May 06, 2020

மகாபாரதப் போரை நிறுத்த வழி


“பாராளக் கன்னன்இகல்
பார்த்தனையும்
கொன்றுஅணங்கின்
காரார் குழல்களைந்து
காலில் தளைபூட்டி
நேராகக் கைப்பிடித்து
நின்னையும்யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம்
மாபார தம்என்றான்”

---------மகாபாரதம்
---------வில்லிபுத்தூரார்

பாடலுக்கு கதை
மூலம் விளக்கம்

(கிருஷ்ணன்
சகாதேவனிடம்
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன் :
“சகாதேவா!
குருஷேத்திரப் போரை
நிறுத்துவதற்கு ஏதேனும்
வழி இருக்கிறதா?”

சகாதேவன் :
“இருக்கிறது”

கிருஷ்ணன் :
“என்ன வழி?”

சகாதேவன் :
“நான்கு வழிகள்
இருக்கிறது
அந்த வழிகளை
செயல்படுத்தினால்
குருஷேத்திரப் போரை
நடக்க விடாமல் தடுத்து
நிறுத்தி விடலாம்”

கிருஷ்ணன் :
“என்ன வழிகள்
அவை “

சகாதேவன் :
ஒன்று :
“கர்ணனை மன்னனாக்கி
நாடாளச் செய்ய வேண்டும் “

இரண்டு :
“அர்ஜுனனைக் கொன்று
விட வேண்டும் “

மூன்று :
“திரௌபதியின் தலையை
மொட்டை அடித்து
விட வேண்டும் “

நான்கு :
“கிருஷ்ணனாகிய உங்களை
கயிற்றால் கட்டி ஒரே
இடத்தில் அசைய
விடாமல் இருக்கும்படி
செய்து விட வேண்டும்”

“இந்த நான்கும் நடந்தால்
குருஷேத்திரப் போரை
நடக்க விடாமல்
தடுத்து விடலாம்”

கிருஷ்ணன் :
“சகாதேவா! நீ சொல்லும்
இந்த நான்கு
வழிகளையும் செய்வது
என்பது இயலாத காரியம் “

சகாதேவன் :
“இல்லை பரந்தாமா !
முதல் மூன்று வழிகளை
செய்வது என்பது
வேண்டுமானாலும்
இயலாத காரியமாக
இருக்கலாம் - ஆனால்
நான்காவது வழியை
செய்யலாம்  

கிருஷ்ணன் :
“என்னை கயிற்றால்
கட்டும் செயலைச்
செய்ய முடியுமா?”

சகாதேவன் :
“செய்ய முடியும்
கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“எங்கே என்னைக்
கட்டு பார்க்கலாம்”

(என்று சொல்லிக் கொண்டே
கிருஷ்ணன் பதினாறாயிரம்
உருவெடுத்து இந்த உலகம்
முழுவதும் பரவி நின்று
காட்சி அளித்தார் )

கிருஷ்ணன் :
“இப்போது என்னை
கயிற்றால் கட்டு
பார்க்கலாம் “

சகாதேவன் :
“சகாதேவன் தியானம்
பண்ணுகிறவன் ;
சகாதேவன் சிரித்துக்
கொண்டே அமர்ந்தான் ;
தனியாக உட்கார்ந்து
கண்களை மூடி
கிருஷ்ணனை தன்னுடைய
உள்ளமாகிய கோயிலில்
வைத்து தியானித்தான் ;
சகாதேவனுடைய உள்ளமாகிய
கோயிலில் கிருஷ்ணன்
வந்து அமர்ந்தார் ;
சாகாதேவனுடைய
உள்ளமாகிய கோயிலில்
கிருஷ்ணன் வந்து
அமர்ந்த பிறகு
சகாதேவன் கிருஷ்ணனை
பக்தி என்ற கயிற்றால்
கட்டினான் ;
கிருஷ்ணன் சகாதேவனுடைய
உள்ளமாகிய கோயிலில்
மாட்டிக் கொண்டார் ;
அவரால் எங்கும்
அசைய முடியவில்லை ; “

கிருஷ்ணன் :
“சகாதேவா! நான் ஒப்புக்
கொள்கிறேன் - என்னை
பக்தி என்ற கயிற்றால்
கட்ட முடியும் என்பதை
ஒப்புக் கொள்கிறேன்  

(என்னை விடுவித்து விடு
என்று கிருஷ்ணன் கேட்டுக்
கொண்டதற்கிணங்க
சாகாதேவன் கிருஷ்ணனை
விடுவித்தான்)

கிருஷ்ணன் :
“பக்தி என்ற கயிற்றால்
என்னை கட்ட முடியும்
என்பதை உன்னுடைய
செயல் மூலம் நிரூபிக்க
முடிந்த உன்னால் மற்ற
மூன்று வழிகளையும்
செயல் படுத்துவதற்கு
வழி ஏதேனும் இருந்தால்
உன்னால் சொல்ல
முடியுமா ? “

சகாதேவன் :  
“முதல் மூன்று வழிகளை
செயல் படுத்துவதற்கு
எந்த வழியும் கிடையாது
பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
“அப்படி என்றால் “

சகாதேவன் :  
“குருஷேத்திரப் போர்
கண்டிப்பாக நடந்தே
ஆக வேண்டும்
அந்த போரை
யாராலும் தடுத்து நிறுத்த
முடியாது பரந்தாமா ! “

கிருஷ்ணன் :
நீ சோதிடத்தில்
சிறந்தவன் என்று தான்
இந்த உலகம் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறது
நீ பக்தியிலும் உயர்ந்தவன்
என்பதை உன்னுடைய
இந்த செயல் நிரூபித்து
விட்டது - உன்னுடைய
புகழ் என்றும் நிலைத்து
இருக்கும் சகாதேவா ! “

(என்று வாழ்த்தினார்
கிருஷ்ணன் ;
சகாதேவன் சொன்னது
போல் குருஷேத்திரப்
போரை யாராலும்
தடுத்து நிறுத்த
முடியவில்லை
18 நாள் குருஷேத்திரப்
போர் நடந்து முடிந்தது)

-------என்றும் அன்புடன்
-------K.பாலகங்காதரன்
-------06-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment