March 04, 2020

பரம்பொருள்-பதிவு-146


           பரம்பொருள்-பதிவு-146

திரௌபதி :
“நாட்டை அரசாட்சி
செய்யும் மன்னர்
திருதராஷ்டிரர்
இருந்த அவையில்  

“யாராலும் வெல்ல
முடியாத பீஷ்மர் ;
குருவுக்கு உதாரணமாக
இருக்கும்
துரோணாச்சாரியார் ;
கலைகளுக்கு தலைவராக
இருக்கும் கிருபாச்சாரியார் ;
ஞானத்திற்கு உதாரணமாக
இருக்கும் விதுரர் ;
ஆகியோர் நிரம்பி
இருந்த அவையில்  

“தர்மத்தின் காவலனாக
இருக்கும் தர்மர் ;
வீரத்திற்கு வித்தாக
இருக்கும் பீமன் ;
யாராலும் வீழ்த்த
முடியாத அர்ஜுனன் ;
நெருங்க முடியாத
நகுலன் ;
சோதிட மேதை
சகாதேவன் ;
ஆகியோர் நிரம்பி
இருந்த அவையில்  

“நியாயத்தை உணர்ந்த
நீதிமான்களும் ;
கண்ணியத்தை போதிக்கும்
கல்விமான்களும் ;
அனுபவத்தை உணர்ந்த
ஞானவான்களும் ;
நீதிக்காக போராடும்
நியாயவான்களும் ;
தர்மத்தை கடைபிடிக்கும்
தர்மவான்களும் ;
உண்மை வழி செல்லும்
சத்தியவான்களும் ;
அறிவை அறிந்த
ஆன்மஞானிகளும் ;
நிதானத்தை இழக்காத
உண்மைவாதிகளும் ;
நிரம்பி இருந்த அவையில் “

“வசதியான குடும்பத்தில்
பிறந்த என்னை ;
இளவரசியாக
வளர்ந்த என்னை ;
ராணியாக
இருந்த என்னை ;
திரௌபதியான என்னை ;
துரியோதனனின்
தூண்டுதலின் பேரில்
துச்சாதனனும்
துரியோதனனும்
என்னை சபை
நடுவில் வைத்து
அவமானப்படுத்தினார்கள் “

“நாட்டுக்கு ராணியாக
இருந்த எனக்கே
இவ்வளவு
அவமானம் என்றால்
துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாகி
துரியோதனன் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்  
வருங்கால
உலகத்தில் எந்த
ஒரு பெண்ணும்
மானத்தோடு
வாழ முடியாது”

“பாண்டவர்கள் சார்பாக
அரவான்
களப்பலியானால்
மட்டுமே வருங்கால
உலகத்தில் பெண்கள்
மானத்தோடு
வாழ முடியும் ;”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காகத் தான் ;
நான் பாண்டவர்கள்
சார்பாக அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளித்தேன் “

“இந்த ஒரு
காரணத்திற்காக
மட்டும் தான் நான்
ஒப்புதல் அளித்தேன்
வேறு எந்த ஒரு
காரணத்திற்காகவும்
நான் ஒப்புதல்
அளிக்கவில்லை ; “

“வருங்கால உலகத்தில்
பெண்கள் மானத்தோடு
வாழ வேண்டும்
என்பதற்காக ஒரு
பெண்ணான நான்
பெண்ணான
உன்னிடம் கேட்கிறேன்”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் மானத்தோடு
வாழ்வதற்கு பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாக வேண்டுமா?
அல்லது வேண்டாமா ?
என்பதை முடிவு செய் “

“யோசித்துப் பார்த்து
ஒப்புதல் அளி என்று
நான் சொல்ல மாட்டேன்”

“வேண்டுமா அல்லது
வேண்டாமா என்று
தான் நான் கேட்கிறேன்”

“சொல் உலூபி சொல்”

“வருங்கால உலகத்தில்
பெண்கள் மானத்தோடு
வாழ்தற்கு பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாக
வேண்டுமா அல்லது
வேண்டாமா ?”

“வேண்டுமா வேண்டாமா”

உலூபி :
(உலூபியின்
கண்களிலிருந்து
கண்ணீர் கொட்டியது ;
திரௌபதியை கட்டி
பிடித்து அழத்
தொடங்கினாள் உலூபி ;
உலூபியின் மனதில்
இருந்த சோகம்
அனைத்தும் அவள்
கண்களில் இருந்து
கண்ணீராகக் கொட்டியது ;
திரௌபதி உலூபியை
தன் மார்போடு
அணைத்துக் கொண்டாள் ;
அழுகுரலுக்கு நடுவே
உலூபியின் வாயிலிருந்து
வார்த்தைகள்
வெளிப்படத் தொடங்கின ;)

-----------இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 04-03-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment