February 22, 2020

பரம்பொருள்-பதிவு-137


           பரம்பொருள்-பதிவு-137

உலூபி :
“மைத்துனர் நகுலன்
அவர்களே !
நீங்கள் சென்ற
வழி அனைத்தும்
சரியான
வழியாகத் தான்
இருந்திருக்கிறது ;
தவறான வழியாக
இருந்ததில்லை ;
ஆனால் இப்போது
மட்டும் எப்படி
தவறான வழியை
சரியாகத்
தேர்ந்தெடுத்து
இருக்கிறீர்கள் ? “

நகுலன் :
“நான் எப்போதும்
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்து
சென்றதில்லை ;
என்னுடன் இருக்கும்
நல்லவர்கள் காட்டும்
வழியில் தான் சென்று
கொண்டிருக்கிறேன் ; “

 “நல்லவர்கள் காட்டும்
வழி எப்படி தவறான
வழியாக இருக்க முடியும் “

“அதனால் தான் நான்
செல்லும் வழி சரியான
வழியாக இருக்கிறது “

“எந்த ஒரு செயலைச்
செய்தாலும் நம்
முன்னால் வந்து நிற்பது
சரியான வழி  ;
தவறான வழி  ;
என்ற இரண்டு
வழிகள் தான் “

“சரியான வழி என்று
நினைத்துக் கொண்டு
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்து சென்று
கொண்டிருப்பவர்கள்
அனேகம் பேர்
இந்த உலகத்தில்
இருக்கின்றனர் “

“ஆனால் சரியான
வழியை சரியாகத்
தேர்ந்தெடுத்து சென்று
கொண்டிருப்பவர்கள்
மிகச் சிலரே
இந்த உலகத்தில்
இருக்கின்றனர் “

“சரியான வழி என்று
நினைத்துக் கொண்டு
தவறான வழியைத்
தேர்ந்தெடுத்தவர்களில்
மிக முக்கியமானவர்
அண்ணன்
துரியோதனன் அவர்கள் ;
அவர் தேர்ந்தெடுத்த
தவறான வழி
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் பெற்றது ; “

“ சரியான வழியை
சரியாகத் தேர்ந்தெடுத்தது
பாண்டவர்களே  ! “

“பாண்டவர்கள் தேர்ந்தெடுத்த
சரியான வழி
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் பெற்றது ; “

“சரியான வழி
(அல்லது)
தவறான வழி
இந்த இரண்டு வழிகளில்
ஏதேனும் ஒரு வழியில்
அரவான் களப்பலியாகத்
தான் வேண்டும் “

“ இரண்டில் எந்த வழியில்
களப்பலியாகப்
போகிறோம் என்பது
இது வரை
அரவானுக்கே தெரியாது

“பாண்டவர்கள் சார்பாக
அரவான் களப்பலியாவதே
சரியான வழி ;
பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியானால்
அரவானுக்கு மட்டுமல்ல
அனைவருக்கும்
நல்லது என்ற
காரணத்தினால் தான்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளித்தேன் “

“நான் தவறான வழிக்கு
சரியாக ஒப்புதல்
அளிக்கவில்லை “

“சரியான வழிக்கு
சரியாகத் தான் ஒப்புதல்
அளித்து இருக்கிறேன் “

“நான் தேர்ந்தெடுத்தது
சரியான வழி தான் “”

“சரியான வழியைத்
தான் நான்
தேர்ந்தெடுத்திருக்கிறேன்
என்பதை நீங்கள்
உணர்ந்து கொண்டால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க
ஒப்புதல் அளிப்பீர்கள் “

“உங்களுடைய
ஒப்புதலுக்காக
அனைவரையும் போல்
நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன்”

(நகுலனிடம் இதற்கு
மேல் கேட்பதற்கு
எதுவும் இல்லை என்ற
காரணத்தினால் உலூபி
சகாதேவனிடம் சென்றாள் ;
உலூபி சகாதேவனிடம்
கேட்க வேண்டிய
கேள்விகள்
நிறையவே இருந்தது ;
இரண்டு பேருடைய
கண்களும் நேருக்கு
நேராக மோதிக்
கொண்டன வார்த்தைகள்
மோதுவதற்கு ஆயத்தமாகின )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 22-02-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment