June 20, 2020

திருக்குறள்-வினைவலி-பதிவு-4


       திருக்குறள்-வினைவலி-பதிவு-4

“இராமர்
தன் மேல்
உண்மையான
பக்தி கொண்டு
உண்மையான
பாசம் கொண்டு
உண்மையான
அன்பு கொண்டு
இருப்பவர்கள்
யார் என்பதை
அறிந்து கண்டு
அவர்களை
துணையாக
வைத்துக்
கொண்டால்
மட்டுமே
அவர்கள்
எந்த ஒரு
இக்கட்டான
சூழ்நிலையிலும்
தனக்கு உதவி
செய்வார்கள்  ;
பிரச்சினையைக்
கண்டு ஓடிப் போக
மாட்டார்கள்  ;
துன்பப்படும் போது
ஓடிப் போய்
ஒளிந்து கொள்ள
மாட்டார்கள் ;
தன்னுடன் கூட
இருப்பார்கள் ;
தன்னுடன் கூட
இருந்து
உயிரைக்
கொடுக்கக் கூடத்
தயங்க மாட்டார்கள்;
என்பதை உணர்ந்து
அத்தகையவர்களைத்
தான் இராமர்
தேர்ந்தெடுத்தார் ;
அத்தகையவர்கள்
தான் இராமருக்கு
துணையாக
இருந்தார்கள் ;
அவர்கள்
வாநர சேனைகள்
அதில் பலம்
பொருந்திய
சுக்ரீவன்
அனுமான்
ஜாம்பவான்
ஆகியோர்
அவருக்கு
துணையாக
இருந்தார்கள்”

“சீதையை மீட்டு
வரக்கூடிய
பிரச்சினை பெரியதாக
இருந்தபோதிலும்  ;
அந்த பிரச்சினையை
ஏற்படுத்திய
இராவணன் பலம்
பொருந்தியவனாக
இருந்தபோதிலும் ;
தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
வந்த வாநர
சேனைகளின்
துணையுடன்
இராமர்
இராவணனை வீழ்த்தி
சீதையை மீட்டார்”

“வினை வலிமை
என்றால்
பிரச்சினை
எவ்வளவு வலிமை
வாய்ந்ததாக
இருக்கிறது
என்பதைப்
பார்க்க வேண்டும்
என்று பொருள்”

“தன் வலிமை
என்றால்
தன்னுடைய
தனிப்பட்ட
வலிமையைப்
பயன்படுத்தி - அந்த
பிரச்சினையைத்
தீர்க்க முடியுமா
என்று பார்க்க
வேண்டும்
என்று பொருள்”

“மாற்றான் வலிமை
என்றால்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனுடைய
வலிமை எவ்வளவு
என்பதைப்
பார்க்க வேண்டும்
என்று பொருள்”

“துணை வலிமை
என்றால் யாரை
துணையாக
சேர்த்துக் கொண்டால்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனை
வீழ்த்தி
பிரச்சினையை
தீர்க்க முடியும்
என்பதை முடிவு
செய்ய வேண்டும்
என்று பொருள்”

“பிரச்சினை மற்றும்
பிரச்சினையை
உண்டாக்கியவனையும்
ஒன்றாகப்
பார்க்க வேண்டும்”

“தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
இருப்பவருடைய
வலிமையையும்
ஒன்றாகப்
பார்க்க வேண்டும்”

“பிரச்சினையின்
வலிமையை
முதலில் ஆராய்ந்து
பார்க்க வேண்டும் ;
பிரச்சினையை
ஏற்படுத்திய
எதிராளியின்
வலிமையை
பார்க்க வேண்டும் ;
தன்னால்
தனிப்பட்ட முறையில்
பிரச்சினையை
ஏற்படுத்தியவனை
வீழ்த்தி
பிரச்சினையை
தீர்க்க முடியுமா
என்று பார்க்க
வேண்டும் ;
முடியாது என்ற
சூழ்நிலை வரும்போது
நமக்காக உயிரைக்
கொடுக்கக் கூடியவரை
கண்டு பிடித்து
துணையாக்கிக்
கொள்ள வேண்டும்”

“அவ்வாறு
செய்யும் போது
தன்னுடைய
வலிமையையும்
தனக்கு துணையாக
இருப்பவருடைய
வலிமையயும்
பயன்படுத்தி
பிரச்சினையை
ஏற்படுத்தியவரை
அழித்து
பிரச்சினையைத்
தீர்க்க முடியும்
என்பதைத் தான்
திருவள்ளுவர்
வினைவலியும்
தன்வலியும்
மாற்றான் வலியும்
துணை வலியும்
தூக்கிச் செயல்
என்கிறார்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------20-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment