பரம்பொருள்-பதிவு-131
கிருஷ்ணன் :
"மனிதர்கள் தங்களுக்கு
ஏற்பட்ட கஷ்டங்களைப்
போக்கிக் கொள்வதற்காக
ஆடு மாடுகளை
பலியிடுகின்றனர் "
"இதைப்போன்ற சிறிய
விஷயங்களுக்குத் தான்
ஆடு மாடுகளை
பலியிட முடியுமே தவிர
குருஷேத்திரப் போர்
போன்ற பெரிய
போர்களில்
வெற்றி பெறுவதற்கு
ஆடு மாடுகளை
பலியிட முடியாது "
"பாண்டவர்களாகிய
உங்களிடமிருந்து
நிலத்தை அபகரித்துக்
கொண்ட துரியோதனன் ;
அதைத் திருப்பி
தரமாட்டேன் என்று
சொன்ன துரியோதனன் ;
அதைத் தானே
வைத்துக் கொண்டு
அனுபவிக்க வேண்டும்
என்றால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்பதை
அறிந்து கொண்ட
துரியோதனன் ;
போரில் வெற்றி
பெறுவதற்காக
அரவானை
களப்பலியாகக்
கொடுக்கத் தீர்மானித்து
எதிரியான அரவானின்
பாசறைக்கே சென்று
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
அரவானிடம் பேசி
துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாக
வேண்டும் என்று
ஒப்புதல்
பெற்று விட்டான் "
" இதைத் தெரிந்து
கொண்டதால்
அதை மாற்றி
அமைப்பதற்காக - நான்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "
"ஆனால் நிலத்தை
இழந்த நீங்கள்
நிலத்தை மீட்க
வேண்டும் என்ற
எண்ணம் இல்லாமல் ;
நிலத்தை மீட்பதற்கு
எந்தவிதமான
முயற்சியும் எடுக்காமல் ;
அன்பு ; பாசம் ;
கருணை ; இரக்கம் ;
என்று பேசிக்கொண்டு
சரியான முடிவு
எதுவும் எடுக்காமல் ;
நான் பேசியதில்
ஏதாவது அர்த்தம்
இருக்குமே என்று
ஆராய்ந்து கூட
பார்க்காமல்;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
போரில் வெற்றி
பெறுவதற்கு
ஏதேனும் உபாயம்
இருக்கிறதா ? - என்று
யோசித்துப் பார்த்துச்
சொல்லுங்கள்
என்கிறீர்கள் "
"குருஷேத்திரப்போர்
பகைவர்களுக்கிடையே
நடைபெறப்போகும்
போர் அல்ல
உறவுகள்
பகையானதால்
நடைபெறப்போகும் போர்
"
"அரவானை
யார் களப்பலி
கொடுக்கிறார்களோ
அவர்கள் தான்
குருஷேத்திரப்
போரில் வெற்றி
பெற முடியும் "
"அதனால் தான்
அரவானின் களப்பலி
பாண்டவர்களுக்காக
நடக்க வேண்டும்
என்று முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் "
"நீங்கள் அனைவரும்
அரவானை
களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளிக்கவில்லை
என்றால்
பாண்டவர்களுக்காக
அரவானை களப்பலி
கொடுப்பதற்காக
நான் செய்து கொண்டு
வரும் அனைத்து
முயற்சிகளையும்
நிறுத்தி விடுகிறேன்
"
"பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலி கொடுப்பது
நிறுத்தப் பட்டால் ;
துரியோதனன்
அரவானை
களப்பலி கொடுத்து
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விடுவான் ;
அரவானை களப்பலி
கொடுக்காமல்
பாண்டவர்கள்
போரில் வெற்றி பெற
முடியாது என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் போர்
செய்ய வேண்டும்;
நீங்கள் போரிலிருந்து
விலகி காட்டிற்கு
சென்று விடுங்கள் "
"நானும் என்னுடைய
வழியில் சென்று
விடுகிறேன்
போர் தேவையில்லை "
"குருஷேத்திரப்போர்
என்ற ஒன்று
தேவையேயில்லை "
----------- இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
------------14-02-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment