December 04, 2022

ஜபம்-பதிவு-907 மரணமற்ற அஸ்வத்தாமன்-39 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-907

மரணமற்ற

அஸ்வத்தாமன்-39

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அரசின் ஒரு

முக்கிய அங்கமாக

என் அண்ணன்

திகழ்ந்து

கொண்டிருக்கிறார்

 

அஸ்தினாபுரத்தின்

தலைவிதியை

நிர்ணயிப்பதில்

என் அண்ணனுக்கு

முக்கிய பங்கு

இருக்கிறது

 

துரோணர் :

நீ சொல்வது

சரியானது தான்

கிருபர்

திறமைசாலி தான்

 

பீஷ்மர் விதுரர்

ஆகிய

இருவருக்கும்

சமாமானவர் தான்

 

இருவருடைய

திறமைக்கும்

குறைவில்லாதவர்

தான்

 

பீஷ்மருக்கும்

விதுரருக்கும்

இணையாக

அரசியல்

நடத்துவதில்

கிருபரும்

குறைந்தவரில்லை

தான்

 

கிருபர்

அஸ்தினாபுரத்தின்

உயர்ந்த பதவியில்

இருப்பதில்

வியப்பில்லை தான்

 

கிருபி :

என் அண்ணனிடமிருந்து

இன்னொரு செய்தியும்

வந்திருக்கிறது

 

துரோணர் :

என்ன செய்தி

 

கிருபி :

உங்களுடைய

தகுதிக்கும்

திறமைக்கும்

ஏற்ற வகையில்

அஸ்தினாபுரத்தில்

ஒரு வேலை

வைத்திருக்கிறார்

 

அந்த வேலையை

நீங்கள் ஏற்றுக்

கொண்டு செய்ய

வேண்டும் என்று

சொல்லியிருக்கிறார்

 

அதற்காக நம்

அனைவரையும்

அஸ்தினாபுரம்

வரச் சொல்லி

இருக்கிறார்

 

துரோணர் :

அப்படி என்ன

வேலை எனக்காக

வைத்திருக்கிறார்

 

கிருபி :

உங்களுக்கு ஏற்ற

வேலை தான்

உங்களால் செய்ய

முடிந்த

வேலை தான்

நீங்கள்

செய்யக் கூடிய

வேலை தான்

 

குருவாக இருந்து

கல்வி கற்றுக்

கொடுக்கும்

வேலை

 

துரோணர் :

யாருக்கு

 

கிருபி :

குந்தியின்

மூன்று மகன்கள்

மாத்ரியின்

இரண்டு மகன்கள்

கௌரவர்கள்

நூறு பேருக்கும்

கல்வி கற்றுக்

கொடுக்க வேண்டும்

 

துரோணர் :

ஏன் குந்தியின்

மூன்று மகன்கள்

மாத்ரியின்

இரண்டு மகன்கள்

என்று சொல்கிறாய்

 

அவர்களை

பாண்டவர்கள்

என்று சொல்ல

வேண்டியது தானே

 

பாண்டுவின்

மகன்கள் என்று

சொல்ல

வேண்டியது

தானே

 

இந்த உலகம்

அவர்களை

பாண்டவர்கள்

என்று தானே

அழைக்கிறது

 

கிருபி :

பாண்டுவால்

குழந்தை பெற்றுக்

கொள்ள முடியாது

 

அதனால் குந்தி

எமதர்மனுடன்

உடலுறவு கொண்டு

யுதிஷ்டிரனையும்

வாயு பகவானுடன்

உடலுறவு கொண்டு

பீமனையும்,

இந்திரனுடன்

உடலுறவு கொண்டு

அர்ச்சுனனையும்

பெற்றுக்

கொண்டாள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

 

No comments:

Post a Comment