ஜபம்-பதிவு-522
(அறிய
வேண்டியவை-30)
(அபிமன்யுவின்
மனைவி
உத்தரைக்கு
முனிவர்
ஒருவர்
மாயக்கண்ணாடி
ஒன்றை
பரிசாக
அளித்திருந்தார்
;
அந்த
மாயக்கண்ணாடி
முன்பு
நின்று
கொண்டு
உத்தரை
பார்த்துக்
கொண்டிருந்தாள்;
அப்போது
அபிமன்யு
அங்கே
வருகிறான்)
அபிமன்யு
:
“உத்தரை
என்ன
செய்து
கொண்டிருக்கிறாய்?”
உத்தரை
:
“எனக்கு
முனிவர்
ஒருவர்
கண்ணாடி
ஒன்றை
பரிசாகக்
கொடுத்திருக்கிறார்
;
அதை
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
;”
அபிமன்யு
:
“உருவத்தைக்
காட்டும்
கண்ணாடி
தானே
நீ
மட்டுமல்ல
இந்த
உலகத்தில்
உள்ள
அனைவரும்
தங்களை
அனுதினமும்
கண்ணாடியில்
பார்த்துக்
கொண்டு
தானே
இருக்கிறார்கள்
”
“அதை
ஏன்
ஆச்சரியம்
கலந்த
மகிழ்ச்சியுடன்
பார்த்துக்
கொண்டிருக்கிறாய்”
உத்தரை
:
“இது
சாதாரண
கண்ணாடி
இல்லை
“
அபிமன்யு
:
“பிறகு”
உத்தரை
:
“இது
மாயக்கண்ணாடி”
அபிமன்யு
:
“என்னது
மாயக்கண்ணாடியா?”
உத்தரை
:
“ஆமாம்
மாயக்கண்ணாடியே
தான்
“
அபிமன்யு
:
“அப்படி
என்ன
சிறப்பு
இந்த
மாயக்கண்ணாடியில்
இருக்கிறது
“
உத்தரை :
“எந்தக்
கண்ணாடியிலும்
இல்லாத
சிறப்பு
இந்த
மாயக்
கண்ணாடியில்
இருக்கிறது
;
இது
உருவத்தைக்
காட்டும்
கண்ணாடி
அல்ல
மனதில்
உள்ளவரைக்
காட்டும்
கண்ணாடி”
அபிமன்யு
:
“இந்தக்
கண்ணாடி
மனதில்
உள்ளவரைக்
காட்டுமா
?
யாருடைய
மனதில்
உள்ளவரைக்
காட்டும்
? “
உத்தரை
:
“கண்ணாடி
முன்னால்
நிற்பவருடைய
மனதில்
உள்ளவரைக்
காட்டும்
“
அபிமன்யு
:
“புரியவில்லை”
உத்தரை :
“இந்த
மாயக்கண்ணாடி
தன்
முன்னால்
நிற்பவருடைய
உருவத்தைக்
காட்டாது
“
“யார்
இந்தக்
கண்ணாடி
முன்னால்
நிற்கிறாரோ
அவருடைய
மனதில்
யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவத்தைத்
தான்
காட்டும் “
அபிமன்யு
:
“வித்தியாசமாகத்
தான்
இருக்கிறது”
உத்தரை
:
“ஆமாம்
!
வித்தியாசமானது
தான்
“
அபிமன்யு
:
“மாயக்கண்ணாடி
முன்பு
நின்று
நீ
பார்த்தாயா?”
உத்தரை
:
“பார்த்தேன்”
அபிமன்யு
:
“யார்
தெரிந்தார்கள்
“
உத்தரை
:
“யார்
தெரிவார்கள்
என்று
நினைக்கிறீர்கள்
“
அபிமன்யு
:
“தெரியவில்லை”
உத்தரை
:
“ஆண்கள்
நடிப்பதில்
திறமைசாலிகள்
என்று
கேள்விப்
பட்டிருக்கிறேன்
;
அதை
உண்மை
என்று
நிரூபித்துக்
கொண்டு
இருக்கிறீர்கள்
;”
அபிமன்யு
:
“ஏன்
அவ்வாறு
சொல்கிறாய்?”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
22-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment