March 26, 2020

பரம்பொருள்-பதிவு-162


              ஜபம்-பதிவு-410
            (பரம்பொருள்-162)

(மாளிகைக்கு வெளியே
நின்று இயற்கைக்
காற்றை சுவாசித்துக்
கொண்டிருந்த அரவான்-அந்த
கும்மிருட்டில் தன்னுடைய
மாளிகை நோக்கி யாரோ
ஒருவர் நடந்து வந்து
கொண்டிருக்கிறார்
என்பதை பார்த்த அரவான்
அவர் யார் என்று
தெரியாததால் அவர் யார்
என்று தெரிந்து கொள்ளும்
பொருட்டு தன்னை நோக்கி
வந்து கொண்டிருப்பவரை
அணுகி அவரிடம்
பேசத் தொடங்கினார்)

அரவான் :
“பரந்தாமன் கிருஷ்ணன் தானே
உங்களை அனுப்பி வைத்தார்”

திருநங்கை  :
“யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் இல்லை ;
யாரும் என்னை அனுப்பி
வைக்கவும் முடியாது ;
நானே வந்தால் தான்
உண்டு - அதனால் தான்
நானே இங்கு வந்தேன்”

அரவான் :
“அப்படி என்றால் நீங்கள்”

திருநங்கை :
“நான் தான் கிருஷ்ணன்”

அரவான் :
“என்னது நீங்கள் கிருஷ்ணனா”

திருநங்கை :
“ஆமாம் நான் தான்
கிருஷ்ணன் “

அரவான் :
“என்ன சொல்கிறீர்கள்?”

திருநங்கை :
“நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான்  :
“ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்”

திருநங்கை :
“இந்த உலகத்தில் உள்ள
அனைத்து பொருட்களிலும்
அனைத்து உயிர்களிலும்
ஊடுருவி நீக்கமற
நிறைந்திருக்கக்கூடிய
கிருஷ்ணன் என் உள்ளேயும்
நிரம்பி இருக்கிறார்”

“அப்படி என்றால்
அவர் தானே நான் ;
நான் தானே அவர் ; ”

“அதனால் நான் தான்
கிருஷ்ணன் என்றேன்”

அரவான் :
“நீங்கள் அழகாக
இருக்கிறீர்கள் என்று தான்
நினைத்தேன் - ஆனால்
உங்களுக்கு அழகாகவும்
பேசத் தெரியும் என்பதை
நீங்கள் பேசுவதிலிருந்து
தெரிந்து கொண்டேன் “

“உங்களை அனுப்பி
வைத்ததற்கான காரணத்தை
உங்களுக்கு சொன்னார்களா ?“

“உங்களை இங்கு அனுப்பி
வைத்ததற்கான காரணம்
உங்களுக்கு தெரியுமா?”

திருநங்கை :
“யாரும் என்னை
அனுப்பி வைக்கவில்லை
நானே தான் வந்தேன் ;
யார் பேசும் பேச்சைக்
கேட்டும் நான் முடிவு
எடுப்பதில்லை - எனக்கு
சரி என்று பட்டால்
மட்டுமே நான் அந்த
செயலை செய்வேன் ;
எனக்கு சரி என்று
பட்டது அதனால் தான்
நானே நேரில் வந்தேன் “

அரவான் :
“அப்படி என்றால்
யாரும் உங்களை
கட்டாயப்படுத்தவில்லையே”

திருநங்கை :
“யாரும் என்னை
கட்டாயப்படுத்த முடியாது ;
நல்லவர்கள்
எங்கிருந்தாலும்
அவர்கள் செய்யக்கூடிய
நல்லதுக்கு நான்
எப்போதும் துணையாக
இருந்திருக்கிறேன் ;”

“உங்களையே
அர்ப்பணித்து இந்த
உலகத்திற்காக - நீங்கள்
செய்யப்போகும் நல்ல
செயலுக்காக - நான்
என்னுடைய வாழ்க்கையையே
உங்களுக்காக அர்ப்பணிக்க
வந்திருக்கிறேன் - உங்களுக்கு
துணையாக இருக்க
வந்திருக்கிறேன்”

அரவான்  :
“அப்படி என்றால்
அனைத்து உண்மைகளும்
தெரிந்து தான் இங்கு
வந்திருக்கிறீர்கள்”

திருநங்கை :
“உண்மை தெரியவில்லை
என்றால் நான் வந்தே
இருக்க மாட்டேன் உண்மை
எனக்கு தெரிந்த காரணத்தினால்
தான் நானே வந்தேன் “

அரவான் :
“அழகாக இருக்கிறீர்கள்
அறிவுபூர்வமாக பேசுகிறீர்கள்
உண்மையை உணர்ந்து
இருக்கிறீர்கள் - உங்களை
என்னுடைய இல்லறத்
துணைவியாக ஏற்றுக்
கொள்ள விரும்புகிறேன் ;
உங்களுக்கு விருப்பமா ?
உங்களுடைய
சம்மதத்திற்காகத் தான்
காத்துக் கொண்டிருக்கிறேன்
என்ன சொல்கிறீர்கள் ?“

திருநங்கை :
“எனக்கு சம்மதம் இல்லை”

அரவான் :
“என்ன சம்மதம் இல்லையா”

திருநங்கை :
“ஆமாம் எனக்கு சம்மதம்
இல்லை - நீங்கள் என்னை
மரியாதையுடன் அழைப்பதில்
எனக்கு சம்மதம் இல்லை “

அரவான் :
“வேறு எப்படி உங்களை
நான் அழைப்பது “

திருநங்கை :
“நீ! வா! போ! என்று
என்னை ஒருமையில்
அழையுங்கள்  

அரவான் :
“அப்புறம்”

திருநங்கை :
“கண்ணே! முத்தே! மணியே!
என்று அழையுங்கள் “

அரவான் :
“அவ்வளவு தானா அல்லது
இன்னும் ஏதாவது இருக்கிறதா “

திருநங்கை :
“உங்களுக்கு எப்படி
பிடித்திருக்கிறதோ ?
அப்படியே அழையுங்கள்”

அரவான் :
“அப்படி நான் உங்களை
அழைக்க வேண்டும்
என்றால் நீங்கள் எனக்கு
சொந்தமாக வேண்டாமா?”

திருநங்கை :
“நான் உங்களுக்கு மட்டுமே
சொந்தமாக இருப்பதற்காகத்
தான் வந்திருக்கிறேன் “

அரவான் :
“நான் உங்களுக்கு
சொந்தமாகவும் நீங்கள்
எனக்கு சொந்தமாகவும்
இருக்க வேண்டும் என்றால்
நாம் இருவரும் திருமணம்
செய்து கொள்ள வேண்டும் “

திருநங்கை  :
“நான் அதற்காகத்
தான் வந்திருக்கிறேன்  ;
நான் அதற்காகத்
தான் காத்திருக்கிறேன் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-03-2020
//////////////////////////////////////////
/////////////////////////////////////////////
அரவானை திருமணம்
செய்வதற்காக சென்ற
திருநங்கையின் படம்
தங்கள் பார்வைக்காக
///////////////////////////////////////////////// 



No comments:

Post a Comment