January 06, 2022

ஜபம்-பதிவு-678 (சாவேயில்லாத சிகண்டி-12)

 ஜபம்-பதிவு-678

(சாவேயில்லாத

சிகண்டி-12)

 

அமைச்சர்:

அஸ்தினாபுரத்துடன்

பகை வேண்டாம்

என்கிறேன்

 

காசி நாட்டு

மன்னன் :

அஸ்தினாபுரத்தில்

உள்ளவர்கள்

என்ன

நினைக்கிறார்கள்

 

அமைச்சர்:

அவர்களும்

பகை வேண்டாம்

என்று தான்

நினைக்கிறார்கள்

 

காசி நாட்டு

மன்னன் :

எப்படி சொல்கிறீர்கள்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லாததால்

அஸ்தினாபுரத்தில்

உள்ளவர்கள்

காசி நாட்டுக்கு

எதிராக எந்த ஒரு

விரும்பத்தகாத

செயலையும்

செய்யவில்லையே

அதை வைத்துத்

தான் சொல்கிறேன்

 

காசி நாட்டுக்கும்,

அஸ்தினாபுரத்திற்கும்

உள்ள

உறவு முறை

பகை என்ற

வாளால்

வெட்டப்பட

வேண்டாம் என்று

நினைக்கிறேன்

 

காசி நாட்டு

மன்னன் :

நானும்

அப்படித் தான்

நினைக்கிறேன்

 

அமைச்சர்:

என்னவென்று

 

காசி நாட்டு

மன்னன் :

அஸ்தினாபுரத்திற்கு 

அழைப்பிதழ்

அனுப்பவே

கூடாது என்று

 

அமைச்சர்:

இதனால்

ஏற்படக்கூடிய

பின்விளைவுகள்

 

காசி நாட்டு

மன்னன் :

என்னவென்று

எனக்கு தெரியும்

 

அமைச்சர்:

அத்தகைய

விரும்பத்தகாத

விளைவுகள்

ஏற்பட்டு

விடக்கூடாது

என்பதற்காகக்

கூறினேன்

 

காசி நாட்டு

மன்னன் :

என்னுடைய

மகள்களின்

திருமணத்தில்

அஸ்தினாபுரத்தைச்

சார்ந்தவர்கள் கலந்து

கொள்வதை நான்

விரும்பவில்லை

 

அதனால்

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

அனுப்பவும்

மாட்டேன்

 

அமைச்சர்:

முடிவை

மாற்றிக்

கொள்ளலாமே

 

காசி நாட்டு

மன்னன் :

மாற்றிக் கொண்டால்

 

அமைச்சர்:

நல்லது

 

காசி நாட்டு

மன்னன் :

யாருக்கு

 

அமைச்சர்:

மக்களுக்கு

நாட்டுக்கு

 

காசி நாட்டு

மன்னன் :

மாற்றிக் கொள்ளும்

எண்ணம் இல்லை

 

அமைச்சர்:

அமைச்சர் என்ற

முறையில்

என்னுடைய

கருத்தைச்

சொன்னேன்

 

உங்கள் விருப்பம்

எதுவோ

அதன்படியே

நடக்கட்டும்

 

காசி நாட்டு

மன்னன் :

நான் நினைப்பதை

நடத்திக்

கொண்டிருக்கிறேன்

வேறு ஏதேனும்

செய்தி உண்டா

 

அமைச்சர்:

இல்லை

 

காசி நாட்டு

மன்னன் :

என்னுடைய

மகள்களின் 

சுயம்வரத்தை

நடத்துவதற்குத்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்யுங்கள்

 

அமைச்சர்:

அப்படியே

ஆகட்டும்

 

(அந்த இடத்தை

விட்டு

அமைச்சர்

நகருகிறார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

 

No comments:

Post a Comment