பரம்பொருள்-
பதிவு-152
அரவான் :
“களப்பலி ஆனாலும்
வெட்டுப்பட்ட
என்
தலைக்கு உயிர்
இருக்க வேண்டும்
;
வெட்டுப்பட்ட
என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப்
போர்
முழுவதையும்
பார்க்கும்
சக்தியை
எனக்குத் தர
வேண்டும் ;”
இது என்னுடைய
முதலாவது வரம்”
கிருஷ்ணன் :
“முதல் வரத்தில்
எந்த பிரச்சினையும்
இல்லை ;
அடுத்து ? “
அரவான் ;
“நான் ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அவளுடன்
ஓர் இரவு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
“
கிருஷ்ணன் :
“அரவான் நீ
கேட்ட
முதல் வரத்தை
நிறைவேற்றி
விடலாம் ; ”
“ஆனால்
இரண்டாவது வரத்தை
நிறைவேற்றுவது
என்பது
கடினமான ஒன்று
;
நிறைவேற்றுவதற்கு
தேவையான
சாத்தியக் கூறுகள்
எதுவும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை
; “
“நாளை காலை
- நீ
களப்பலியாகப்
போகிறாய்
என்பது தெரிந்தால்
எந்த பெண் -
உன்னை
இன்று இரவு
திருமணம் செய்து
கொள்ள சம்மதிப்பாள்
;
“சம்மதிக்கக்கூடிய
பெண்
இந்த உலகத்தில்
எங்கே கிடைப்பாள்
;
எங்கே தேடினாலும்
கிடைக்க மாட்டாளே
; “
“அப்படி இருக்கும்
போது
நீ கேட்ட இரண்டாவது
வரத்தை என்னால்
எப்படி நிறைவேற்ற
முடியும் என்று
எனக்குத் தெரியவில்லை
“
“இருந்தாலும்
எனக்கு
ஒரு சந்தேகம்
ஏற்பட்டுள்ளது
அதை
நீ தான் தீர்க்க
வேண்டும் “
அரவான் ;
“நான் தீர்க்கும்
அளவுக்கு
தங்களுக்கு
அப்படி
என்ன சந்தேகம்
தங்களுக்கு
ஏற்பட்டுள்ளது
பரந்தாமா ? “
கிருஷ்ணன் :
“பெண் சுகம்
அனுபவிக்க
வேண்டும் என்ற
எண்ணத்துடன்
தானே
நீ இரண்டாவது
வரத்தைக் கேட்கிறாய்
“
அரவான் :
“இல்லை நான்
அதற்காக கேட்கவில்லை
“
“நான் கேட்ட
வரத்தின்
அர்த்தத்தை
தாங்கள்
தவறாக எடுத்துக்
கொண்டு இருக்கிறீர்கள்
‘
“கடவுளான தாங்களே
தவறான அர்த்தத்தை
எடுத்துக் கொண்டீர்கள்
என்றால் - இந்த
உலகத்தில் வாழும்
மக்களுக்கு
நான்
கேட்ட வரத்தின்
அர்த்தம் எப்படி
புரியும் “
“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இரண்டு காரணங்கள்
இருக்கிறது
“
“ஒன்று
நான் இறந்த
பிறகு
கணவன் என்று
சொல்லி
என் பிணத்தை
கட்டிபிடித்து
கதறி
அழுவதற்கு மனைவியாக
இந்த உலகத்தில்
எனக்கு ஒரு
உறவு
இருக்க வேண்டும்
- என்ற
காரணத்திற்காகவும்
;
நான் இறந்த
பிறகு
என்னுடைய இறுதிச்
சடங்கை உரிமை
கொண்டாடி செய்து
முடிப்பதற்கு
மனைவி
என்ற முறையில்
ஒரு பெண் இருக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும்
;
தான் - நான்
ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன்
“
“இரண்டு
ஒரு மனிதனுடைய
வாழ்வில் எதிர்ப்படும்
நான்கு பருவங்களான
பிரம்மச்சரியம்
;
கிரகஸ்தம்
;
வானப்பிரஸ்தம்
;
சந்நியாசம்
;
ஆகியவற்றில்
பிரம்மச்சரியம்
;
வானப்பிரஸ்தம்
;
சந்நியாசம்
ஆகிய
மூன்றையும்
பார்த்து விட்டேன்
“
“இல்லறம் என்று
சொல்லப்படக்கூடிய
கிரகஸ்தம் என்பதையும்
பார்த்து விட்டால்
நான் முழுமையான
மனிதனாகி விடுவேன்
என்ற காரணத்திறக்காகவும்
தான் – நான்
ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன்
“
“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இவைகள் இரண்டும்
தான் காரணம்
;
வேறு எந்தவொரு
காரணமும் இல்லை
“
-----------இன்னும்
வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
08-03-2020
------------மகளிர்
தின
வாழ்த்துக்கள்
//////////////////////////////////////////
No comments:
Post a Comment