March 02, 2020

பரம்பொருள்-பதிவு-144


          பரம்பொருள்-பதிவு-144

உலூபி :
(அர்ஜுனன் அருகில்
போய் நின்றாள் உலூபி ;

உலூபி தன்னுடைய
பேச்சைத்
தொடங்குவதற்குள்
அர்ஜுனன் தன்னுடைய
பேச்சைத் தொடங்கினான்)

அர்ஜுனன் :  
“உலூபி! நீ என்னிடம்
என்ன கேட்கப்
போகிறாய் என்பது
எனக்குத் தெரியும் ? “

“பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
பெற்ற தந்தையான
நீங்கள் எப்படி
ஒப்புதல் அளித்தீர்கள்
என்று தானே
கேட்கப் போகிறாய் ? “

“நீ கேட்க நினைக்கும்  
இந்த கேள்விக்கு பதில்
சொல்ல என்னிடம்
வார்த்தைகள் இல்லை  

"நான் எந்த வார்த்தையைப்
பயன்படுத்தினாலும்
அது உன் கேள்விக்கு
பதிலாக இருக்காது"

"உன்னுடைய வேதனைகளைப்
போக்குவதற்கு - நான்
எத்தகைய வார்த்தைகளைப்
பயன்படுத்த வேண்டும்
என்று எனக்குத்
தெரியவில்லை "

"பெற்ற மகனை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு பெற்ற
தந்தையே ஒப்புதல்
அளித்து விட்டார்
என்ற வார்த்தைகளைக்
கேட்ட போது பெற்ற
தாயான உன்னுடைய
மனம் எவ்வளவு
வேதனைப்பட்டிருக்கும்
என்பது எனக்குத் தெரியும் "

"உனக்கு ஆறுதல்
சொல்வதற்கு என்னிடம்
வார்த்தைகள் இல்லாத
காரணத்தினால் தான்
நான் பேச முடியாமல்
வார்த்தைகளின்றி
தவித்துக் கொண்டிருக்கிறேன் "

"அப்படியே முயற்சி
செய்து நான்
வார்த்தைகளைப்
பயன்படுத்தினாலும்-அது
உன் வேதனையைப்
போக்காது என்பது
எனக்குத் தெரியும் "

"நான் எந்த ஒரு
வார்த்தையைப்
பயன்படுத்தினாலும்
அந்த வார்த்தை
நான் செய்த செயலை
நியாயப் படுத்துவதாகத்
தான் இருக்குமே தவிர
எது உண்மை என்பதை
உனக்கு உணர
வைப்பதற்காக நான்
பேசிய வார்த்தைகளாக
இருக்காது "

"பெற்ற தாயின்
கண்ணிலிருந்து வடியும்
கண்ணீரைத் துடைப்பதற்கு
பெற்ற தந்தையான
என்னிடம் எந்த ஒரு
வார்த்தையும் இல்லை "

"நம்முடைய காதல்
ஜோதியில் காதல்
சின்னமாகப் பிறந்தவன்
தான் அரவான் "

"நம்முடைய காதலுக்கு
சின்னமாக இருக்கும்
அரவானையே நான்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளித்து
இருக்கிறேன் என்றால்
அதற்கு பின்னால்
இருக்கும் உண்மையை
நீ உணர்ந்து
கொள்ள வேண்டாமா?"

"ஒரு தந்தையாக இருந்து
இந்த உலகத்திற்கும்
இந்த உலகத்தில் உள்ள
மக்களுக்கும் நான் என்ன
செய்ய வேண்டுமோ
அதை செய்து
முடித்து விட்டேன் "

"ஆமாம் வருங்கால
உலகம் நிம்மதியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக் களப்பலியாகக்
கொடுக்க ஒப்புதல்
அளித்து விட்டேன் "

"ஒரு தாயாக இருந்து
இந்த உலகத்திற்கும்
இந்த உலகத்தில் உள்ள
மக்களுக்கும் நீ என்ன
செய்ய வேண்டுமோ அதை
செய்வாய் என்று
எதிர்பார்க்கிறேன் "

"ஆமாம் வருங்கால
உலகத்தின்
நன்மைக்காக நீயும்
பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளிப்பாய்
என்று நம்புகிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாக கொடுப்பதற்கு
உன்னுடைய முடிவே
இறுதியானது என்ற
காரணத்தினால்
தான் கேட்கிறேன் "

"பாண்டவர்கள் சார்பாக
அரவானைக்
களப்பலியாகக் கொடுக்க
ஒப்புதல் அளிப்பாயா "

( கணவனின் பேச்சுக்கு
மறு பேச்சு
பேசாத பத்தினி
தெய்வமான உலூபி ;
கணவனிடம் எந்த
கேள்வியையும்
கேட்காமல்
அமைதியாக
இருந்த உலூபி ;
திரௌபதி அருகில்
சென்றாள் )

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 02-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment