ஜபம்-பதிவு-433
(பரம்பொருள்-185)
கிருஷ்ணன் :
“வேறு என்ன
வேணும் அர்ஜுனா
! “
“தன்னுடைய
தலையை
வெட்டுவதற்கு
அரவானே ஒப்புதல்
அளித்து விட்டான்
“
“தன்னுடைய
தலையை
வெட்டச் சொல்லி
உன்னுடைய மகனே
உனக்கு ஒப்புதல்
அளித்து விட்டான்
“
“இதை விட
உனக்கு என்ன
வேணும் அர்ஜுனா
“
“இதற்கு மேல்
உனக்கு
என்ன தயக்கம்
அர்ஜுனா “
“வாளை எடு
அரவானின்
தலையை
வெட்டுவதற்கு
வாளை எடு “
(அர்ஜுனன் வாளை
எடுக்காமல்
தயங்கியபடியே
நின்று
கொண்டிருந்தான்
அர்ஜுனன் வாளை
எடுக்கவேயில்லை)
கிருஷ்ணன் :
“”என்ன ஆனது
அர்ஜுனா
என்ன தயக்கம்
என்ன யோசித்துக்
கொண்டிருக்கிறாய்
ஏன் வாளை
எடுக்க மாட்டேன்
என்கிறாய்
வாளை எடு அர்ஜுனா
வாளை எடு”
(அர்ஜுனன் வாளை
எடுக்கவில்லை)
அர்ஜுனன் :
“என்னால் வெட்ட
முடியாது “
“அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியாது
“
கிருஷ்ணன் :
“ஏன் வெட்ட
முடியாது “
“எதற்காக
வெட்ட முடியாது
“
“என்ன
காரணத்திற்காக
வெட்ட முடியாது
“
அர்ஜுனன் :
“அரவானின்
தலையை என்னால்
வெட்ட முடியாது
என்பதற்கு -
ஒரே
ஒரு காரணம்
தான் இருக்கிறது
“
கிருஷ்ணன் :
“அது என்ன காரணம்
“
அர்ஜுனன் :
“அரவான் என்னுடைய
மகன் என்பது
தான்
அந்த காரணமே
“
கிருஷ்ணன் :
“உன்னுடைய மகனை
களப்பலியாகக்
கொடுக்க நீ
தானே
ஒப்புதல் அளித்தாய்
;
அப்போது ஒப்புதல்
அளித்து விட்டு
இப்போது வந்து
ஏன் அரவானின்
தலையை
வெட்ட மாட்டேன்
என்று சொல்கிறாய்
;
நீ சொல்வதில்
ஏதேனும் நியாயம்
இருக்கிறதா
?”
அர்ஜுனன் :
“நியாயம் இருப்பதால்
தான் சொல்கிறேன்
அரவானின் தலையை
நான் வெட்ட
மாட்டேன் என்று
“
கிருஷ்ணன் :
“அப்படி என்ன
நியாயத்தை
வைத்திருக்கிறாய்
“
அர்ஜுனன் :
“அனைவரும் ஏற்றுக்
கொள்ளக்கூடிய
நியாயத்தைத்
தான்
நான் வைத்திருக்கிறேன்
“
“அன்றொரு நாள்
அப்போது அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க
நான் சம்மதித்தது
உண்மை தான்
;
அதைப்போல இன்று
இப்போது அரவானின்
தலையை வெட்ட
மாட்டேன் என்று
நான் சொல்வதும்
உண்மை தான்
;”
“உண்மையைத்
தான்
நான் சொன்னேன்
;
உண்மையைத் தவிர
நான் வேறு எதுவும்
சொல்லவில்லை
;”
“இந்த உலகத்தின்
நன்மைக்காக
நான்
என்னுடைய மகன்
அரவானைக்
களப்பலியாகக்
கொடுக்க சம்மதித்தது
உண்மைதான்
; “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
10-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment