பரம்பொருள்-பதிவு-135
கிருஷ்ணன்
:
" உலூபி
அரவானின் தந்தை
மற்றும் அரவானுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று
விட்டு
வந்து உன்னை
சந்திக்கிறேன்
என்று
சொன்னேன் அல்லவா
?
சொன்னபடியே
அனைவரிடமும்
ஒப்புதல்
பெற்று விட்டேன்
;
ஒப்புதல் அளித்த
அனைவரும் இங்கேயே
இருக்கின்ற
காரணத்தினால்
தான் நான் உன்னை
இங்கே அழைத்து
வரச் சொன்னேன்
"
"நீ !
ஏதேனும் அவர்களிடம்
கேட்க விரும்பினால்
கேட்டுக் கொள்ளலாம்
"
"நீ !
ஒப்புதல் அளித்தால்
மட்டுமே பாண்டவர்கள்
சார்பாக அரவானைக்
களப்பலி கொடுக்க
முடியும்
என்பதை உனக்கு
ஞாபகப்
படுத்த விரும்புகிறேன்
; "
உலூபி :
(உலூபி தர்மரைப்
பார்த்து பேசுகிறாள்)
"தர்மராஜா
தர்மத்தைக்
கடைபிடித்து
தர்மத்தின்
வழி நடப்பவர்கள்
நீங்கள் ;
தர்மத்தைக்
காப்பாற்ற
முயற்சி செய்யாமல்
எப்படி அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தீர்கள்
"
தர்மர் :
"தர்மத்தை
காப்பாற்ற
வேண்டும் என்ற
காரணத்திற்காகத்
தான்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன்
"
"தர்மத்திற்கும்
அதர்மத்திற்கும்
இடையே நடைபெறும்
போரில் தர்மம்
வெற்றி
பெற்றாக வேண்டும்
;
தர்மம் அழிந்து
அதர்மம்
நிலைபெற்று
விடக்கூடாது
என்பதற்காகத்
தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன்"
“நாங்கள் போரிட்டு
வெற்றி பெற்று
அதன் மூலம்
தர்மத்தை
நிலை நாட்டுவதற்கு
முயற்சிகள்
செய்து
கொண்டிருந்தோம்
;
ஆனால் துரியோதனன்
போரிட்டு வெற்றி
பெற
முயற்சி செய்யாமல்
களப்பலி கொடுத்து
வெற்றி பெற்று
அதன்
மூலம் அதர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
முயற்சிகள்
செய்து
கொண்டிருந்தான்
;”
"அதர்மத்தை
நிலை
நாட்டுவதற்காக
துரியோதனன்
களப்பலியாக
தேர்ந்தெடுத்தது
அரவானைத் தான்
"
"அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்ற முடியாது
என்பதை நாங்கள்
தெரிந்து கொண்ட
காரணத்தினால்
தான் - நான்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக் களப்பலியாக
கொடுக்க சம்மதித்தேன்
"
"தர்மம்
அழிந்து
விடக்கூடாது
என்பதற்காகத்
தான் சம்மதித்தேன்
"
"அதர்மம்
அழிய வேண்டும்
என்ற காரணத்திற்காகத்
தான் சம்மதித்தேன்
"
"வருங்காலத்தில்
மக்கள்
துன்பம் நீங்கி
மகிழ்ச்சியுடன்
வாழ வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்தான்
சம்மதித்தேன்
"
"நான்
என்னுடைய நாட்டை
திரும்பப் பெற
வேண்டும்
என்பதற்காகவோ
- நான்
அரசனாக வேண்டும்
என்பதற்காகவோ
;
நாட்டை ஆள வேண்டும்
என்பதற்காகவோ
;
சுயநலத்துடன்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க
சம்மதிக்கவில்லை
;
பொது நலத்தைக்
கருத்தில் கொண்டு
தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தேன்"
"தர்மத்திற்கும்
அதர்மத்திற்கும்
இடையே
உள்ள வேறுபாட்டையும்
;
சுய நலத்திற்கும்
பொது நலத்திற்கும்
உள்ள
வேறுபாட்டையும்
;
நல்லதுக்கும்
கெட்டதுக்கும்
உள்ள வேறுபாட்டையும்
;
நீ தெரிந்து
கொண்டால்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு
நான்
ஒப்புதல் கொடுத்தது
என்னுடைய
சுயநலத்திற்காக
இல்லை
என்பதையும்
;
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காகத்
தான்
நான் பொது நலத்துடன்
செயல்பட்டேன்
என்பதையும்
உன்னால்
தெரிந்து கொள்ள
முடியும் ; "
"அரவானைக்
களப்பலி
கொடுப்பதற்கு
நான்
ஒப்புதல் அளித்தது
சுயநலத்தைக்
கொண்டதாக
இருந்திருந்தால்
நான்
செய்ததை நீ
தவறு
என்று சொல்லலாம்
;
ஆனால் நான்
இதை
சுயநலத்துடன்
செய்யவில்லை
பொது நலத்திற்காகத்
தான் செய்தேன்
என்பதை நீ
உணர்ந்து கொண்டால்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக் களப்பலி
கொடுப்பதற்கு
நான்
ஒப்புதல் அளித்தது
சரியானது தான்
என்பதை
நீ உணர்ந்து
கொள்வாய் ; "
உலூபி :
(உலூபி எந்தவிதமான
பதிலும் சொல்லாமல்
அமைதியாக இருந்தாள்
எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்த
உலூபி பீமனிடம்
சென்றாள்)
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
20-02-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment