ஜபம்-பதிவு-524
(அறிய
வேண்டியவை-32)
உத்தரை
:
“நீங்கள்
விளையாடியது
போதும்
;
உங்கள்
மயக்கும்
மொழிகளுக்கு
நான்
ஏற்கனவே
மயங்கித்
தான்
கிடக்கிறேன்
;
மேலும்
என்னை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
மயக்கிக்
கொண்டு
இருக்காதீர்கள்
;”
“வார்த்தை
விளையாட்டு
போதும்
மாயக்
கண்ணாடி
முன்னால்
வந்து
நில்லுங்கள்
“
அபிமன்யு
:
“ஏன்
?”
உத்தரை
:
“உங்களுடைய
மனதில்
யார்
இருக்கிறார்கள்
என்று
நான்
தெரிந்து
கொள்ள
வேண்டாமா?”
அபிமன்யு:
“என்னுடைய
மனதில்
உன்னை
விட்டால்
வேறு
யார்
இருப்பார்கள்?”
“என்னுடைய
மனதில்
நீ
தான்
இருக்கிறாய்
என்று
உனக்கு
மட்டுமல்ல
இந்த
உலகத்திற்கே
தெரியுமே
“
“அதை
நான்
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து
நின்று
தான்
நிரூபிக்க
வேண்டுமா
?”
உத்தரை
:
“உங்களை
எதையும்
நான்
நிரூபிக்க
சொல்லவில்லை
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து
நில்லுங்கள்
என்று
தான்
சொல்கிறேன்
“
“உங்களுடைய
மனதில்
யார்
இருக்கிறார்
என்பதை
தெரிந்து
கொள்ள
ஆசைப்படுகிறேன்
அதனால்
தான்
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து
நிற்கச்
சொல்கிறேன்”
அபிமன்யு
:
“உன்னுடைய
விருப்பம்
அதுவானால்
அப்படியே
செய்கிறேன்”
(என்று
சொல்லி
விட்டு
அபிமன்யு
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து
நிற்கிறான்
கண்ணாடியில்
உத்தரை
தெரிகிறாள்)
அபிமன்யு
:
“நான்
சொல்வது
உண்மை
என்று
இப்போதாவது
தெரிந்து
கொண்டாயா
?”
“பெண்கள்
எப்போதும்
கணவன்
மேல்
சந்தேகம்
கொள்பவர்கள்
தான்
“
“உண்மை
எது
என்று
நிரூபிக்கும்
வரை
விட
மாட்டார்கள்”
உத்தரை
:
“ஆண்கள்
மட்டும்
என்ன
நியாயமானவர்களா
உண்மையை
மறைப்பதில்
கைதேர்ந்தவர்கள்”
(பஞ்ச
பாண்டவர்கள்
திரௌபதி
ஆகியோர்
வருகின்றனர்)
திரௌபதி
:
“என்ன
பிரச்சினை
உங்களுக்குள்
;
ஏன்
இருவரும்
சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்
“
உத்தரை
:
“யார்
மனதில்
யார்
இருக்கிறார்கள்
என்ற
பிரச்சினை தான்”
திரௌபதி
:
“அதற்காக
ஏன்
சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்
“
“அபிமன்யுவின்
மனதில்
உத்தரையும்
உத்தரையின்
மனதில்
அபிமன்யுவும்
தானே
இருப்பீர்கள்”
உத்தரை
:
“அதை
சோதித்துப்
பார்க்கும்
போது
தான்
எங்களுக்குள்
சண்டை
ஏற்பட்டது”
திரௌபதி
:
“சோதித்துப்
பார்த்தீர்களா
எப்படி
?”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
22-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment