March 03, 2021

BOOK FAIR STALL

 

அன்பிற்கினியவர்களே,


இந்தியாவின் மாபெரும்

இதிகாசங்களில் ஒன்றான

மகாபாரதக் கதையில்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இடையே நடைபெற்ற

18 நாள்

குருஷேத்திரப் போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெற வேண்டும்

என்பதற்காக

தன்னுடைய

தலையை தானே வெட்டி

காளிதேவிக்குப்

படைத்து

காளிதேவியின்

அருளைப் பெற்று

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெறக்

காரணமாக இருந்த

அரவானின்

வாழ்க்கை வரலாற்றை

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

நான் எழுதி

என்னுடைய முதல்

புத்தகமாக

10-01-2021-ம் தேதி

அன்று

வெளியிட்டேன்

 

அதனைத் தொடர்ந்து

24-02-2021 முதல்

09-03-2021 வரை

நடைபெறும்

44-வது புத்தகக் காட்சியில்

அரவான் களப்பலி

என்ற பெயர்ப் பலகை

கொண்ட

கடை எண்.471-ல்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

காட்சிப் படுத்தி

விற்பனைக்காக

வைத்து இருக்கிறேன்

 

பல்வேறு நிலையில்

உள்ளவர்களின்

அன்பையும்

பாராட்டையும்

வாழ்த்துக்களையும்

ஏற்கனவே பெற்ற

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

அரவான் களப்பலி

என்ற பெயர்ப்பலகை

கொண்ட

கடை எண்,471-ல்

வைத்த போது

அரவான் களப்பலி

என்ற

பெயர்ப்பலகையில்

ஏற்பட்ட பிழைகளை

சரி செய்தல்,

படங்களை ஓட்டுதல்

கடையை

அலங்கரித்தல்

என்று பல்வேறு

விஷயங்களை

பிழைகள் ஏதும்

ஏற்படாத  வகையில்

செயல்களைத்

தொடர்ந்து செய்து

கொண்டே

இருக்கிறோம்

 

ரசிகர்கள்

சமூக ஆர்வலர்கள்

விமர்சகர்கள்

எழுத்தாளர்கள்

பேச்சாளர்கள்

சமூக சேவகர்கள்

நண்பர்கள்

பொதுத் துறையில்

பணி செய்து

கொண்டிருப்பவர்கள்

பொதுத் துறையில்

உயர்ந்த பதவியில்

இருக்கும் அலுவலர்கள்

தனியார் துறையைச்

சார்ந்தவர்கள்

சுய தொழில்

செய்பவர்கள்

ஏழைகள்

எளியோர்

என்று பல்வேறு

தரப்பினர் என்னை

கடை எண்.471-ல்

சந்தித்து

அன்பையும்

பாராட்டுக்களையும்

வாழ்த்துக்களையும்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்திற்கு

அளித்தனர்

 

இந்த புகழ்ச்சியானது

என் உடல் மற்றும்

உயிரில் நீக்கமற

கலந்திருக்கும்

நான் படித்த

நான் நேசித்த

நான் சுவாசித்த

நான் உயிர்

வாழ்வதற்கு

காரணமாக இருக்கும்

என் தாய்த்

தமிழுக்கு

கிடைத்த

மிகப்பெரிய

மரியாதையாகவே

கருதி மிக

மகிழ்ச்சி

அடைந்தேன்

 

ஒவ்வொரு நாளும்

நிகழ்ந்த

நிகழ்வுகளின்

புகைப்படங்களை

உங்கள் பார்வைக்கு

சமர்ப்பிக்கிறேன்

 

இனிவரும்

காலங்களிலும்

கடை எண்,471-ல்

நடைபெறும்

நிகழ்வுகளின்

புகைப்படத்தின்

தொகுப்பினை

தங்கள் பார்வைக்கு

சமர்ப்பிப்பேன்

என்று தெரிவித்துக்

கொள்கிறேன்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

--------M.Ed., LLB

 

---------03-03-2021

/////////////////////////////////////////////////////

 



No comments:

Post a Comment