May 03, 2020

பரம்பொருள்-பதிவு-224


               ஜபம்-பதிவு-472
             (பரம்பொருள்-224)

“அந்த மனிதனுக்கு
பிறப்பு என்ற ஒன்று
ஏற்படுவது இல்லை  ;
அதனால் இறப்பு
என்பது அவருக்கு
கிடையாது ; “

“பிறப்பு
என்பது இல்லை
அதனால்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட
வாழ்க்கை
என்பது இல்லை
அதனால்
இறப்பு என்பது
ஏற்படுவதே இல்லை”

“பிறந்தால் தானே
இறப்பு என்பது உண்டு
பிறப்பு இல்லை
என்றால் இறப்பு
எப்படி நிகழும்”

“பிறப்பு
இறப்பு
பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடைப்பட்ட வாழ்க்கை
இந்த மூன்றில்
அடங்கியுள்ள
பிரபஞ்ச ரகசியத்தில்
தான் பிரம்ம ரகசியமே
அடங்கி உள்ளது”

“இந்த மூன்றில்
அடங்கியுள்ள
பிரபஞ்ச ரகசியத்தை
யார் ஒருவர்
அறிந்து கொள்கிறாரோ
அவரால் மட்டுமே
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்கான
வழிமுறைகளைக்
கண்டறிந்து
அதனைப் பின்பற்றி
செய்ய வேண்டிய
செயல்களைச் செய்து
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைய முடியும்”

“ஆனால் இந்த
உலகத்தில் பிறக்கும்
ஒவ்வொரு மனிதனும்
தாங்கள்
எதற்காக பிறக்கிறோம்
என்ன காரணத்திற்காக
இந்த உலகத்திற்கு
வந்தோம் - என்று
தங்களுடைய
பிறவியின் நோக்கம்
தெரியாமலேயே
அதை அறிந்து
கொள்ள முயற்சி
செய்யாமலேயே
இறந்து விடுகின்றனர்”

“இதனால் பிறவிகள்
பல தொடர்ச்சியாக
எடுத்து பிறவிச்
சுழலில் சிக்கி
பிறவிக் கடலில்
நீந்தி அவதியுறுகின்றனர்”

“ஆனால் அரவானாகிய
நீ களப்பலி
கொடுப்பதற்காகவே
பிறந்தாய் ;
களப்பலி
கொடுப்பதற்காகவே
வளர்ந்தாய் ;
பிறவியின்
நோக்கத்தை நீ
உணர்ந்த
காரணத்தினால்
உன்னையே நீ
களப்பலியாகக்
கொடுக்க தயாரானாய்  ;
களப்பலியாக
உன்னையே கொடுத்தாய் ; “

“உன்னுடைய
பிறவியின் நோக்கத்தை
உணர்ந்து அதைச்
செய்த காரணத்தினால்
இந்தப் பிறவியுடன்
உன்னுடைய
பிறவிச் சுழல்
முடிவடைந்து விட்டது ;
உன்னுடைய
பிறவித் தொடர்
அறுந்து விட்டது ;
பிறவிப் பெருங்கடலை
நீந்தி முடித்து விட்டாய் ; “

“நீண்ட காலமாக
பிறவி எடுத்து வந்த
உன்னுடைய ஆன்மா
தன்னுடைய
யாத்திரையை
முடித்து விட்டது  

“இனி அது
கடவுளுடன் இணைய
வேண்டியது தான்  

“உன்னுடைய ஆன்மா
கடவுளுடன் இணையும்
நேரம் வந்து விட்டது “

“உன்னுடைய ஆன்மா
கடவுளுடன் இணைந்து
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்குத்
தயாராகி விட்டது “

“உன்னுடைய ஆன்மா
எங்கிருந்து வந்ததோ
அங்கேயே சென்று
கலந்து அதுவாகவே
மாறுவதற்குத்
தயாராகி விட்டது “

“உன்னுடைய ஆன்மா
எங்கிருந்து வந்தது
என்று தெரியுமா ?
எங்கே போய்
முடியப் போகிறது
என்று தெரியுமா ?
உன்னுடைய
ஆன்மாவின்
ஆரம்பமும் முடிவும்
எது என்று
உனக்குத் தெரியுமா ? “

“அழிவற்ற ஒன்றுக்குள்
இருந்த
அழிவற்ற ஆன்மா
அழிவற்றதிலிருந்து
அழிவற்ற ஆன்மாவாக
பிரிந்த பின்னர்
அந்த
அழிவற்ற ஆன்மா
கர்மாவினால்
பிறவி பல எடுத்து
அல்லலுற்ற நிலையில்
அழிவற்ற ஆன்மா
தன்னுடைய
கர்மாவைக்
கழித்த பின்னர்
அழிவற்ற ஆன்மா
மீண்டும் எப்படி
அழிவற்றதுடன்
ஒன்றாக இணைந்து
அதுவாகவே
மாறுகிறது என்பது
உனக்குத் தெரியுமா?”

“தெரிந்து கொள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////


No comments:

Post a Comment