ஜபம்-பதிவு-463
(பரம்பொருள்-215)
“அர்ஜுனன்
தனக்கு
எதிராக
சேனையில்
இருக்கின்ற
பாட்டன்
; ஆசிரியர்கள் ;
மாதுலர்கள்
; சதோரர்கள் ;
மைந்தர்கள்
;
மைந்தரின்
மைந்தர்கள் ;
மைத்துனர்கள்
; நண்பர்கள் ;
உறவினர்கள்
;
ஆகியோர்
போர்
புரிவதற்கு
தயாராக
நின்று
கொண்டிருப்பதைக்
கண்டான்
“
அர்ஜுனன்
:
“பரந்தாமா
! எனக்கு
எதிராக
நின்று
கொண்டிருக்கும்
உறவினர்களைக்
கண்டு
- என்னுடைய
அங்கங்கள்
நடுங்குகிறது ;
உடல்
தளர்வடைகிறது ;
மனம்
கலக்கமடைகிறது ;
என்னுடைய
தலை
சுற்றுகிறது
; “
“எதிரே
இருப்பவர்கள்
என்னுடைய
பகைவர்கள்
இல்லை ;
எதிரே
இருப்பவர்கள்
என்னுடைய
பாட்டனார்
;
என்னுடைய
குருநாதர்
;
என்னுடைய
பெரிய
தந்தையின்
புதல்வர்கள்
;
என்னுடைய
உறவினர்கள்
;
இவர்கள்
என்னைக்
கொல்ல
விரும்பினாலும்
நான்
அவர்களைக்
கொல்ல
மாட்டேன் “
“உறவினர்களைக்
கொல்வதன்
மூலம்
எனக்கு
கிடைக்கும்
வெற்றி
எனக்குத்
தேவையில்லை
;
அதனால்
கிடைக்கும்
நாடும்
எனக்குத்
தேவையில்லை
;
நாட்டை
ஆளவும் நான்
விரும்பவில்லை
;
என்று
சொல்லிக்
கொண்டே
அர்ஜுனன்
தன்னுடைய
காண்டீபத்தை
கீழே
வைத்து
விட்டான் “
“தன்னால்
போரிட
முடியாது
என்று
சொன்ன
அர்ஜுனனுக்கு
கிருஷ்ணன்
கீதையை
உபதேசம்
செய்தார் “
“கிருஷ்ணனின்
கீதை
உபதேசத்தைக்
கேட்ட
அர்ஜுனன்
காண்டீபத்தை
எடுத்துக்
கொண்டு
போரிடுவதற்கு
தயாரானான்
“
“கந்தர்வர்கள்
;
தேவர்கள்
;
பித்ருக்கள்
;
சித்த
சாரணர்கள் ;
முதலியோர்கள்
இந்திரனை
முன்னிட்டுக்
கொண்டு
அப்பெரிய
போரை
பார்க்க
விரும்பி
விண்ணிலே
கூடி
நின்றார்கள் “
“யார்
முதலில்
போரை
ஆரம்பிக்கப்
போகிறார்கள்
என்பதை
அனைவரும்
ஆவலுடன்
எதிர்பார்த்துக்
காத்துக்
கொண்டிருந்தார்கள்
“
“முதலில்
பாணத்தை
துச்சாதனன்
செலுத்தினான் “
“குருஷேத்திரப்
போர்
ஆரம்பமானது “
“யானை
யானையையும் ;
தேராளி
தேராளியையும் ;
குதிரை
வீரன்
குதிரை
வீரனையும் ;
காலாள்
காலாளையும் ;
எதிர்த்துப்
போரிட்டார்கள் “
“தந்தை
மகனை
மகன்
என்றும் பார்க்காமல்
மகனைக்
கொன்றான் ; “
“மகன்
தந்தையை
தந்தை
என்றும் பார்க்காமல்
தந்தையைக்
கொன்றான் “
“சகோதரன்
சகோதரனை
சகோதரன்
என்றும் பார்க்காமல்
சகோதரனைக்
கொன்றான் “
“நண்பன்
நண்பனை
நண்பன்
என்றும் பார்க்காமல்
நண்பனைக்
கொன்றான் “
“மாமன்
மருமகனை
மருமகன்
என்றும் பார்க்காமல்
மருமகனைக்
கொன்றான் “
“மருமகன்
மாமனை
மாமன்
என்றும் பார்க்காமல்
மாமனைக்
கொன்றான் “
“ஒருவருக்கொருவர்
பகை
கொண்டவர்கள்
போல்
வெறியுடன்
போரிட்டு
ஒருவரை
ஒருவர்
கொன்றார்கள் “
“குதிரை
வீரர்கள் பெரிய
பெரிய
ஈட்டிகளை
எறிந்து
போரிட்டார்கள் “
“கத்தி
; கடாரி ; ஈட்டி ;
சுரிகை
; கோடாலி ;
இரும்புலக்கை
;
கதை
; வளைதடி ;
சக்கரம்
; முதலிய
ஆயுதங்களைக்
கொண்டு
வீரர்கள்
போரிட்டார்கள் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
28-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment