
சொல்லாதீர்கள்
உங்களைப்
பற்றி எங்களுக்கு
நன்றாகவே
தெரியும் ! "
கிருஷ்ணன்
:
"தெரிந்து
என்ன பயன்
நான்
சொன்னவைகளுக்குத்
தான்
நீங்கள் ஒப்புதல்
அளிக்கவில்லையே
”
தர்மர்
:
"அரவான்
பாலகன் என்ற
காரணத்தினால்
தான்
நான்
ஒப்புதல்
அளிக்கவில்லை
- ஆனால்
நீங்கள்
பேசியவைகளில்
உள்ள
உண்மைகளைத்
தெரிந்து
கொண்டேன் ;
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலி
கொடுக்காவிட்டால்
பாண்டவர்களால்
குருஷேத்திரப்
போரில்
வெற்றி
பெற
முடியாது
என்பதையும்
தெரிந்து
கொண்டேன் ; "
"அதனால்
நான்
சம்மதிக்கிறேன்
"
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
அரவானைக்
களப்பலியாகக்
கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானைக்
களப்பலி
கொடுக்க
சம்மதிக்கிறேன் "
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
15-02-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment