June 20, 2020

திருக்குறள்-வினைவலி-பதிவு-1


         திருக்குறள்-வினைவலி-பதிவு-1

வினைவலியும்
தன்வலியும்
மாற்றான் வலியும்
துணைவலியும்
தூக்கிச் செயல்”

------திருக்குறள்
-----திருவள்ளுவர்

“செய்யப்போகும்
செயலின் வலிமை
தன் வலிமை
எதிரானவர் வலிமை
துணை நிற்பவர்
வலிமை ஆகியவற்றை
எடைபோட்டே
ஒரு செயலைச்
செய்ய வேண்டும்
என்பதே இந்த
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து”

இந்தத் திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறும்
அர்த்தம் சொல்லலாம்

“செய்யப்போகும் செயல்
என்று எடுத்துக்
கொள்ளக்கூடாது  ;
பிரச்சினைக்குள்
இருக்கும் போது
என்று எடுத்துக்
கொள்ள வேண்டும் ;”

“நடக்கப்போகும் செயல்
என்று எடுத்துக்
கொள்ளக் கூடாது  ;
நடந்து கொண்டிருக்கும்
செயல் என்று எடுத்துக்
கொள்ள வேண்டும் ;”

“நாம் ஒரு
பிரச்சினைக்குள்
இருக்கும்
போது அந்த
பிரச்சினையால்
ஏற்பட்ட
காயத்தின் மூலம்
உண்டாகிய
வலியின் வேதனை
உடல் மனம்
இரண்டையும்
பாதித்து
துன்பத்தால்
நாம் துடித்துக்
கொண்டிருக்கும் போது
அந்த பிரச்சினையின்
வலிமையானது
எவ்வளவு
என்பதையும்  ;
அந்த பிரச்சினையை
உண்டு பண்ணியவர்
எவ்வளவு
வலிமையானவர்
என்பதையும் ;
முதலில் அறிந்து
கொள்ள வேண்டும்  ;”

“தன்னுடைய
வலிமையால்
பிரச்சினையை
உண்டு பண்ணியவரை
அழித்து
பிரச்சினையை
தீர்க்க முடியுமா
என்பதை முதலில்
பார்க்க வேண்டும்  ;
முடியாது என்று
தெரியவரும் போது
நமக்கு உண்மையாக
இருப்பவர் யார்
என்பதை அறிந்து
துணையாக
சேர்த்துக் கொண்டால் 
பிரச்சினையை
ஏற்படுத்தியவரை
அழித்து
பிரச்சினையைத்
தீர்க்க முடியும்
என்பதை அறிந்து
நமக்கு உண்மையாக
இருப்பவரை
துணையாக
சேர்த்துக் கொள்ள
வேண்டும் “

“இவ்வாறு செய்யும்
போது மட்டும்
தான் நமக்கு
பிரச்சினையை
உண்டு பண்ணியவரை
அழித்து
பிரச்சினையைத்
தீர்க்க முடியும் “

“இராமருடைய
மனைவியான
சீதையை
இராவணன்
கவர்ந்து
சென்று
விட்டான்”

“சீதையைத்
தேடி மீட்டு
வர வேண்டும்
என்று இராமர்
சென்று
கொண்டிருந்தார்”

“மனைவி எங்கு
இருக்கிறார்
எந்த இடத்தில்
இருக்கிறார்
என்பதைக்
கண்டறிந்து
சீதையை
மீட்டு வர
வேண்டிய  
மிகப்பெரிய
பிரச்சினையில்
இருந்தார்
இராமர்”

“இராமருடைய
இத்தகைய
பிரச்சினையைத் தான்
வினைவலிமை
என்கிறோம்”

“சீதையைக் கவர்ந்து
சென்றவன் இராவணன்
இவன் தான்
இராமருக்கு
பிரச்சினையை
ஏற்படுத்தியவன் “

“இராவணன்
கடல் கடந்து
சென்று சீதையை
இலங்கையில்
அசோகவனத்தில்
சிறை வைத்து
விட்டான் “

“இராவணனிடமிருந்து
சீதையை மீட்க
வேண்டுமானால்
கடல் கடந்து
செல்ல வேண்டும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment