அன்னையர்
தின வாழ்த்துக்கள்-
10-05-2020
!
பதிவு-1
அன்பிற்கினியவர்களே
!
“பட்டினத்தார் ஞானம்
பெற வேண்டி
அனைத்தையும்
துறந்து வீட்டை
விட்டு வெளியே
செல்லும் போது
தன் தாயிடம்
இருந்து விடை
பெறுகிறார்.”
தாயார் :
“மகனே
செல்ல
வேண்டும்
என்று
முடிவு
எடுத்து
விட்டாய் !
இனி
உன்னை
யாராலும்
தடுத்து
நிறுத்த
முடியாது ;
நானும்
உன்னை
தடுத்து
நிறுத்த
விரும்பவில்லை
;
எனக்காக
நீ ஒன்றே
ஒன்றை
மட்டும்
செய்ய
வேண்டும்”
பட்டினத்தார் :
“அனைத்தையும்
துறந்தவனிடம்
என்ன
எதிர்பார்க்கிறீர்கள்
தாயே”
தாயார் :
“எனக்கு
ஒரே
ஒரு
ஆசை தான்
உள்ளது
மகனே!
நான்
செத்தபிறகு நீ
வந்து
தான் எனக்கு
கொள்ளி
போட
வேண்டும்
கொள்ளி
போட
வருவாயா
மகனே”
பட்டினத்தார் :
“தாயே
! நான்
அனைத்தையும்
துறந்து
விட்டு
செல்கிறேன்
செல்வத்தை
மட்டுமல்ல
பாசத்தையும்
சேர்த்துத்தான்
துறந்து
விட்டு
செல்கிறேன்
தாய்
பாசம் மட்டும்
என்ன
அதற்கு
விதிவிலக்கா
தாய்
பாசத்தையும்
சேர்த்துத்
தானே
நான்
துறந்து விட்டு
செல்கிறேன்
- அப்படி
இருக்கும்
போது
நான்
எப்படி
உங்களுக்கு
கொள்ளி
வைக்க
வரமுடியும்”
தாயார் :
“மகனே!
இந்த
உலகில்
உள்ள
எந்த ஒரு
பாசத்தையும்
துறந்து
விடலாம்
ஆனால்
தாய்
பாசத்தை
மட்டும்
இந்த
உலகத்தில்
உள்ள
யாராலும்
துறக்க
முடியாது “
பட்டினத்தார்
:
“நீங்கள்
பேசும்
வார்த்தைகள்
சாதாரண
மக்களுக்கு
வேண்டுமானாலும்
பொருந்தலாம்
;
அனைத்தையும்
துறந்து
விட்டு
செல்லும்
எனக்கு
எப்படி
பொருந்தும் ; “
“அனைத்தையும்
துறந்தவனுக்கு
தாய்
என்ன ?
தந்தை
என்ன ?
மகன்
என்ன ?
எல்லாம்
ஒன்று தான்”
தாயார் :
“இப்பொழுது நான்
பேசும்
வார்த்தைகள்
எதுவும் உன்
காதுகளுக்கு
எட்டப்போவதில்லை.
அனுபவம் என்ற
ஒன்றை நீ பெறும்
போது தான்
நான் பேசிய
வார்த்தைகளில்
உள்ள அர்த்தம்
எல்லாம் உனக்கு
புரியவரும்
அது வரை
நான் பேசிய
வார்த்தைகளில் உள்ள
அர்த்தம் எதுவும்
உனக்கு புரியாது
இருந்தாலும் நான்
சொல்வதைக் கேள்
இந்த நாணயத்தை
நீ வைத்துக்
கொள்
தினமும் நீ அணியும்
ஆடையின் முனையில்
இதை முடி
போட்டு
வைத்துக் கொள்.”
“நான் இறந்தவுடன்
அந்த முடி
அவிழ்ந்து நாணயம்
கீழே விழுந்து
விடும்.
நான் இறந்து
விட்டேன் என்று
உனக்கு தெரிந்தவுடன்
நீ எங்கிருந்தாலும்
நான் இருக்கும்
இடம் தேடி
வந்து நீ எனக்கு
கொள்ளி வைக்க
வேண்டும்.- நீ
கொள்ளி வைத்தால்
தான் என்
ஆன்மா
சாந்தி அடையும்.”
பட்டினத்தார் :
“நீங்கள்
சொன்னவைகளை
என்னால் செயல்
படுத்த முடியாது
செயல்படுத்துவது
என்பது
இயலாத காரியம்
இருந்தாலும்
உங்களுடைய
வார்த்தைக்கு
மதிப்பு கொடுத்து
உங்களுக்காக அந்த
நாணயத்தை என்
துண்டின் ஓரத்தில்
கட்டி வைத்துக்
கொள்கிறேன்
என்று அந்த
நாணயத்தை
வாங்கிக் கொண்டார்
அதை அவர்
உடுத்தியிருந்த
உடையின் ஓரத்தில்
முடிச்சு போட்டு
வைத்துக் கொண்டார்”
----------என்றும்
அன்புடன்
---------K.பாலகங்காதரன்
--------10-05-2020
////////////////////////////////////////////
////////////////////////////////////////////
No comments:
Post a Comment