February 18, 2020

பரம்பொருள்-பதிவு-134


          பரம்பொருள்-பதிவு-134

கிருஷ்ணன்  :
“வேறு யார்
உலூபியே தான் ;
அரவானின் தாயும்
அர்ஜுனனின்
மனைவியுமான
உலூபியே தான் ;
உங்களை கேள்வி
கேட்க வருபவர்
உலூபியே தான் ;”

அர்ஜுனன்  :
“என்ன உலூபியா
__________________?
உலூபி ஏன்
இங்கு வருகிறாள் ?
எதற்காக வருகிறாள் ?
எங்களை ஏன் அவள்
கேள்விகள் கேட்க
வர வேண்டும் “

கிருஷ்ணன்  :
“வருகின்ற அமாவாசை
தினத்தன்று அரவானைக்
களப்பலியாகக் கேட்டு
துரியோதனன்
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாவதாக
அரவான் எனக்கு
வாக்கு கொடுத்தான் “

“அரவானிடம் இருந்து
வாக்கு பெற்றாலும்
அவன் தாயிடம்
இருந்து ஒப்புதல் பெற
வேண்டும் என்பது
களப்பலி கொடுப்பதற்கான
விதிமுறைகளில்
ஒன்றல்லவா அதனால் தான்
ஒப்புதல் பெறுவதற்காக
உலூபியைச் சந்தித்தேன் “

“உலூபி நான் சொன்ன
அனைத்தையும்
பொறுமையாகக் கேட்டு
விட்டு அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதைப் பற்றி
அரவானின் தந்தை
என்ன நினைக்கிறார்  ;
என்ன சொல்லப் போகிறார் ;
என்பதைத் தெரிந்து
கொண்ட பிறகு தான்
தன்னால் ஒப்புதல்
அளிக்க முடியும்
என்று சொல்லி விட்டாள் “

“அதனால் நானும்
அரவானின் தந்தை
அர்ஜுனனிடம் மட்டுமல்ல
அரவானின் இரத்த
சொந்தம் கொண்ட
அனைவரிடமும் ஒப்புதல்
பெற்று வருகிறேன்
என்று சொன்னேன் “

“அதன்படியே அரவானின்
தந்தையான அர்ஜுனன்
மற்றும் அரவானின்
இரத்த சம்பந்தம் கொண்ட
உங்கள் அனைவரிடமும்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு ஒப்புதல்
பெற்று விட்டேன் “

“நீங்கள் அனைவரும்
ஒப்புதல் அளித்து விட்ட
காரணத்தினால்
இப்போது அரவானின்
தாயான உலூபியிடம்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு ஒப்புதல்
பெற வேண்டும் “

“உலூபி ஒப்புதல்
அளிப்பதற்கு முன்னர்
நீங்கள் அனைவரும்
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு எப்படி
சம்மதித்தீர்கள் என்று
உலூபி உங்களிடம்
கேள்விகள் கேட்கப்
போகிறாள் “

“அரவானை களப்பலியாக
கொடுப்பதற்கு
சம்மதித்ததற்கான
காரணங்களைக் கேட்பாள் ;
அவள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள் ;
அவள் கேள்விகளுக்கு
பதில் சொல்ல வேண்டியது
உங்களுடைய கடமை ;”

“உலூபி கேட்கும்
கேள்விகளுக்கு நீங்கள்
சொல்லும் பதிலைப்
பொறுத்துத் தான் உலூபி
தன் மகன் அரவானைக் 
களப்பலியாகக் 
கொடுக்க சம்மதிப்பாள் “

“அரவானின் தாயான உலூபி
சம்மதித்தாள் மட்டுமே
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுக்க முடியும் ;
இல்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுக்க முடியாது ;”

“பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு அரவானின்
தாயான உலூபியின்
சம்மதம் கண்டிப்பாக
வேண்டும் என்பதை
மட்டும் நன்றாக நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள் “

தர்மர்  :
“மகனைப் பற்றிய
கவலையில் இருக்கும்
ஒரு தாய் கேட்கும்
கேள்விகளுக்கு எங்களால்
எவ்வாறு பதில்
சொல்ல முடியும்”

கிருஷ்ணன்  :
“பதில் சொல்லித் தான்
ஆக வேண்டும் தர்மா
பதில் சொல்லித் தான்
ஆக வேண்டும்
உலூபியின்
கேள்விகளுக்கு நீங்கள்
பதில் சொல்லித் தான்
ஆக வேண்டும் “

“யார் அங்கே ?”

(காவலாளி வருகிறான்)

“நான் சொன்னேன் என்று
உலூபியை இங்கே அழைத்து
வா ஒரு மகாராணிக்குரிய
அனைத்து மரியாதையுடன்
உலூபியை அழைத்து வா “

(காவலாளி உலூபியை
அழைத்து வருகிறான்
உலூபி அனைவரின் முன்பும்
நின்று வணங்குகிறாள் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 18-02-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment